All Chapter 3 Chapters

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 130
  Answer All The Following Question:
  44 x 3 = 132
 1. தொழில் நுட்பவியல் என்பது யாது? இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

 2. AU, ஒளி ஆண்டு மற்றும் பர்செக் இவற்றில் பெரிய அளவு எது? வரிசைப்படுத்து. சூரியனிலிருந்து புவியின் சராசரித் தொலைவினை (i) ஒளி ஆண்டு (ii)பர்செக் இவற்றில் குறிப்பிடு.

 3. முக்கிய எண்ணுருக்கள் அடிப்படையில்  பின்வருவனவற்றைத் தீர்க்க
  அ) \(\sqrt { 4.5-3.31 } \)
  ஆ) (5.9 \(\times\) 105) - (2.3 \(\times\) 104)
  இ) 7.18 + 4.3
  ஈ) 6.5 + .0136

 4. ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தின் ஆரம்ப மற்றும் இறுதி வெப்பநிலைகள்
  முறையே 75.4 \(\pm \) 0.5°C மற்றும் 56.8 \(\pm \) 0.2°C எனில் திரவத்தின் வெப்பநிலைத் தாழ்வைக் கணக்கிடுக.

 5. இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளனவா என எவ்வாறு கண்டறிவாய்?

 6. இடப்பெயர்ச்சி மற்றும் கடந்தத் தொலைவை வரையறு.

 7. வேகம், திசைவேகம் -வேறுபடுத்துக.

 8. அனைத்து கோள்களும் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னாள் சூரியனிலிருந்து வெளியே எறியப்பட்ட தீ பந்துகளே. தற்போது தீப்பந்துகள் திண்மப்பரப்பை அடைந்துள்ளன. ஆனால் உட்பகுதி (inner core) இன்னும் வெப்பமாக உள்ளது. எட்டு கோள்களின் நெப்டியூன் சூரியகுடும்பத்தில் கடைசி கொள். எனில், நெப்டியூன் சூரியனிலிருந்து எந்த கோலத்தில் எறியப்பட்டிருக்க வேண்டும்?

 9. புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரணடடாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளைஆராய்க.

 10. போலி விசை என்றால் என்ன?

 11. பொருளின் மீது செயல்படும் விசை அப்பொருளின் திசைவேகத்தை எவ்வழிகளில் மாற்றியமைக்கும்? 

 12. புவியின் சுழற்சியால் ஏற்படும் மையவிலக்கு விசை மனிதர்களின் மீது தாக்கத்தை எவ்வாறு தோற்றுவிக்கிறது?  

 13. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g=10 m s-2) எனில்
  a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
  b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
  c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
  d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

 14. படத்தில் காட்டியுள்ளவாறு 100 kg நிறையுள்ள ஒரு பொருள் தரையிலிருந்து 10 m உயரத்திற்கு இரு மாறுபட்ட வழிகளில் தூக்கப்படுகிறது. இரு நேர்வுகளிலும்  புவியீர்ப்பால் செய்யப்பட்ட வேலை என்ன? சாய்தளத்தின் வழியாக பொருளை எடுத்துச் செல்வது எளிதாக உள்ளது ஏன்?

 15. ஆற்றல் மாற்றும் விசையினை விவரி.

 16. முழு மீட்சியற்ற மோதலில் ஏற்படும் இயக்க ஆற்றல் உழைப்பினை சமன்பாட்டுடன் விவரி.

 17. ஸ்பேனரின் கைப்பிடிக்கு செங்குத்தாக படத்தில் காட்டியுள்ளவாறு விசை செலுத்தப்படுகிறது.
  (i) திருகு மறை (Nut) யின் மையத்தைப் பொருத்து விசையின் திருப்பு விசை (ii) திருப்பு விசையின் திசை மற்றும் (iii) திருகு மறையைப் (Nut) பொருத்து திருப்பு விசை ஏற்படுத்தும் சுழற்சியின் வகை ஆகியவற்றைக் காண்க.

 18. 20 m s-1 என்ற திசை வேகத்துடன் வட்டப்பாதையில் மிதிவண்டி ஒட்டுபவர் செங்குத்து தளத்துடன் 30° கோணம் சாய்ந்த நிலையில் கடக்கிறார். வட்டப்பாதையின் ஆரம் என்ன?
  ( g = 10 m s-2 எனக் கொள்க).

 19. திருப்பு விசையின் திறன் என்றால் என்ன?

 20. ஒரு திட உருளையின் நிறம் 20kg. 100 rod/s  கோண வேகத்துடன் அதன் அச்சைப்பற்றி சுழல்கிறது. உருளையின் ஆரம் 0.25m. உருளையின் சுழற்சி சார்ந்த இயக்க ஆற்றல் யாது? அதன் அச்சைப் பற்றிய கோண உந்தத்தின் அளவு யாது?

 21. "கோடை காலமும் குளிர் காலமும் புவியில் ஏற்படுவது எவ்வாறு" என்ற வினாவுக்கு மாணவர் ஒருவர் புவி நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, புவி சூரியனுக்கு அருகே வரும்போது (அண்மை நிலை) கோடை காலமும் சூரியனை விட்டு விலகி அதிகத் தொலைவில் உள்ளபோது (சேய்மைநிலை) குளிர் காலமும் தோன்றுகிறது என பதில் அளிக்கிறார். மாணவரின் பதில் சரியா? இல்லை எனில் கோடையும் குளிர் களமும் தோன்றும் காரணத்தை விளக்குக. 

 22. 2018 ஜனவரி 31 தேதி நடைபெற்ற சந்திர கிரகணத்தின் வெவ்வேறு நிலைகளை புகைப்படம் காட்டுகின்றது. இப்புகைப்படத்தின் அடிப்படையில் புவி கோள வடிவமுடையது என நிரூபிக்க முடியுமா?

 23. இலேசான கோள் ஒன்று, ஒரு திரளான விண்மீனை வட்டப் பாதையில் சுற்றி வருவதாகக் கொண்டால் அதன் ஆரம் r, சுற்றுக் காலம் T என்க. கோளுக்கும், விண்மீனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை r-3/2 க்கு நேர்விகிதத்தில் இருக்குமானால் T மற்றும் r க்கு இடையேயான தொடர்பு யாது?

 24. சூரியனிலிருந்து புதன் மற்றும் வெள்ளியில் தொலைவு கண்றியப்பட்ட விதத்தை விவரி. 

 25. ஒரு திண்மக்கோளம் 1.5 cm ஆரமும் 0.038kg  நிறையும் கொண்டுள்ளது. திண்மக் கோளத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக. 

 26. 2.5×10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25×10-3m தடிமனான விளக்கெண்ணெய் ஏட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3×10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக.
  கொடுக்கப்பட்டவை:
  A=2.5x 10-4m2,dx=0.25x 10-3m,
  F=2.5N and dv 3x10-2ms-1

 27. இந்தியப் பெருங்கடலின் சராசரி ஆழம்  பெருங்கடலின்  அடியே உள்ள நீரின் பகுதிக்  குறுக்கம் யாது? (நீரின்  பருமக் குணகம்  = 2..2 x 109 Nm-2/g  = 10ms -2  )  

 28. நீரில் ஒரு காற்று குமிழியின் ஆரம் r ஆனது  நீர்ப்பரப்பில் அடியில் h என்ற ஆழத்தில் உள்ளது.  P என்பது வளிமண்டல  அழுத்தம் ஏனில் A, T  என்பன நீரின் அடர்த்தி மற்றும் பரப்பு இழுவிசை குமிழியின்  உள்ளே அழுத்தம் யாது?  

 29. மெல்லோட்டப் பயிற்சியை (Jogging) தினமும் செய்வது உடல்நலத்தை பேணிக்காக்கும் என்பது நாமறிந்ததே. நீங்கள் மெல்லோட்டப் பயிற்சியில் ஈடுபடும்போது 500 KJ வேலை உங்களால் செய்யப்படுகிறது. மேலும் உங்கள் உடலிலிருந்து 230 KJ வெப்பம் வெளியேறுகிறது எனில், உங்கள் உடலில் ஏற்படும் அக ஆற்றல் மாறுபாட்டைக் கணக்கிடுக.

 30. 300 k வெப்பநிலையுள்ள 0.5 மோல் வாயு ஒன்று தொடக்கப்பருமன் 2l இல் இருந்து இறுதிப்பருமான் 6l க்கு வெப்பநிலை மாறா நிகழ்வில் விரிவடைகிறது எனில், பின்வருவானவற்றைக் காண்க. 
  a. வாயுவால் செய்யப்பட்ட வேலை?
  b. வாயுவிற்குக் கொடுக்கப்பட்ட வெப்பத்தின் அளவு?
  c. வாயுவின் இறுதி அழுத்தம்?
  (வாயுமாறிலி, R= 8.31 J mol-1 K-1)

 31. குவளையில் உள்ள சூடான தேநீரில் அதிக வெப்பம் உள்ளது. இக்கூற்று சரியா, தவறா? தவறெனில் ஏன்?

 32. ஒரு வாயுவிற்கு வெப்பம் சேர்க்கப்படாமல் அதன் வெப்பநிலையை உயர்த்த இரு மாணவர்கள் விரும்புகின்றனர் இது சாத்தியமா?

 33. வாயுக்களின் இயக்கவிற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

 34. பிரௌனியன் இயக்கத்தினை விளக்குக.

 35. சராசரி இருமுடி மூல வேகம்\({ v }_{ rms }\) இயற்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

 36. ஆற்றல் சம பங்கீட்டு விதியின்படி ஓரணு, ஈரணு, மூவனு மூலக்கூறு இவற்றின் சராசரி இயக்க ஆற்றலைக் கூறு? 

 37. 1N m-1 மற்றும் 2N m-1 சுருள்மாறிலிகள் கொண்ட இரு சுருள்வில்கள் பக்க இணைப்பில் இணைக்கப்படுவதாக கொள்வோம். தொகுப்பயன் சுருள்மாறிலியைக் கணக்கிடுக. மேலும் kp ஐ பற்றி கருத்துக் கூறுக.

 38. ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.

 39. ஒரு 1kg நிறையுள்ள ஒரு பொருளின் தனி சீரிசை இயக்கச் சமன்பாடு \(x=\cos { \left( 100t+\cfrac { \pi }{ 2 } \right) } \) திசைவேகம் யாது?

 40. ஒரு அலைவுறும் தக்கை சுருள்வில் அமைப்பானது. 1.00 J எந்திர ஆற்றலுடையது. வீச்சு 10.0cm மற்றும் பெரும வேகம் 1.20m/s. சுருள்வில்லில் மாறிலி தக்கையின் நிறை மற்றும் அலைவுகளின் அதிர்வெண் இவற்றைக் காண்க.

 41. எஃகு கம்பி ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை கணக்கிடுக. எஃகின் யங்குணகம் Y=2x1011 Nm-2 மற்றும் அடர்த்தி ρ=7800kgm-3

 42. ஒத்ததிர்வு காற்று தம்பி கருவியில்ஒரு இசைக்கவையை பயன்படுத்தி காற்று தம்பதின் ஒத்ததிர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கு குழாயிலான இக்கருவியில் அதன் நீளமானது ஒரு பிஸ்டன் மூலம் மாற்றப்படுகிறது. அறை வெப்பநிலையில் ரூ அடுத்தடுத்த ஒத்ததிர்வுகள் 20cm மற்றும் 85cm களில் ஏற்படுகிறது. காற்றுக் தம்பத்தின் அதிர்வெண் 256Hz. அறை வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் காண்க.

 43. இசைக்கவையில் அலைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன.

 44. ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொருஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment