+1 Third Revision Exam 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. இவற்றுள் எந்தவாயில் தருக்கவழிமாற்று என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    AND

    (b)

    OR

    (c)

    NOT

    (d)

    XNOR

  3. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  4. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  5. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  6. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    சாராம்சம்

    (c)

    ஒருங்கினைத்தல்

    (d)

    பிரித்தல்

  7. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்
    i := 0
    while i 6= 5
    i := i + 1

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    0

  8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?

    (a)

    m mod 2

    (b)

    n mod 3

    (c)

    3 x m - 2x n

    (d)

    2xm - 3xn

  9. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?

    (a)

    'A'

    (b)

    'Welcome'

    (c)

    1232

    (d)

    "1232"

  10. நம் தேவைக்கு உடனே உபயோகிப்படுத்தப்படும்  துணை  நிரல்களை எவ்வாறு அழைக்கப்டும்?
    (i) முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள்
    (ii) உள்ளமைந்த செயற்கூறுகள் 
    (iii) பயனர் வரையறுத்த செயற்கூறுகள்.           

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (ii) அல்லது (iii)

    (d)

    (i) அல்லது (ii)

  11. குறிப்பு மூலம் அழைத்தல் முறையில் ஒரு செயற்கூறினுக்கு அளபுருக்களை அனுப்பும் போது, கட்டுரு பொருளின் முகவரியானது செயற்கூறினுக்கு பின்வரும் எந்த செயற்குறியை பயன்படுத்தி அனுப்பப்படுகிறது.

    (a)

    *

    (b)

    (c)

    @

    (d)

    &

  12. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை?

    (a)

    இனக்குழு 

    (b)

    மிதவை 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  13. பின்வரும் கூற்றுகளில் எது சரி,எது தவறு என கண்டுபிடித்து எழுதுக.
    1.ஆக்கி அளபுருக்களின் பட்டியலைக் கொண்டிருக்கும்.
    2. அழிப்பி அளபுருக்களின் பட்டியலைக் கொண்டிருக்காது.
    3.அழிப்பி செயற்கூறு, பணி மிகுக்கப்பட முடியும்.
    4.ஆக்கி  செயர்கூறு, பணிமிகுக்கப்பட முடியாது.

    (a)

    1-தவறு, 2-சரி, 3-தவறு, 4-தவறு

    (b)

    1-தவறு, 2-சரி, 3-தவறு, 4-சரி

    (c)

    1-சரி, 2-தவறு , 3-தவறு , 4-தவறு 

    (d)

    1-சரி , 2-சரி, 3-தவறு, 4-தவறு

  14. C++ பல்லுருவாக்கம் எதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது?

    (a)

    தரவு அருவமாக்கம்

    (b)

    உறைபொதியாக்கம் 

    (c)

    இனக்குழுக்கள் 

    (d)

    பணி மிகுப்பு

  15. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    heavy-vehicle இனக்குழுவின் பொருள்களால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறு யாது?

    (a)

    void input data (int, int)

    (b)

    void output data( )

    (c)

    void read data (int, int)

    (d)

    both (அ) மற்றும் (ஆ)

  16. 6x 2 = 12
  17. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  18. பதின்ம , இருநிலை , எண்ணிலை எண்களுக்கான பட்டியல் இடு.

  19. GUI என்றால் எஎன்ன?

  20. வழிமுறை என்றால் என்ன?

  21. நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .

  22. ஒரு நிரலில் உள்ள கூற்றுகள் எவ்வாறு இயக்கப்படுகிறது?

  23. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  24. Dev C++-ல் பின்வரும் தரவுவகை நினைவகத்தில் எத்தனை பைட்டுகள் ஒதுக்கீடு செய்யும்?
    (i) double
    (ii) long
    (iii) float
    (iv) char

  25. உள்ளமை இனக்குழு,அடைப்பு இனக்குழு என்றால் என்ன?

  26. 6 x 3 = 18
  27. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  28. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  29. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  30. p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது  காண்பி.

  31. main செயற்கூற்றின் சிறப்பு யாது? 

  32. தலைப்பு கோப்புகள் பற்றி சிறு குறிப்பு வரைக.   

  33. ஒரு கட்டுருவின் உறுப்புகளை எவ்வாறு அணுக முடியும்? எடுத்துக்காட்டு தருக.

  34. செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?

  35. private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக. 

  36. 5 x 5 = 25
  37. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  38. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  39. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  40. விவசாயி, ஆடு, புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் ஆகிய இந்த நான்கின் நிலையை, நான்கு மாறிகளாகவும், அவைகள் இருக்கும் ஆற்றின் பக்கங்களை அந்த நான்கு மாறிகளுக்கான மதிப்புகளாக குறிப்பிடலாம். தொக்க நிலையில், அனைத்னைத்து நான்கு மாறிகளின் மதிப்பும் L (இடது பக்கம்) என்க. இறுதி நிலையில், இந்த நான்கு மாறிகளின் மதிப்பும் R (வலது பக்கம்) என மாற வேண்டும். இந்த செயல்முறையை (அதாவது, தொடக்க நிலையிருந்து, இறுதி நிலைக்கு மாறுதல்) செய்வதற்கு, S என்ற கூற்றை கட்டமை்டமைப்பது இதன் நோக்கமாகும்.

  41. C++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.

  42. கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  43. தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணின் காரணியை கணிக்கும் C++ நிரலை எழுதுக.   

  44. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  45. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    // constructor declared as outline member function
    #include<iostream>
    using namespace std;
    class Perimeter
    {
    int 1, b, p;
    public;
    Perimeter ( );
    Perimeter (int);
    Perimeter (int,int);
    Perimeter (Perimeter&);
    void Calculate( );
    };
    Perimeter:: Perimeter( )
    {
    cout << "\n Enter the value of length and breath";
    cin >> I >> b;
    cout << "\n \n NonParameterized constructor";
    }
    Perimeter::Perimeter(int a)
    {
    I=b=a;
    cout << "\n\n Parameterized constructor with one argument";
    }
    Perimeter::Perimeter(int 11, in b1 )
    {
    cout<<"\n\n Parameterized constructor with 2 argument";
    1=1;
    b=b1;
    }
    Perimeter: :Perimeter(perimeter &p)
    {6
    1=p.1;
    b=p.b;
    cout << "\n \n copy constructor";
    }
    void Perimeter ::Calculate( ){
    p = 2*(1+b);
    cout << p;
    }
    int main ( )
    {
    Perimeter Obj;
    cout << "\n perimeter of rectangle is";
    Obj.Calculate ( );
    Perimeter Obj 1(2);
    cout << "\n perimeter of rectangle";
    Obj 1.Calculate( );
    Perimeter Obj2 (2,3);
    cout << "\n perimeter of rectangle";
    Obj2.Calculatete ( );
    perimeter obj3 (Obj2);
    cout <<"\n perimeter of rectangle";
    obj3.Calculate ( );
    return 0;
    }

  46. பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class Personal
    {
    int Class,Rno;
    char Section;
    protected:
    char Name[20];
    public:
    personal();
    void pentry();
    voidPdisplay();
    };
    class Marks:private Personal
    {
    float M{5};
    protected:
    char Grade[5];
    public:
    Marks();
    void M entry();
    void M display();
    };
    class Result:public Marks
    {
    float Total,Agg;
    public:
    char FinalGrade, Commence[20];
    Result();
    void R calculate();
    void R display();
    }:
    1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
    2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.
    3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
    4. அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
    5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
    (a) Personal  (b) Marks (c) Result
    6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
    7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
    8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Computer Science 3rd Revision Test Question Paper 2019 )

Write your Comment