வாயு நிலைமை மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு விலகலடைகின்றன. கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது?எவை

  (a)

  அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.

  (b)

  அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.

  (c)

  அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.

  (d)

  அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.

 2. ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

  (a)

  1/3

  (b)

  1/2

  (c)

  2/3

  (d)

  1/3 x 273 x 298

 3. வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது 

  (a)

  பாயிலின் விதி

  (b)

  நியூட்டனின் விதி 

  (c)

  கெல்வினின் விதி

  (d)

  பிரௌனின் விதி

 4. ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை 

  (a)

  லிண்டே முறை 

  (b)

  ஜூல் -தாம்சன் விளைவு 

  (c)

  கிளாட் முறை 

  (d)

  கார்னாட் முறை 

 5. ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது 

  (a)

  வெப்பமடைகிறது 

  (b)

  குளிர்ச்சியடைகிறது 

  (c)

  வெடிக்கிறது 

  (d)

  a & b 

 6. A ) நல்லியல்பு வாயுப் பண்பு  1)குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை 
  B ) வெப்ப மாறா செயல்முறையில் 
  காந்த தன்மையை இழத்தல் 
  2) திரவ ஹீலியம் 
  C )31.1 °C ல் CO2    3) நிலைமாறு வெப்பநிலை
  D ) ஜூல் தாம்சன் சோதனை    4) திரவ அக்ஸிஜன்
  (a)

  A-1 B-2 C-3 D-4

  (b)

  A-2 B-3 C-1 D-4

  (c)

  A-4 B-3 C-2 D-1

  (d)

  A-1 B-2 C-4 D-3

 7. ஒரு வாயுவை மாறாத வெப்பநிலையில் விரிவடையச் செய்யும்போது 

  (a)

  வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைகிறது 

  (b)

  வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைகிறது 

  (c)

  வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது 

  (d)

  வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மாறாமல் இருக்கும் 

 8. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது 

  (a)

  ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும் 

  (b)

  ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது  

  (c)

  குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும் 

  (d)

  குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும் 

 9. மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

  (a)

  p மற்றும் \(\frac { 1 }{ v } \)

  (b)

  pv  மற்றும் v 

  (c)

  p  மற்றும் v 

  (d)

  v  மற்றும் \(\frac { 1 }{ p } \)

 10. 227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன?(R = 0.082 L atom k-1 mol-1)

  (a)

  3.12 g/L

  (b)

  3.41 g/L

  (c)

  2.81 g/L

  (d)

  இவை எதுவுமில்லை 

 11. 5 x 2 = 10
 12. கேலூசாக் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரு மாத்திரைகளின் பெயர்களைத் தந்து விளக்குக. 

 13. ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக

 14. காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெப்பப்படுத்துவத்தைப் பற்றிய தெளிவான எச்சரிக்கை கொண்டிருக்கும் ஏன்?

 15. அம்மோனியா HCl உடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்ணிற புகையான NH4Cl ஐ தருகிறது.புகை HCl க்கு அருகில் தோன்றுவது ஏன்?

 16. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

 17. 5 x 3 = 15
 18. வாயுக்கள் பற்றிய கீழ்கண்ட உண்மைகளுக்கு சரியான விளக்கம் தருக
  அ) வாயுக்கள் கலனின் அடிப்பரப்பில் தங்குவதில்லை 
  ஆ) வாயுக்கள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளியில் பரவுகின்றன

 19. 2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)

 20. ஒரு வாயு 192 நொடியில் சுவரிலுள்ள ஒரு துளையின் வழியே விரைவுகின்றது. N2 வாயு அதே வெப்ப அழுத்த நிலையில் விரவ எடுக்கும் நேரம் 84 நொடி எனில் வாயுவின் மோலார் நிறை என்ன?

 21. வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.

 22. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?

 23. 3 x 5 = 15
 24. கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
  அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும் 
  ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
  இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் கோடையில் குளிர்காலத்தை விட காற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
  ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும். 

 25. ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 6°C மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 25°C மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது. அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனஅளவினை கண்டறிக.

 26. 300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் Unit 6 வாயு நிலைமை மாதிரி வினாத்தாள் ( Tamil Nadu 11th Std Chemistry Lesson 6 Model Question Paper )

Write your Comment