அலைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. 1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள் முறையே kமற்றும் kசுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும்போது அவற்றின் பெரும்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளபோது A யின் வீச்சானது B யின் வீச்சைபோல் _____ மடங்காகும்.

    (a)

    \(\sqrt {k_B\over 2k_A}\)

    (b)

    \(\sqrt {k_B\over 8k_A}\)

    (c)

    \(\sqrt {2k_B\over k_A}\)

    (d)

    \(\sqrt {8k_B\over k_A}\)

  2. ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.

    (a)

    5/6

    (b)

    11/10

    (c)

    6/5

    (d)

    5/4

  3. தனிஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளபோது, சீரிசை அலை இயற்றியை போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4m தொலைவில் ஊசல் குண்டின் முடுக்கமானது 16ms-1 எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    2s

    (b)

    1s

    (c)

    2\(\pi\)s

    (d)

    \(\pi\)s

  4. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?

    (a)

    \({d^2y\over dt^2}+y=0\)

    (b)

    \({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)

    (c)

    \({d^2y\over dt^2}+k^2y=0\)

    (d)

    \({dy\over dt^2}+y=0\)

  5. l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    \(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)

    (b)

    \(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)

    (c)

    \(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)

    (d)

    \(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)

  6. ஒரு துணைக்கோளில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தனி ஊசலின் கால அளவு (T -பூமியின் மீது கால அளவு)

    (a)

    சுழி

    (b)

    T

    (c)

    முடிவில்லாதது

    (d)

    \(\frac { T }{ \sqrt { \in } } \)

  7. இரு ஊசல்களின் அதிர்வெண்களின் விகிதம் 2:3 எனில் நீளங்களின் விகிதம்

    (a)

    \(\sqrt { \frac { 2 }{ 3 } } \)

    (b)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (c)

    \(\frac { 4 }{ 9 } \)

    (d)

    \(\frac { 9 }{ 4 } \)

  8. சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீது 27 அலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது எனில் அச்சுருள்வில்லின் மீது செயல்படும் பெரும விசை______.

    (a)

    15 N

    (b)

    3 N

    (c)

    6 N

    (d)

    12 N

  9. y-அச்சின் வழியே ஒரு துகள் மேற்கொள்ளும் தனிசீரிசை இயக்கத்தின் சமன்பாடு y=A sin(ωt)+B, வீச்சு

    (a)

    A

    (b)

    B

    (c)

    A + B 

    (d)

    \(\sqrt { A+B } \).

  10. 7 x 2 = 14
  11. சீரலைவு மற்றும் சீரற்ற அலைவு இயக்கம் என்றால் என்ன? இரு உதாரணங்கள் தருக

  12. தனிச்சீரிசை இயக்கத்தின் அதிர்வெண் வரையறு.

  13. ஆரம்ப கட்டம் (epoch) என்றால் என்ன?

  14. தனி ஊசலின் விதிகளைத் தருக?

  15. திணிப்பு அதிர்வுகளை வரையறு. எடுத்துக்காட்டு தருக

  16. வீச்சு வரையறு.

  17. கோண சீரிசை இயக்கம் என்றால் என்ன?

  18. 4 x 3 = 12
  19. ஒரு செவிலியர் நோயாளி ஒருவரின் சராசரிஇதயத்துடிப்பை அளவிட்டு மருத்துவரிடம் 0.8s என்ற அலைவு நேரத்தில் குறிப்பிட்டார். நோயாளியின் இதயத்துடிப்பை ஒரு நிமிடத்திற்கான துடிப்புகளின் எண்ணிக்கையில் கூறவும்.

  20. ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.

  21. தனிச் சீரிசை இயக்கத்தில் இடப்பெயர்ச்சியினை விளக்குக.

  22. ஒத்ததிர்வின் நன்மை, தீமைகள் யாவை?

  23. 3 x 5 = 15
  24. சீரான வட்ட இயக்கத்தின் வீழல் சீரிசை இயக்கம் என்பதை விவரி.

  25. சுருள்வில்லின் கிடைத்தள அலைவுகளை விவரி.

  26. அலைவுகளின் நான்கு வகைகளை விரிவாக விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - அலைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics -Oscillations Model Question Paper )

Write your Comment