11th Chemistry Important 2 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல் தொகுதிI

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    குறுகிய விடைத் தருக:

    15 x 2 = 30
  1. STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

  2. மோல் - வரையறு 

  3. கிராம் சமான நிறை வரையறு.

  4. 5400Å பச்சை நிற ஒளியின் அலை நீளத்திற்கு சமமான டிபிராக்ளி அலைநீளத்தினைப் பெற 54g டென்னிஸ் பந்து எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும்?

  5. ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

  6. அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானது? ஏன்?
    "ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவையான ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்"

  7. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் ஏன் ஹேலஜன்களுடன் வைக்கப்படவில்லை?

  8. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.

  9. தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு

  10. பாலைவன ரோஜா என்பது எது?ஏன்?

  11. காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெப்பப்படுத்துவத்தைப் பற்றிய தெளிவான எச்சரிக்கை கொண்டிருக்கும் ஏன்?

  12. அமுக்கத்திறன் காரணி வரையறு. 

  13. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  14. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் கெல்வின்-பிளாங்க் கூற்றை கூறுக.

  15. கீழ்க்காணும் அமைப்புகளுக்கு என்ட்ரோபி மாற்றம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
    1.வெப்பநிலை மாறா மற்றும் அழுத்தம் மாறா செயல்முறை 
    2.வெப்பநிலை மாறா மற்றும் கனஅளவு மாறா செயல்முறை 

  16. விடைத் தருக.

    15 x 3 = 45
  17. பின்வரும் வினைக்கலவைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் வினை x + y + z2 → xyz2 இல் கட்டுப்படுத்தும் காரணிகளைக் காண்க.
    அ. 200 x அணுக்கள் + 200 y அணுக்கள் + 50 Z2 மூலக்கூறுகள்
    ஆ. 1 மோல் x + 1 மோல்கள் y + 3 மோல்கள் Z2
    இ. 50 x அணுக்கள் + 25 y அணுக்கள் + 50 Z2 மூலக்கூறுகள்
    ஈ. 2.5 மோல்கள் x + 5 மோல்கள் y + 5 மோல்கள் Z2

  18. இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

  19. Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.

  20. பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
    [அ] 

         

    [ஆ] 

         

    [இ]

         

    [ஈ]

         

    இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.

  21. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

  22. இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.

  23. "தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.

  24. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
    (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
    (i) KMnO4 + H2O2
    (ii) CrCl3 + H2O →
    (iii) CaO + H2O →

  25. டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக

  26. நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?

  27. கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.

  28. ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 60 மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 250சி மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனளவினை கண்டறிக.

  29. வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.

  30. சயனமைடை  (NH2CN) பாம் கலோரி மீட்டரில், அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி எரிக்கும்போது ஏற்படும் \(\triangle U \) மதிப்பு -742.4 KJ mol -1 ,என கண்டறியப்பட்டது 298K வெப்பநிலையில் பின்வரும் வினையின் என்தால்பி மாற்றத்தை கணக்கிடுக.
    \(NH_2CN(S)+\frac{3}{2}O_2(g)\rightarrow N_2(g)+CO_2(g)+H_2O(I)\triangle H=?\)

  31. வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry Important 2 mark Questions )

Write your Comment