All Chapter 1 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 22
    Choose The Correct Answer:
    22 x 1 = 22
  1. 0ε0)-1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

    (a)

    நீளம்

    (b)

    காலம்

    (c)

    திசைவேகம்

    (d)

    விசை

  2. ஒரு நொடி வில்லின் கோணம் ______

    (a)

    48.5x10-6 ரேடியன் 

    (b)

    0.485x10-5 ரேடியன் 

    (c)

    4.85x10-6 ரேடியன் 

    (d)

    48500x10-6 ரேடியன் 

  3. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  4. ஒரு எறிபொருளின் கிடைத்தள வீச்சு கோணம் 15o 50m ல் நிலையாக உள்ளது. கோணம் 45o ல் அதே வேகத்தில் அதன் வீச்சு _____ 

    (a)

    125m

    (b)

    75m

    (c)

    100m

    (d)

    150m

  5. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  6. V1 திசைவேகத்தில் இயங்கும் m நிறையுடைய துகள் ஒன்றின் திசைவேகம் V2 என மாறுவதற்கு கொடுக்கப்பட வேண்டிய  விசையின் தாக்கம்______ 

    (a)

    m(v2-v1)

    (b)

    1/2 m(v22-v12)

    (c)

    m(v1+v2)

    (d)

    m(v2-v1)

  7. ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம், 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு _______.

    (a)

    0.1%

    (b)

    0.2%

    (c)

    0.4%

    (d)

    0.01%

  8. ஒரு பொருளின் மீது புவியீர்ப்பு விசையால், எதிர் வேலை செய்யப்பட்டுள்ளது எனில், அதன்

    (a)

    நிலை ஆற்றல் அதிகரிக்கும்

    (b)

    இயக்க ஆற்றல் குறையும்

    (c)

    நிலை ஆற்றல் மாறாது

    (d)

    நிலை ஆற்றல் குறையும்

  9. துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம் ______.

    (a)

    சுழி

    (b)

    x ஐப் பொருத்து அதிகரிக்கிறது

    (c)

    x ஐப் பொருத்து குறைகிறது

    (d)

    மாறாதது

  10. வட்ட வடிவ வட்டிற்கும் வட வளையத்திற்குமான சுழற்சி ஆரத்தின் விகிதம் யாது? [அதன் அச்சை பற்றிய ஒவ்வொன்றின் நிறையும் ஆரமும் சமம்]

    (a)

    √3:√2

    (b)

    1:√2

    (c)

    √2:1

    (d)

    √62:√3

  11. புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் _____.

    (a)

    நிலை ஆற்றலுக்குச் சமம் 

    (b)

    நிலை ஆற்றலைவிடக் குறைவு 

    (c)

    நிலை ஆற்றலை விட அதிகம் 

    (d)

    சுழி 

  12. புவியின் ஆரம் 6400 km மற்றும் செவ்வாயின் ஆரம் 3200 km. புவியின் நிறையானது செவ்வாயின் நிறையைப் போல் 10 மடங்கு. ஒரு பொருளின் எடை 200 N பூமியின் பரப்பில் உள்ளபோது, செவ்வாயின் பரப்பின் மீது.

    (a)

    40 N

    (b)

    2 N

    (c)

    88 N

    (d)

    80 N

  13. கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குணகம்  _____.

    (a)

    மாறாது 

    (b)

    குறையும் 

    (c)

    அதிக அளவு உயரும் 

    (d)

    மிகக் குறைவான அளவு உயரும்  

  14. திரவத்தின் முற்று திசைவேகம் 

    (a)

    ஆரம் குறையும் போது, குறையும் 

    (b)

    ஆரம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும் 

    (c)

    அடர்த்தி அதிகரிக்கும் போது குறையும் 

    (d)

    அடர்த்தி உயரும் போது உயரும் 

  15. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?

    (a)

    Q, T, W

    (b)

    P, T, U

    (c)

    Q, W

    (d)

    P, T, Q

  16. ஓரிரு வெப்ப இயக்க அமைப்பியல் மூலக்கூறுகளின் இயக்க மற்றும் நிலை ஆற்றல்களின் கூடுதல் ________

    (a)

    நிலை ஆற்றல்

    (b)

    மீட்சி ஆற்றல்

    (c)

    அக ஆற்றல்

    (d)

    வெளிப்புற ஆற்றல்

  17. வாயு ஒன்றின் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை இருமடங்காக்கும்போது, அவ்வாயு மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைந்ததூரம் எவ்வாறு மாறுபடும்?

    (a)

    மாறாது

    (b)

    இருமடங்காகும்

    (c)

    மும்மடங்காகும்

    (d)

    நன்கு மடங்காகும்

  18. சராசரி மோதலிடைத் தூரம் _______ க்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

    (a)

    அழுத்தம்

    (b)

    மூலக்கூறின் அளவு

    (c)

    வெப்பநிலை 

    (d)

    திசைவேகம்

  19. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?

    (a)

    \({d^2y\over dt^2}+y=0\)

    (b)

    \({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)

    (c)

    \({d^2y\over dt^2}+k^2y=0\)

    (d)

    \({dy\over dt^2}+y=0\)

  20. y-அச்சின் வழியே ஒரு துகள் மேற்கொள்ளும் தனிசீரிசை இயக்கத்தின் சமன்பாடு y=A sin(ωt)+B, வீச்சு

    (a)

    A

    (b)

    B

    (c)

    A + B 

    (d)

    \(\sqrt { A+B } \).

  21. ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம் _______.

    (a)

    1.5m

    (b)

    0.5m

    (c)

    1.0m

    (d)

    2.0m

  22. அலை எண் k = ______

    (a)

    \(\frac { 1 }{ \lambda } \)

    (b)

    \(\frac { 2\pi }{ T } \)

    (c)

    \(\frac { 2\pi }{ \lambda } \)

    (d)

    \(\frac { \lambda }{ 2\pi } \)

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment