All Chapter 2 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 88
    Answer All The Following Question:
    44 x 2 = 88
  1. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
    0.007

  2. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக.
    101.55 × 106 ஐ 4 இலக்கம் வரை

  3. இயற்பியல் பயலுவதில் "பகுத்துப் பார்த்தல்" (Reduvtionism) என்பது யாது?

  4. பின் வரும் தொழில் நுட்பங்கள் எந்த விஞ்ஞான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

  5. பின்வரும் திசைவேகம்–நேரம் வரைபடங்களினால் குறிப்பிடப்படும் துகளின் இயக்க வகையினைக் காண்க.

  6. நிலவு புவியை தோராயமாக 37 நாட்களுக்கு ஒரு முறை முழு சுற்று சுற்றி வருகிறது. இந்நிலையில் நிலவு ஒரு நாளில் பூமியை சுற்றும் கோணத்தின் மதிப்பு என்ன?

  7. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன?

  8. கணத்தாக்கை தொகையிடல் மூலம் எவ்வாறு கணக்கிடலாம்?

  9. மனிதரொருவர் தரையில் நடக்கும் போது, மனிதரின் மீது செயல்படும் தரையின் உராய்வு விசை அவரின் இயக்கத்திசைக்கு எதிராகச் செயல்படும். சரியா? தவறா?

  10. 50 g நிறையுள்ள சிலந்தி ஒன்று படத்தில் காட்டியவாறு அதன் வலையிலிருந்து தொங்குகிறது. வலையின் இழுவிசை யாது?

  11. சரிசமமான வளைவுச் சாலையில் கார் ஒன்று சறுக்குவதற்கான நிபந்தனை என்ன?

  12. தனித்த பொருளின் விசைப்படம் என்பது பற்றி குறிப்பு வரைக. 

  13. ஒரு மீட்சியற்ற மோதலில் ஒரு பொருள்  நிலையாக உள்ளது சமநிறைகள் கொண்ட பொருள்களின் திசைவேகங்களின் விகிதம் \(\frac { { V }_{ 1 } }{ { V }_{ 2 } } =\frac { 1-e }{ 1+e } \) எனக் காட்டுக

  14. தொடக்கத்தில் நீட்டப்டாத நிலையில் உள்ள ஒரு சுருளவில் முதலில் x தொலைவுக்கும் மீணடும் x தொலைவுக்கும் நீட்டப்படுகிறைது. முதல் நேர்வில் செய்யப்பட்ட வேலை W1 ஆனது இரண்டாவதுத நேர்வில் செய்யப்பட்ட வேலை W2 ல் 1/3 பங்கு இருக்கும்.  சரி்யா, தவறா

  15. 'உடனடித் திறன்' -வரையறு.

  16. திறன் என்றால் என்ன? அதன் பரிமாண வாய்ப்பாட்டை தருக.

  17. மரம் வெட்டப்படும் போது, மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையின் பக்கமே வெட்டப்பட வேண்டியது ஏன்?

  18. ஈர்ப்பின் மையம் என்றால் என்ன?

  19. வட்டப் பாதையில் வண்டி ஓட்டுதல் என்ற அமைப்பின் மீது செயல்படும் விசைகள் யாவை?

  20. X-Y தளத்தில் m நிறை கொண்ட சிறிய துகள் X அச்சுடன் \(\theta \)கோணத்தில் v என்ற ஆரம்ப திசைவேகத்துடன் படத்தில் காட்டியுள்ளவாறு எறியப்படுகிறது. அப் பொருளின் கோண உந்தத்தை காண்க.

  21. அடையாளம் தெரியா கோளானது புவியின் அரைநெட்டச்சு போல இரு மடங்கு உடைய ஆரப்பாதையில் சூரியனை வலம் வருகிறது. புவியின் சுழற்சிக்காலம் T1 எனில் அக்கோளின் சுழற்சி காலம் காண்க.

  22. சூரியனை புவி சுற்றும் வேகம் 30 kms-1 எனில் புவியின் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. முந்தய கணக்கில் புவியின் ஈர்ப்பு நிலை ஆற்றலை கணக்கிட்டாய். அதன்படி புவியின் மொத்த ஆற்றல் நேர்க்குறி தன்மையுடையதா? இல்லை எனில் காரணம் கூறு.

  23. புவிமையக் கொள்கை என்றால் என்ன?

  24. எரட்டோஸ்தனீஸ், ஹிப்பார்க்கஸ் வானவியலில் இவர்களின் பங்கு யாது? எதைக் கொண்டு கணக்கிட்டனர்?

  25. 100 cm பக்கத்தைக் கொண்ட ஒரு உலோக கனசதுரம் அதன் முழு பக்கங்களிலும் செயல்படும் சீரான செங்குத்து விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அழுத்தம் 106 பாஸ்கல் பருமன் 1.5 x 10-5m3 என்ற அளவு மாறுபாடு அடைந்தால், பொருளின் பருமக்குணத்தைக் கணக்கீடுக.

  26. முற்றுத்திசைவேகம் - வரையறு.

  27. மீட்சியற்ற  பண்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.        

  28. பருமத் தகைவு வரையறு.  

  29. கொள்கலன் ஒன்றின் பிஸ்டனை வேகமாக உள்ளே அழுத்தும்போதே நல்லியல்பு வாயுவிதியைப் பயன்படுத்த முடியுமா? இல்லையென்றால் காரணம் கூறுக.

  30. அதிகாலையில் சைக்களில் செல்லும் ஒருவர் 25oC வெப்பநிலையில் சைக்கிளின் காற்றழுத்தத்தை 500 kPa என அளவிடுகிறார். பிற்பகலில் அவர் சைக்கிளின் காற்றழுத்தத்தை அளவிடும்போது 520 kPa ஆக உள்ளதெனில் பிற்பகலில் சைக்கிள் டயரின் வெப்பநிலை என்ன?(இங்கு டயரின் வெப்ப பிரிவைப் புறக்கணிக்கவும்)

  31. பாயின் விதி வரையறு?

  32. கலோரிமானிகள் உலோகத்தினால் செய்யப்படுகின்றன கண்ணாடியால் செய்யப்படுவதில்லை. ஏன்?

  33. சராசரி மோதலிடைந்தூரத்திற்கான கோவையை எழுதி அதனை வரையறு.

  34. வெப்ப பரிமாற்றமில்லா நிகழ்வு ஒன்றில் ஓரணு மற்றும் ஈரணு வாயுக்கலவையின் அழுத்தம் அதன் வெப்பநிலையின் மும்மடிக்கு நேர்விகிதத்தில் உள்ளது எனில் \(\gamma \) = ( Cp/CV)இன் மதிப்பை காண்க.

  35. வாயுவின் அக ஆற்றல் எவ்வாறு பெறுவாய்?

  36. \({ v }_{ rms },\overline { v } \)மற்றும் \({ v }_{ mp }\) ஒப்பிடுக.

  37. கீழ்க்காணும் இயக்கங்களில் சீரலைவு மற்றும் சீரற்ற அலைவு இயக்கங்களை வகைப்படுத்துக.
    (a) ஹேலியின் வால்மீன் (Halley's comet)
    (b) மேகங்களின் இயக்கம்
    (c) புவியைச் சுற்றிவரும் சந்திரனின் இயக்கம்

  38. தடையுறு அலைவுகளை விளக்குக. எடுத்துக்காட்டு தருக.

  39. பொறியியல் பயன்பாடுகளில் அதிர்வு இயக்கத்தின் முக்கியத்துவம் யாது?

  40. தனிச் சீரிசை இயக்கத்தில் திசைவேகம் என்பது யாது?

  41. இரு அலைகளின் அலைநீளங்கள் முறையே ⋋1= 1m,⋋1= 6m எனில் அவற்றின் அலை எண்களை காண்க.

  42. வாயுவில் குறுக்கலைகள் ஏற்படாது ஏன்? திண்மத்திலும், நீர்மத்திலும் குறுக்கலைகள் ஏற்படுமா?

  43. அன்றாட வாழ்வில் அலைகளின் பயன்பாடுகளை கூறுக?

  44. A மற்றும் B என்ற இரு இசைக்கலவைகள் இணைந்து 4 விம்மல்களைத் தோற்றுவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இழு விசையில் உள்ள 0.96m நீளமுள்ள சுராமானிக் கம்பி இசைக்கவை B யுடன் ஒத்ததீர்வு பெறுகிறது. இசைக்கலவையின் அதிர்வெண்களைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment