" /> -->

முதல் பருவம் நான்கு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  10 x 4 = 40
 1. இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு முறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?

 2. மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.

 3. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

 4. இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

 5. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
  CaCO3 ➝ CaO + CO2
  அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
  ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிரையைக் கணக்கிடு.
  இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

 6. போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக்  காண்க?

 7. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

 8. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

 9. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?

 10. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - முதல் பருவம் நான்கு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Term 1 Four Mark Model Question Paper )

Write your Comment