தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B. என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.

  2. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

  3. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.

  4. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.

  5. ஆவர்த்தன பண்பு என்றால் என்ன?

  6. 18-வது தொகுதி தனிமங்கள் ஏன் வினைபுரியும் தன்மை அற்றவையாக உள்ளன?

  7. அணு ஆரம்-வரையறு.

  8. H2 மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் \(0.74\mathring { A } \) இதன் சகப்பிணைப்பு ஆரத்தை கணக்கிடு.

  9. பின்வரும் இணைகளில் இருந்து சிறியதைத் தேர்ந்தெடு.
    (i) MgCa 
    (ii) Al.Si 
    (iii) Cl.Br 

  10. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைகிறது.உன் விடையை நியாப்படுத்து.

  11. அயனியாக்கும் ஆற்றல் என்றால் என்ன?

  12. அயனியாக்கும் ஆற்றல் தொகுதி மற்றும் தொடரில் எவ்வாறு மாறுபடுகிறது?

  13. பின்வரும் வினைகளை முழுமையாக்குக.
    (i) \(2Al+3{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
    (ii) \(2Al+2NaOH+2{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
    (iii) \(2Al+6{ H }_{ 2 }SO_{ 4 }\rightarrow { Al }_{ 2 }\left( { SO }_{ 4 } \right) _{ 3 }+6{ H }_{ 2 }O+?\)

  14. காப்பரின் மின்னாற் தூய்மையாக்களில் பயன்படும் நேர்மின்வாய், எதிர்மின்வாய் மற்றும் மின்பகுளியை எழுதுக.

  15. ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Periodic Classification Of Elements Two Marks Question Paper )

Write your Comment