+1 Chemistry Pre-Unit Test Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல் தொகுதிII

Time : 02:00:00 Hrs
Total Marks : 95

    குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. வினைகுணகத்தின் எண்மதிப்பு சமநிலைமாறிலியின் எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால், வினையானது சமநிலையை அடைய எந்த திசையினை நோக்கி நகரும்?

  2. KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.

  3. \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

  4. \({ N }_{ 2 }{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\) என்ற வினைக்கு 373K  ல், KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0125 mol dm-3 மற்றும் 0.5  mol dm-3 என கண்டறியபட்டது. எனில் வினைநிகழும் திசையை கண்டறி.

  5. CH4, NH3 மற்றும் H2O, ஆகியவற்றிலுள்ளமைய அணுக்கள் sp3 இனக்கலப்பிற்கு உட்பட்டுள்ளன. எனினும் அவற்றின் பிணைப்புக் கோணங்கள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

  6. முனைவுற்ற சகப்பிணைப்பு என்றால் என்ன?எடுத்துக்காட்டுடன் விவரி.

  7. ஒற்றை எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகளை நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடின் லூயிஸ் வடிவமைப்பை எழுதுக.

  8. பின்வரும் கரிமச்சேர்ம வகைகளின் பொதுவான வாய்ப்பாட்டினைத் தருக.
    (அ) அலிபாடிக் மோனோ ஹைட்ரிக் ஆல்கஹால்
    (ஆ) அலிபாடிக் கீட்டோன்கள்
    (இ) அலிபாடிக் அமீன்கள்.

  9. லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.

  10. சுருக்கப்பட்ட வாய்பாடு என்றால் என்ன?

  11. பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக
    (அ) உடனிசைவு
    (ஆ) பிணைப்பில்லா உடனிசைவு

  12. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

  13. பின்வரும் ஆல்கேன்களுக்கு வடிவமைப்பை எழுதுக
    1) 2, 3 – டைமெத்தில் – 6 – (2 –மெத்தில் புரப்பைல்) டெக்கேன்
    2) 5 – (2 –எத்தில் பியூட்டைல் ) – 3, 3 – டைமெத்தில் டெக்கேன்
    3) 5 – (1, 2 –டைமெத்தில் புரப்பைல்) – 2 –மெத்தில் நானேன்

  14. கோல்பின் மின்னாற் பகுப்பு முறையை எழுது.    

  15. உர்ட்ஸ் வினையை எழுது.    

  16. ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக

  17. R-Xன் பிணைப்பு ஆற்றலின் ஏறுவரிசையில் பின்வரும் ஆல்கைல் ஹாலைடுகளை எழுதுக.
    CH3Br, CH3F, CH3Cl, CH3I

  18. கிரிக்னார்டு வினைப்பொருடன் நீரின் வினையை எழுதுக.

  19. சான்ட்மேயர் வினையை எழுதுக. 

  20. புமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?

  21. துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.

  22. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி

  23. 400K வெப்பநிலையில் 1.5 கிராம் நிறையுடைய பெயர் அறியா பொருளானது, கரைப்பானில் கரைக்கப்படுகிறது. மேலும் இந்த கரைசலானது 1.5 லி க்கு நீர்க்கப்படுகிறது. இதன் சவ்வூடுபரவல் அழுத்தம் 0.3 bar என கண்டறியப்பட்டுள்ளது. புதிய பொருளின் மோலார் நிறையை கணக்கிடுக.

  24. 50 ml குழாய் நீரானது 20 mg கரைக்கப்பட்ட திண்மங்களை கொண்டுள்ளது. ppm இல் TDS [கரைந்துள்ள மொத்த திடப்பொருள்] மதிப்பு காண்.

  25. கொதிநிலை என்றால் என்ன?

  26. விடைத் தருக:

    15 x 3 = 45
  27. NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8x10-2M, 1.2x10-2M மற்றும் 3x10-2M. N2 மற்றும் H2விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.

  28. சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?

  29. பின்வரும் வினையினைக் கருதுக.
    \(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
    Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக. 

  30. முறைசார் மின்சுமையினை கொண்டு லூயிஸ் அமைப்பில் சிறந்த வடிவமைப்பை குறிக்கும் வடிவத்தினை தெரிவு செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  31. 0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)

  32. பின்வரும் கரிமச் சேர்மம் வகைகளுக்கு ஒவ்வொன்றிற்கும் இரு எ.கா.தருக.
    i. பென்சீன் வளைய அமைப்பை பெற்றிருக்காத அரோமேட்டிக் சேர்மம்.
    ii.அரோமேட்டிக் பல் இன வளையச்சேர்மம்
    iii. அலிசைக்ளிக் மற்றும் அலிபாட்டிக் திறந்த அமைப்புடையவை. 

  33. புரப்பீனின் ஓசோனேற்ற வினையை எழுதுக        

  34. C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
     

  35. பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
    (i) எத்திலின் குளோரைடு 
    (ii) எத்திலிடின் டைகுளோரைடு 

  36. கார்பன்டையாக்சைடு எவ்வாறு உருவாகிறது? அதன் தீய விளைவுகள் யாவை?

  37. வேதி நேர் மாசுபடுதிகளின் தீய விளைவுகள் படியிலிடு.

  38. ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1

  39. தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
    (அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
    (b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.

  40. கொதிநிலை ஏற்றம் என்றால் என்ன?

  41. சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.       

*****************************************

Reviews & Comments about +1 வேதியியல் மாதிரி அலகுத் தேர்வு வினாத்தாள் ( +1 Chemistry Pre-Unit Test Question Paper )

Write your Comment