வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

    (a)

    rms வேகம்

    (b)

    சராசரி வேகம்

    (c)

    சராசரித் திசைவேகம்

    (d)

    மிகவும் சாத்தியமான வேகம்

  2. ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள A0C அறையின் வெப்பநிலை B அறையைவிட 4 குறைவாக உள்ளது. எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்?

    (a)

    அறை A

    (b)

    அறை B

    (c)

    இரண்டு அறைகளிலும் ஒரே அளவுள்ள காற்று இருக்கும்

    (d)

    கண்டறிய இயலாது

  3. நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?

    (a)

    இருமடங்காகும்

    (b)

    மாறாது

    (c)

    பாதியாக குறையும்

    (d)

    நான்கு மடங்கு அதிகரிக்கும்

  4. கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?

    (a)

    f

    (b)

    \(f\over 2\)

    (c)

    \(f\over f +2\)

    (d)

    \(f+2\over f\)

  5. பின்வரும் வாயுக்களில், எவ்வாறு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தை (vrms) பெற்றுள்ளது?

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    கார்பன் - டை - ஆக்ஸைடு

  6. 10 x 2 = 20
  7. சுதந்திர இயக்கக்கூறுகள் வரையறு.

  8. ஆற்றல் சமபங்கீட்டு விதியை கூறுக.

  9. சராசரி மோதலிடைதூரத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

  10. பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் யாது?

  11. 2 x  103ms-1 வேகத்தில் இயங்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கொள்கலன் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டுள்ள்ளன. 4cmசுவரின் பரப்பை ஒரு வினாடிக்கு 1020 முறை இந்த ஆக்சிஜன் மூலக்கூறுகள் செங்குத்துத்தளத்துடன் 300 கோணத்தில் தாக்குகின்றன.எனில், அம்மூலக்கூறுகள் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தத்தினைக் காண்க. (ஒரு அணுவின் நிறை = 1.67 x  10-27kg)

  12. 25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  13. வாயுவின் மாறா பருமனில் 1மோலுக்கான மொத்த சீரற்ற இயக்கி ஆற்றலை கம்=கணக்கிடுக.

  14. ஆவியாதலால் குளிர்வு நிகழ்வது ஏன்?

  15. இயக்கவியற்கொள்கையின் அவசியம் யாது?

  16. கோய் மற்றும் வீ னரின் (Gouy & Wiener) விளக்கம் யாது?

  17. 5 x 3 = 15
  18. வாயுக்களின் இயக்கவியற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

  19. இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.

  20. மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மேன் பகிர்வுச் சார்பினை விரிவாக விளக்கவும்.

  21. பிரௌனியன் இயக்கத்தினை விளக்குக.

  22. வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகளை விளக்குக?

  23. 2 x 5 = 10
  24. 300 k வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க. 

  25. சராசரி இருமுடி மூலம் வேகம் () வரையறு? இச்சமன்பாட்டிலிருந்து நீவிர் அறிவன யாவை? அவற்றின் விளைவுகள்  

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory of Gases Model Question Paper )

Write your Comment