அலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்கண்டவற்றுள் எது?

    (a)

    130

    (b)

    117

    (c)

    110

    (d)

    120

  2. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

    (a)

    100Hz, 150Hz

    (b)

    150Hz,450Hz

    (c)

    450Hz, 700Hz

    (d)

    700Hz, 800Hz

  3. 5000Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர் காற்றில் அலைநீளங்களின் தகவு _______.

    (a)

    4.30

    (b)

    0.23

    (c)

    5.30

    (d)

    1.23

  4. இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 s இலும் 2வது எதிரொலியை  t2 s இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி _______.

    (a)

    \({v(t_1-t_2)\over 2}\)

    (b)

    \({v(t_1t_2)\over 2(t_1+t_2)}\)

    (c)

    v(t1+t2)

    (d)

    \({v(t_1+t_2)\over 2}\)

  5. x திசையில் இயங்கி கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இற்கான சமன்பாடு y=(2x10-3 )sin(300t−2x+\(\pi \over4\)) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியில் அளக்கப்பட்டால் அலையின் வேகம் _______.

    (a)

    150ms-1

    (b)

    300ms-1

    (c)

    450ms-1

    (d)

    600ms-1

  6. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x  : y யின் மதிப்பு_______.

    (a)

    36:35

    (b)

    35:36

    (c)

    1:1

    (d)

    1:2

  7. கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது.

    (a)

    (x - v t )3

    (b)

    x ( x + v t )

    (c)

    \(1\over (x+vt )\)

    (d)

    sin( x + v t)

  8. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 600 வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0k Hz. ஊஞ்சலில் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலில் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்_______.

    (a)

    2.027kHz

    (b)

    1.974kHz

    (c)

    9.74kHz

    (d)

    1.011kHz

  9. சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத் தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்துகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்.

    (a)

    (b)

    (c)

    (d)

  10. ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3 வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு _______.

    (a)

    8/3

    (b)

    3/8

    (c)

    1/6

    (d)

    1/3

  11. 6 x 2 = 12
  12. அலைகள் என்றால் என்ன?

  13. குறுக்கலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  14. அலைநீளம் வரையறு.

  15. அலைகளின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?

  16. விம்மல்கள் - வரையறு

  17. எதிரொலி என்றால் என்ன? விளக்குக.

  18. 6 x 3 = 18
  19. எஃகு கம்பி ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை கணக்கிடுக. எஃகின் யங்குணகம் Y = 2 x 1011 Nm-2 மற்றும் அடர்த்தி ρ = 7800kgm-3

  20. N இசைக்கவைகள் அவற்றின் அதிர்வெண்களின் ஏறு வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. அவை அதிரும்போது அடுத்தடுத்த இரு இசைக்கவைகள் ஏற்படுத்தும் விம்மல்கள் n என்க. கடைசி இசைக்கவை, முதல் இசைக்கவையின் அதிர்வெண்ணைப்போல் இருமடங்கு அதிர்வெண் பெற்றுள்ளது, எனில் முதல் இசைக்கவையின் அதிர்வெண் f=(N-1)m எனக் காட்டுக

  21. சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.

  22. குறுக்கலை மற்றும் நெட்டலை வேறுபடுத்துக

  23. அலையின் வீச்சு - விளக்குக.

  24. சோனார் - குறிப்பு வரைக.

  25. 2 x 5 = 10
  26. அலைகளில் குறுக்கீட்டு விளைவு ஏற்படுவதை விளக்குக.

  27. டாப்ளர் விளைவு என்றால் என்ன?
    (1) மூலம் இயக்கத்திலும் கேட்பவர் ஓய்விலும் உள்ளபோது
    (a) மூலம் கேட்பவரை நோக்கி இயங்கும்போது
    (b) மூலம் கேட்பவரிலிருந்து விலகிச் செல்லும்போது
    (2) கேட்போர் இயக்கத்திலும், மூலம் ஓய்விலும் உள்ள போது
    (a) கேட்பவர், மூலத்தை நோக்கி இயங்கும் போது
    (b) கேட்பவர், மூலத்திலிருந்து விலகிச்செல்லும் போது
    (3) இரண்டும் இயக்கத்தில் உள்ள போது
    (a) மூலம் கேட்பவர் ஒருவரை ஒருவர் நோக்கி நெருங்கும்போது
    (b) மூலமும் கேட்பவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகிச்செல்லும்போது
    (c) மூலம் கேட்பவரை துரத்தும் போது
    (d) கேட்பவர் மூலத்தை துரத்தும்போது

*****************************************

Reviews & Comments about 11th Physics இயற்பியல் - அலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Waves Model Question Paper )

Write your Comment