" /> -->

கார்பனும் அதன் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின்வகை

  (a)

  அல்கேன் 

  (b)

  அல்கீன்

  (c)

  அல்கைன் 

  (d)

  ஆல்கஹால் 

 2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச்சேர்மம்

  (a)

  ஆல்டிஹைடு

  (b)

  கார்பாசிலிக் அமிலம்

  (c)

  கீட்டோன்

  (d)

  ஆல்கஹால்

 3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு_________

  (a)

  ஆல்

  (b)

  ஆயிக் அமிலம்

  (c)

  ஏல்

  (d)

  அல்

 4. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

  (a)

  கார்பாக்சிலிக் அமிலம்

  (b)

  ஈதர்

  (c)

  எஸ்டர்

  (d)

  ஆல்டிஹைடு

 5. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

  (a)

  தாது உப்பு

  (b)

  வைட்டமின்

  (c)

  கொழுப்பு அமிலம்

  (d)

  கார்போஹைட்ரேட்

 6. வளைய பியூட்டேன் ________ சேர்மத்திற்கு உதாரணம்.

  (a)

  வளைய

  (b)

  வளையமில்லா 

  (c)

  அரோமேட்டிக் 

  (d)

  அலிசைக்ளிக் 

 7. 7 x 1 = 7
 8. ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் __________ ஆகும்.

  ()

  வினைச் செயல் தொகுதி

 9. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின்கட்டமைப்பை குறிப்பிடுவது ______________(அடிப்படைச் சொல்  / பின்னொட்டு / மின்னொட்டு)

  ()

   அடிப்படைச் சொல்

 10. அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது ________________ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.

  ()

  ஈத்தீன்

 11. எத்தனாயிக் அமிலம் _______________ லிட்மஸ் தாளை ________________ ஆக மாற்றுகிறது.

  ()

  நீல, சிவப்பு

 12. உயரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.

  ()

  நேரான

 13. மிக எளிய அல்கேன் ________ 

  ()

  CH4

 14. எத்தனாயிக் அமிலம் ________ சுவையுடையது.

  ()

  புளிப்பு 

 15. 5 x 1 = 5
 16. வினைச் செயல் தொகுதி – OH

 17. (1)

  பென்சீன்

 18. நிறைவுறா சேர்மங்கள்

 19. (2)

  ஈத்தின்

 20. கார்போ வளையச் சேர்மங்கள்

 21. (3)

  பென்சின் 

 22. பல் இன வளைய சேர்மம் 

 23. (4)

  பியூரான் 

 24. அரோமேட்டிக் சேர்மம் 

 25. (5)

  ஆல்கஹால்

  3 x 2 = 6
 26. கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன.
  காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை.
  அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது
  ஆ. A சரி R தவறு
  இ. A தவறு R சரி
  ஈ. A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

 27. கூற்று: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பைப் பெற்றுள்ளன.
  காரணம்: ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பைப் பெற்றுள்ளன.
  அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது
  ஆ. A சரி R தவறு
  இ. A தவறு R சரி
  ஈ. A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

 28. கூற்று (A): அசிட்டிக் அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது.
  காரணம் (R): இது வலிமை குறைந்த அமிலம்.
  அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது.
  ஆ )A சரி R தவறு
  இ) A தவறு R சரி
  ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.

 29. 7 x 2 = 14
 30. கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.
  1. புரப்பேன் 
  2. பென்சீன்
  3. வளைய பியூட்டேன்
  4. பியூரான்

 31. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.

 32. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.

 33. ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?

 34. எரிசாராயம் எனப்படுவது யாது?

 35. எத்தனாலை எவ்வாறு ஈத்தீனாக மாற்றுவாய்?

 36. கடின நீர் என்பது யாது?

 37. 2 x 4 = 8
 38. ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் Bயை தருகிறது.
  அ. சேர்மம் A யைக் கண்டறிக.
  ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
  இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.

 39. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

  (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
  (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
  (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

 40. 2 x 7 = 14
 41. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.

 42. சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Carbon and Its Compounds Model Question Paper )

Write your Comment