" /> -->

முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. புவியில் M நிறை கொண்ட பொருள்  ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன்நி றை மதிப்பு.

  (a)

  4M

  (b)

  2M

  (c)

  M/4

  (d)

  M

 2. இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு

  (a)

  விசை

  (b)

  உந்தம்

  (c)

  திசையில் நிலைமம்

  (d)

  நியூட்டனின் விதி

 3. புவியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோளில் ஒரு பொருளின் எடை

  (a)

  சுழி

  (b)

  உண்மை எடை

  (c)

  உண்மை எடையைவிட குறைவு

  (d)

  உண்மை எடையை விட அதிகம்

 4. குழி லென்சு என்பது

  (a)

  குவிக்கும் லென்சு

  (b)

  விரிக்கும் லென்சு

  (c)

  இருபுறக் குவிலென்சு

  (d)

  ஏதுமில்லை

 5. கீழ்கணடவற்றுள் தவறான கூற்று எது.

  (a)

  ஒரு கிராம் C - 12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.

  (b)

  ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.

  (c)

  ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டது.

  (d)

  ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 x 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது 

 6. 5 x 1 = 5
 7. ஓடும் மகிழுந்து வளை பாதையில் செல்லும்போது பயணியர் ஒரு பக்கமாக சாயக் காரணம் ______ 

  ()

  திசைக்கான நிலைமம்

 8. ஒரே _________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.

  ()

  நியூட்ரான் 

 9. அணு நிறையைக் கணக்கிடக் கூடிய நவீன முறை _________ 

  ()

  நிறை நிறமாலைமானி 

 10. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் _________ என அழைக்கப்படுகின்றன.

  ()

  உள் இடை நிலைத் தனிமங்கள் 

 11. இருவித்திலை தாவர இலையின் வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன ________ உள்ளது.

  ()

  கற்றை உறை 

 12. 5 x 2 = 10
 13. மீ சிதறல் ஏற்படக் காரணம் என்ன?

 14. 18-வது தொகுதி தனிமங்கள் ஏன் வினைபுரியும் தன்மை அற்றவையாக உள்ளன?

 15. அறை வெப்ப நிலையில் திட நிலையில் காணப்படாத இரண்டு உலோகங்களைக் கூறு.

 16. மைட்டோகாண்ட்ரியாவின் பணிகளைக் கூறு.

 17. பாலூட்டிகளின் இரு முக்கிய பண்புகளைக் குறிப்பிடுக.

 18. 5 x 3 = 15
 19. 20 g துப்பாக்கி குண்டு 300 m/s ல் 2 cm க்கு எலும்பினைத் துளைத்து சென்ற பிறகு நிறுத்தப்படுகிறது. அக்குண்டினால் செலுத்தப்பட்ட சராசரி விசையைக் கணக்கிடுக. 

 20. ராஜா என்ற மாணவர் குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால், 
  1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
  2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

 21. ஒளிச்சிதறல் என்றால் என்ன? அது ஏற்படக் காரணம் யாது?

 22. கார்பன்டை ஆக்சைடின் கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.

 23. ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்க்கு விளக்கம் கூற முடியுமா?

 24. 3 x 5 = 15
 25. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.

 26. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

 27. பசுங்கணிகத்தின் எந்தபகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science First Mid Term Model Question Paper )

Write your Comment