பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  15 x 1 = 15
 1. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

  (a)

  0.007 m2

  (b)

  2.64x1024 kg

  (c)

  0.0006032 m2

  (d)

  6.3200 J

 2. நியூக்ளியஸ் அமைப்பின் அளவிற்கான அலகு

  (a)

  ஆம்ஸ்ட்ராங்

  (b)

  மைக்ரான்

  (c)

  நேநோ

  (d)

  பெர்மி

 3. பின்வருவைவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

  (a)

  \(\hat{i}+\hat {j}\)

  (b)

  \({\hat{i}\over \sqrt{2}}\)

  (c)

  \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

  (d)

  \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

 4. கிடைத்தளத்துடன் 450 கோணத்தில் பொருளொன்று எறியப்பட்டால் அதன் கிடைத்தள வீச்சு எதற்குச் சமம்?

  (a)

  செங்குத்து உயரம்

  (b)

  செங்குத்து உயரதாய் போல் இரு மடங்கு 

  (c)

  செங்குத்து உயரதாய் போல் மூன்று மடங்கு 

  (d)

  செங்குத்து உயரதாய் போல் நான்கு மடங்கு 

 5. பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?

  (a)

  பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி

  (b)

  ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல

  (c)

  ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி

  (d)

  ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல

 6. ஒரு துகளின் நிறை 'm' செங்குத்தான v ஆரம் கொண்ட வட்டத்தின் மீது சுற்றுகிறது. துகளின் வேகம் பெருமப் புள்ளியில் 'U' எனில்

  (a)

  mg=\(\frac { m{ v }^{ 2 } }{ r } \)

  (b)

  mg>\(\frac { m{ v }^{ 2 } }{ r } \)

  (c)

  mg<\(\frac { m{ v }^{ 2 } }{ r } \)

  (d)

  mg\(\ge \frac { m{ v }^{ 2 } }{ r } \)

 7. ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது

  (a)

  சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

  (b)

  சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

  (c)

  ஆரத்தின் வழியாக இருக்கும்

  (d)

  பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்

 8. வெடித்தலின் நிறைமையத்தில் வெடித்தபகுதிகளின் _________ பாதிக்கப்படும்.

  (a)

  இயக்கவியல் அளவுகள்

  (b)

  கோண அளவுகள்

  (c)

  சூழல் பாதை

  (d)

  ஏதுமில்லை

 9. இரண்டு கோள்களின் ஆரங்களின் விகிதம் k. ஈர்ப்பு முடுக்கங்களுக்கான விகிதம் s. இதன் விடுபடு வேகத்திற்கான விகிதம்

  (a)

  \(\sqrt { \frac { K }{ S } } \)

  (b)

  \(\sqrt { \frac { S }{ K } } \)

  (c)

  \(\sqrt { K-S } \)

  (d)

  ks

 10. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்சொய் விகிதம் 

  (a)

  0

  (b)

  0.25

  (c)

  0.3

  (d)

  0.5

 11. ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1, V1, T1, N) என்ற சமநிலை சமநிலையிலிருந்து (2P1, 3V1, T2, N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால்

  (a)

  T1 = T2

  (b)

  \({ T }_{ 1 }=\frac { { T }_{ 2 } }{ 6 } \)

  (c)

  \({ T }_{ 1 }=6{ T }_{ 2 }\)

  (d)

  \({ T }_{ 1 }=3{ T }_{ 2 }\)

 12. ஒரு மோல் வாயுவின் சராசரி இயக்க ஆற்றல்.

  (a)

  \(\frac { 1 }{ 2 } KT\)

  (b)

  \(\frac { 3 }{ 2 } KT\)

  (c)

  \(\frac { 3 }{ 2 } RT\)

  (d)

  \(\frac { 1 }{ 2 } RT\)

 13. கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?

  (a)

  f

  (b)

  \(f\over 2\)

  (c)

  \(f\over f +2\)

  (d)

  \(f+2\over f\)

 14. சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள் 6மதுரம் B புள்ளிகளை ஒரே திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு சேலை எடுத்துக்கொள்ளும் நேரம் 3s  மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3s எடுத்துக்கொள்கிறது எனில் அதன் அலைவு நேரம்

  (a)

  15s

  (b)

  6s

  (c)

  12s

  (d)

  9s

 15. ஒலியின் திசைவேகத்தைவிட அதிக வேகத்தில் இயங்கும் பொருள் செல்லும் வேகம் 

  (a)

  சேணலை வேகம் (super sonic speed)

  (b)

  திசைவேகம் 

  (c)

  எதிரொலி 

  (d)

  அலை திசைவேகம் 

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 17. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக.
  12.653 ஐ 3 இலக்கம் வரை

 18. m1=5 kg மற்றும் m2=4 kg என்ற இரண்டு நிறைகள் மெல்லிய நீட்சியற்ற கயிற்றின் மூலம், உராய்வற்ற கம்பியின் வழியே படத்தில் காட்டியுள்ளவாறு தொங்க விடப்பட்டுள்ளன. அவை தானாக இயங்கும் போது ஒவ்வொரு நிறையின் மீதும் செயல்படும் முடுக்கத்தைக் காண்க. (g =10 m s-2)  

 19. கார் ஒன்று ஒய்வு நிலையில் இருந்துத ஒரு் பரப்பில் சீரான முடுக்கதது்டன இ்யங்குகிறது. இ்யக்க ஆற்றல் – இ்டப்பெயர்ச்சி   வரைபடம் வரைக . அ்நத வரைபடத்திலிருந்து  நீ பெறக்கூடிய தகவல்கள் யாவை? 

 20. உடனடித் திறன் வரையறு.

 21. நிலைமத் திருப்புத் திறனை காண்பதற்கு தேவையான தேற்றங்களின் அவசியம் யாது?

 22. ஒவ்வொரு ,மாதமும் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் நடைபெறுவது இல்லை.ஏன்?

 23. மழுங்கிய கத்தியை ஒப்பிட கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம். ஏன்?

 24. இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் சார்லஸ் விதியினை வருவி.

 25. மின்காந்த அலையின் பண்பு யாது? ராலே அலை என்பது யாது?

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 3 = 18
 27. முடுக்கம் - வரையறு.

 28. ஆற்றல் மாற்றா விசையினை படம் வரைந்து விவரி.

 29. M நிறையும் l நீளமும் கொண்ட சீரான நீள் அடர்த்தி கொண்ட (uniform rod) தண்டின் நிறை மையத்தைக் கண்க..

 30. ஒரு மேசையின் மீது ஒவ்வொன்றின் நிறை 100 kg மற்றும் 0.8 m ஆரம் கொண்ட இரு கணமான கோளங்கள் 1 மீட்டரில் வைக்கப்பட்டுள்ளன. இரு கோளங்களின் மையங்களையும் இணைக்கும் மையப்  புள்ளியில் ஈர்ப்புப்புலம் மற்றும் ஈர்ப்பு நிலை ஆற்றலைக் காண்.

 31. ஒரு எஃகு  பந்தின் [அடர்த்தி p  = 7.8gcm-3 ] முற்றுத் திசை  வேகம் 10cms-1. இது ஒரு நீர்த் தொட்டியில் விழுகிறது. நீரின் பாகியல்  குணகம்  = 8.5 x 10-4 pas. கிளிசரினில் முற்றுத் திசைவேகம் என்னவாக இருக்கும் (p = 1.2 gcm-3\(\eta \) = 13.2 pas )         

 32. நிலைமாற்றம் குறிப்பு வரைக. எடுத்துக்காட்டு தருக.

 33. வாயுக்களின் இயக்கவிற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

 34. ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.

 35. ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொருஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் யாவை? 

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. வானியல் மற்றும் ஈர்ப்பியலில் சமீபத்திய வளர்ச்சிகளை விவரி.

  2. கடல் அலையின் மீது வாத்து பொம்மை ஒன்று உள்ளதை மனிதன் ஒருவன் பார்க்கிறான். வாத்து நிமிடத்திற்கு 15முறை மேலும் கீழும் இயங்குகிறது. தோராயமாக கடல் அலையின் அலைநீளம் 12m என அவர் அளக்கிறார். வாத்து ஒருமுறை மேலே வருவதற்கும் கீழே செல்வதற்கும் ஆகும் நேரத்தையும் கடல் அலையின் திசைவேகத்தையும் காண்க.
   ​​​​​​​

  1. தகைவு -திரிபு விவரப் படத்தினை வரைந்து விவரி. 

  2. வெப்ப அளவிடியலை விளக்கி அதன் அடிப்படையில் ஒன்றுடான் ஒன்று கலந்துள்ள இரண்டு வெப்ப இயக்க அமைப்புகளின் இறுதி வெப்ப நிலைக்கானச் சமன்பாட்டை வருவி.

  1. செங்குத்து வட்ட இயக்கத்தினை படத்துடன் சமன்பாடுகளுடன் விவரி.

  2. சிவாவும், அருணும் ஒரு 'மேஜிக் (Magic) ஷோ' க்கு போனார்கள். அக்கட்சியில் ஒரு பெண் உயர் சூரத்தில் பாடும்போது கன்னடியன் உடைந்து பாடும்போது கண்ணாடியானது உடைந்து துண்டுகளாக நொறுங்கியது. அருண் ஆச்சரியமடைந்த இது எவ்வாறு நிகழ்ந்தது என வினவினான்?
   (i) சிவாவின் விளக்கம் என்னவாக இருந்திருக்கும்?
   (ii) 'இயக்கி', இயக்கி என்றால் என்ன?

  1. நிலைமக் குறிப்பாயங்கள் பற்றி விளக்குக.   

  2. ஹைட்ரஜன் மூலக் கூறு ஒன்றின் நிலைமத்திருப்புத்திறனை அதன் நிறைமையத்தின் வழியாகவும் அணுக்களுக்கிடையேயான அச்சிற்கு செங்குத்தாகவும் செல்லும் அச்சைப் பொருத்து காண்க. ஹைட்ரஜன் அணுவின் நிறை 1.7 x 10-27 kg மற்றும் அணுவிடைத் தொலைவு 4 x 10-10 m என கொள்க. 

  1. மையநோக்கு முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.

  2. அறை ஒன்றினுள் 3:1 விகிதத்தில் அக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் உள்ளன. அறையின் வெப்பநிலை 270C அக்ஸிஜன் (O2) மற்றும் ஹைட்ரஜன் (H2) இவற்றின் மூலக்கூறு நிறைகள் முறையே 32 g mol-1 K-1 எனில் பின்வருவானவற்றைக் கணக்கிடுக. 
   a)  அக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இருமுடி மூலவேகம்.
   b) அக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறு சராசரி இயக்க ஆற்றல்.
   c) அக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலின் விகிதம்.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Physics - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment