முக்கிய வினாவிடைகள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  50 x 1 = 50
 1. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு  ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

  (a)

  கணத்தாக்கு விசை

  (b)

  முடுக்கம்

  (c)

  விசை

  (d)

  விசை மாற்ற வீதம்

 2. புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

  (a)

  cms-1

  (b)

  Nkg-1

  (c)

  N m2 kg-1

  (d)

  cm2 s-2

 3. விசையின் SI அலகு

  (a)

  ஆற்றல்

  (b)

  ஜூல்

  (c)

  நியூட்டன்

  (d)

  டைன்

 4. ஒரு கதவினை திறத்தல் இதற்கான எடுத்துக்காட்டு

  (a)

  ஒரு தொடர் விசை

  (b)

  தொடு விசை

  (c)

  சமன் செய்யப்பட்ட விசை

  (d)

  சமன் செய்யப்படாத விசை

 5. உந்த மாறுபாட்டிற்கு சமமான இயற்பியல் அளவு

  (a)

  திசைவேகம்

  (b)

  முடுக்கம்

  (c)

  விசை

  (d)

  கணத்தாக்கு

 6. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.

  (a)

  நேர்க்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  நேர்க்குறி (அ) எதிர்க்குறி

  (d)

  சுழி

 7. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  (a)

  குவி லென்சு

  (b)

  குழி லென்சு

  (c)

  குவி ஆடி 

  (d)

  இரு குவிய லென்சு

 8. ஒரு பொருள் 25 செ.மீ தொலைவில் ஒரு குவி லென்சின் முன் வைக்கப்படுகிறது. அதன் குவியதூரம் 10 செ.மீ எனில் பிம்பத்தின் தொலைவு

  (a)

  50

  (b)

  16.66

  (c)

  6.66

  (d)

  10

 9. லென்சு உருவாக்குவோர் சமன்பாடு என்பது

  (a)

  \(\frac { h' }{ h } \)

  (b)

  \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)

  (c)

  \(\frac { v }{ u } \)

  (d)

  \(\frac { 1 }{ f } =(\mu -1)\left( \frac { 1 }{ { R }_{ 1 } } -\frac { 1 }{ { R }_{ 2 } } \right) \)

 10. ஒரு நபர் 50 செ.மீக்கு அப்பால் தெளிவாக பொருள்களை காண முடிவதில்லை. பார்வையை சரிசெய்யத் தேவையான லென்சின் திறன்

  (a)

  +5D

  (b)

  -0.5D

  (c)

  -2D

  (d)

  +2D

 11. பொது வாயு மாறிலியின் மதிப்பு

  (a)

  3.81 J மோல்–1 K–1

  (b)

  8.03 J மோல்–1 K–1

  (c)

  1.38 J மோல்–1 K–1

  (d)

  8.31 J மோல்–1 K–1

 12. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  (a)

  நேர்க்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  சுழி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 13. வெப்பத்தின் SI அலகு

  (a)

  கலோரி

  (b)

  ஜூல்

  (c)

  கிலோகலோரி

  (d)

  கெல்வின்

 14. பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிவிக்கப்படும் போது நீள் விரிவு ______ ல் ஏற்படும் மாற்றம்.

  (a)

  நீளம்

  (b)

  பரப்பு

  (c)

  பருமன்

  (d)

  அடர்த்தி

 15. ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொறுத்து மாறுபடும்

  (a)

  நீளத்தை

  (b)

  வெப்பநிலைமானி

  (c)

  பொருளின் தன்மை மற்றும் நிறை

  (d)

  அ) மற்றும் ஆ)

 16. ஓம் விதிப்படி மின்னழுத்தம் உயரவும் மின்தடை மாறாமலும் இருக்கும் போது

  (a)

  மின்தடை குறைகிறது

  (b)

  மின்னோட்டம் உயர்கிறது

  (c)

  மின்னோட்டம் மாறாது

  (d)

  மின்னோட்டம் குறைகிறது

 17. ஒரு கம்பியின் மின்தடை r ஓம் எனில் கம்பியின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்போது அதன் மின்தடை என்ன?

  (a)

  r

  (b)

  2r

  (c)

  4r

  (d)

  \(\frac{r}{2}\)

 18. ஒரு 110w, 220 v பல்பு அளிக்கும் மின்னோட்டம்

  (a)

  2A

  (b)

  440 A

  (c)

  0.5 A

  (d)

  5.5 A

 19. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

  (a)

  அலையின் திசையில் அதிர்வுறும்

  (b)

  அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

  (c)

  அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

  (d)

  அதிர்வுறுவதில்லை.

 20. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

  (a)

  330 மீவி-1

  (b)

  660 மீவி-1

  (c)

  156 மீவி-1

  (d)

  990 மீவி-1

 21. வாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் 

  (a)

  வெப்பநிலை 

  (b)

  அடர்த்தி 

  (c)

  ஒப்புமை ஈரப்பதம் 

  (d)

  இவையனைத்தும் 

 22. வௌவால் கேட்கக் கூடிய ஒலியின் திறன் 

  (a)

  <20,000 Hz 

  (b)

  =20,000 Hz 

  (c)

  2000 Hz 

  (d)

  >20,000 Hz 

 23. அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு நிகழ்வில் 

  (a)

  இறுக்கங்கள்,இருக்கங்களாகவே எதிரொலிக்கும் 

  (b)

  தளர்ச்சிகள்,இறுக்கங்களாக மாறும் 

  (c)

  இறுக்கங்களின் திசை மாறாது 

  (d)

  இவையனைத்தும் 

 24. காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை 

  (a)

  கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் 

  (b)

  திசுக்களைப் பாதிக்கும் 

  (c)

  மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும் 

  (d)

  அதிகமான வெப்பத்தை உருவாக்கும் 

 25. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.

  (a)

  காரீய ஆக்சைடு 

  (b)

  இரும்பு 

  (c)

  காரீயம் 

  (d)

  அலுமினியம் 

 26. விண்மீன்களில் ஆற்றல் ஏற்படுவது 

  (a)

  வேதிவினை 

  (b)

  பிளவு 

  (c)

  இலேசான அணுகருவினால் இணைப்பு 

  (d)

  கனமான அணுக்கரு இணைப்பு 

 27. \(_{ 4 }{ Be }^{ 9 }+_{ 2 }{ He }^{ 4 }\rightarrow _{ 6 }{ C }^{ 12 }+\_ \_ \_ \_ \_ \_ \_ \_ \_ \)

  (a)

  எலக்ட்ரான் 

  (b)

  புரோட்டான் 

  (c)

  நியூட்ரான் 

  (d)

  ஹைட்ரஜன் 

 28. பின்வருவனவற்றுள் எது ஒரு கிராமில் அதிக எண்ணிக்கை கொண்ட ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டுள்ளது?

  (a)

  (b)

  O2

  (c)

  O3

  (d)

  இவை அனைத்தும் ஒரே எண்ணிக்கை கொண்டது 

 29. தனிம வரிசை அட்டவணையில் முதல் தொடரில் உள்ள தனிமங்கள் 

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  8

 30. அணுக்கருவிற்கும் அயனியின் வெளிக்கூட்டு எலக்ட்ரானுக்கும் இடையே உள்ள தொலைவு 

  (a)

  அணு ஆரம் 

  (b)

  அயனி ஆரம் 

  (c)

  சகப்பிணைப்பு ஆரம் 

  (d)

  (ஆ) மற்றும் (இ)

 31. ஒரு கரைபொருளின் கரைத்திறன் என்பது _____________

  (a)

  கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மையைப் பொறுத்தது.

  (b)

  வெப்பநிலை 

  (c)

  அழுத்தம் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 32. பின்வரும் எந்த கரைசலில், கரைபொருள் மற்றும் கரைப்பான் திடநிலையில் உள்ளன?

  (a)

  தக்கை 

  (b)

  வெண்ணெய் 

  (c)

  உலோகக்கலவை 

  (d)

  புகை

 33. KNO3 ன் கரைத்திறன் வெப்பநிலை உயர்வைப் பொறுத்து 

  (a)

  அதிகரிக்கிறது

  (b)

  குறைகிறது 

  (c)

  மாற்றமடைவதில்லை 

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 34.  H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது

  (a)

  சிதைவுறுதல் வினை

  (b)

  சேர்க்கை வினை

  (c)

  ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

  (d)

  இரட்டை இடப்பெயர்ச்சி வினை

 35. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில்எவை சரியானவை?
  (i) இயக்கத்தன்மை உடையது.
  (ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
  (iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
  (iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

  (a)

  (i), (ii) மற்றும் (iii)

  (b)

  (i), (ii) மற்றும் (iv)

  (c)

  (ii), (iii) மற்றும் (iv)

  (d)

  (i), (iii) மற்றும் (iv)

 36. கால்சியம் ஆக்ஸைடு நீருடன் வினைபுரிந்து தருவது 

  (a)

  கால்சியம் ஹைட்ராக்சைடு 

  (b)

  கார்பன் டை ஆக்ஸைடு 

  (c)

  கால்சியம் ஆக்ஸைடு 

  (d)

  ஆக்சிஜன் வாயு 

 37. "A" என்ற தனிமம் திறந்த நிலையில் காற்றுடன் "B" என்ற சேர்மத்தை தருகிறது. "B" செம்பழுப்பு நிறம் உடையது. "A" மற்றும் "B" என்பவை _________________

  (a)

  'A' என்பது Ag, 'B' என்பது Ag2

  (b)

  'A' என்பது Cu, 'B' என்பது CuO 

  (c)

  'A' என்பது Mg,  'B' என்பது MgO 

  (d)

  'A' என்பது Fe, 'B' என்பது Fe2O3

 38. பின்வரும் எது வினைவேகத்தை பாதிக்கிறது?

  (a)

  புறப்பரப்பளவு 

  (b)

  அழுத்தம் 

  (c)

  வெப்பநிலை 

  (d)

  இவை அனைத்தும் 

 39. வளைய பியூட்டேன் ________ சேர்மத்திற்கு உதாரணம்.

  (a)

  வளைய

  (b)

  வளையமில்லா 

  (c)

  அரோமேட்டிக் 

  (d)

  அலிசைக்ளிக் 

 40. ஆல்கஹால் + அமிலம் \(\overset { con. { H }_{ 2 }SO_{ 4 } }{ \longrightarrow } \) எஸ்டர் இவ்வினை 

  (a)

  எஸ்டரை நீறார் பகுத்தல் 

  (b)

  எஸ்டராதல் 

  (c)

  நீர் நீக்கம் 

  (d)

  ஆக்ஸிஜனேற்றம் 

 41. வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்) மற்றும் நான்கு முனை ஆகிய அம்சங்களைக் கொண்டது ________ 

  (a)

  இருவித்திலை தாவர  தண்டு 

  (b)

  இருவித்திலை தாவர இலை 

  (c)

  ஒருவித்திலை தாவர வேர் 

  (d)

  இருவித்திலை தாவர வேர் 

 42. புரோட்டோசைல இடைவெளி என்பது ஒரு ________ ஆகும்  

  (a)

  தடித்தல் 

  (b)

  சைலம் அடுக்குதல் 

  (c)

  இடைவெளி 

  (d)

  எக்ஸார்க் சைலம் 

 43. தாவர வேரின் வெளிப்புற அடுக்கு ________ ஆகும் 

  (a)

  எபிபிளாமா 

  (b)

  புறணி 

  (c)

  புறத்தோல் 

  (d)

  ஸ்டீல் 

 44. முயலின் புற அமைவு நரம்பு மண்டலத்தில் ________ இணை மூளை நரம்புகளும் ___________ இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன. 

  (a)

  11, 36

  (b)

  12, 37

  (c)

  12, 36

  (d)

  10, 37

 45. அட்டை  _________ நீளம் வரை வளரக் கூடியது.

  (a)

  35 செ.மீ

  (b)

  45 செ.மீ

  (c)

  25 செ.மீ

  (d)

  20 செ.மீ

 46. நீராவிப்போக்கின்  பொழுது வெளியேற்றப்படுவது

  (a)

  கார்பன்டை ஆக்ஸைடு

  (b)

  ஆக்ஸிஜன்

  (c)

  நீர்

  (d)

  இவை ஏதுவுமில்லை

 47. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

  (a)

  எண்டேகார்டியம்

  (b)

  எபிகார்டியம்

  (c)

  மையோகார்டியம்

  (d)

  மேற்கூறியவை அனைத்தும்

 48. ___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.

  (a)

  'A' மட்டும் 

  (b)

  'B' வகை மட்டும்

  (c)

  'AB' மற்றும் 'O'

  (d)

  'A, B, AB' மற்றும் 'O'

 49. இரத்த சிவப்பணுக்களின் மற்றொரு பெயர் _________ ஆகும்.

  (a)

  எரித்ரோசைட்டுகள்

  (b)

  லியுக்கோசைட்டு

  (c)

  துகள்களுடைய செல்கள்

  (d)

  துகள்களற்ற செல்கள்

 50. இயல்பாக நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு ________ முறைகள் ஆகும்

  (a)

  80-90

  (b)

  70-90

  (c)

  50-60

  (d)

  70-80

 51. Part - B

  39 x 2 = 78
 52. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

 53. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.

 54. புவியின் நிறையைக் கணக்கிடுக.

 55. நிறை வரையறு.

 56. குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.

 57. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?

 58. வானியல் தொலைநோக்கியைக் கொண்டு புவிப்பரப்பில் உள்ள பொருள்களை காண இயலுமா?

 59. தொலைநோக்கிகளின் நன்மைகள், குறைபாடுகள் யாவை?

 60. நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு வேறுபடுத்துக.

 61. பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

 62. வெப்பப்படுத்துதல் என்றால் என்ன?

 63. நீள் வெப்ப விரிவு என்பது யாது?

 64. கடத்தி-காப்பான் --வேறுபடுத்துக. 

 65. டாப்ளர் விளைவு வரையறு.

 66. கேட்குநருக்கும் ஒலி மூலத்தை சார்பியக்கத்தின் வகைகள் யாவை?

 67. A - என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். இது α - துகளை வெளியிட்டு 104Rf259 என்ற தனிமத்தை உருவாகிறது எனில் A - தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் கண்டறிக.

 68. கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

 69. வளமைப் பொருட்கள் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.

 70. அணுக்கரு இணைவு,அணுக்கரு பிளவு வேறுபடுத்துக.

 71. மூலக்கூறு என்றால் என்ன?

 72. ஒத்த ஈரணு மூலக்கூறு மற்றும் ஒத்த அணு மூவணு மூலக்கூறு மூலக்கூறுகளுக்கு உதாரணம் கொடு.

 73. ஆவர்த்தன பண்புகள் யாவை?

 74. அறை வெப்ப நிலையில் திட நிலையில் காணப்படாத இரண்டு உலோகங்களைக் கூறு.

 75. தாமிர பாத்திரங்கள் பச்சை நிற படலத்தை உருவாக்குவதேன்?

 76. கரைபொருள் மற்றும் கரைப்பான் வரையறு

 77. நீரேற்றம் - வரையறு 

 78. மெட்டதிஸிஸ் வினை என்பது யாது?

 79. கிளர்வு ஆற்றல் என்றால் என்ன?

 80. ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?

 81. எரிசாராயம் எனப்படுவது யாது?

 82. TFM என்பது எதைக் குறிக்கிறது? 

 83. சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையின் படங்களை வரைந்து பாகங்களைக் குறி.

 84. மனிதனால் காற்றில்லா சுவாசத்தினை பயன்படுத்தி உயிர் வாழ முடியுமா? நியாயப்படுத்து.

 85. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது ?

 86. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட்  (வேறுபட்ட)  பல்லமைவு எனப்படுகிறது ?

 87. அட்டையின் வகைபாட்டின் நிலையை எழுதுக.

 88. அட்டைக்கு கண், காதுகள் இருக்கின்றனவா?

 89. இரத்த அழுத்தம் - வரையறு.

 90. ஸ்பிக்மோமானோமீட்டர் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுத்து.

 91. Part - C

  15 x 4 = 60
 92. இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-1 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?

 93. ஒரு துப்பாக்கி 50 g நிறையுள்ள குண்டினை 250 ms-1 வேகத்தில் சுடும்போது ஒரு மரத் தக்கையினுள் ஊடுருவிச் சென்று 1 ms-ல் ஓய்வில் உள்ளது. கணத்தாக்கு மற்றும் தக்கையால் செலுத்தப்படும் சராசரி விசை இவற்றை காண்க.

 94. ராஜா என்ற மாணவர் குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால், 
  1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
  2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

 95. ஒளிவிலகல் எண் \({ \mu }_{ 2 }\) கொண்ட ஒரு குவிலென்சு, ஒலிவிலகல் எண் \({ \mu }_{ 1 }\) உடைய ஒரு ஊடகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. லென்சின் மீது ஒரு ஒளியின் இணைக்கற்றைகள் விழுகின்றன. \({ \mu }_{ 1 }\) மற்றும் \({ \mu }_{ 2 }\) கீழ்கண்டவாறு இருந்தால், குவிலென்சிலிருந்து வெளிவரும் கதிர்களின் பாதையை வரைக.
  (a) \({ \mu }_{ 1 }>{ \mu }_{ 2 }\)
  (b) \({ \mu }_{ 1 }={ \mu }_{ 2 }\) 
  (c) \({ \mu }_{ 1 }<{ \mu }_{ 2 }\).

 96. உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?

 97. நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.

 98. வோல்ட் வரையறு.

 99. 100 w பல்பு 680 mA மின்னோட்டத்தைத் தருகிறது. 30 C மின்சுமை அதன் வழியே செல்லத் தேவையான கால அளவு யாது?

 100. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?

 101. வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 300 மீவி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?

 102. சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடப்பெயர்வு விதியைக் கூறுக.

 103. Ga-150 யின் \(\alpha \) சிதைவிற்கான சமன்பாட்டை எழுது.

 104. 2 கி NaOH-ல் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

 105. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக


 106. அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
  ஆ] அதன் வகைகளைக் கூறு.
  இ] உதாரணம் தருக.

 107. Part - D

  11 x 7 = 77
 108. மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.

 109.  கிட்டப்பார்வை [அல்லது] மையோபியா குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.

 110. திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.

 111. ஓம் விதியினைக் கூறி அதன் வரைபடத்தினை விவரி.

 112. அணுக்கரு இணைவு எடுத்துக்காட்டுடன் விவரி.

 113. காந்தத் தன்மை உடைய தாதுக்களில் உள்ள மாசுக்களை நீக்கும் முறையை விளக்குக.

 114. i) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
  ii) கரைதிறன் - வரையறு.

 115. மீளாவினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 116. சோப்பை விட டிடர்ஜெண்ட்களை பயன்படுத்துவது அதிக நன்மைகளை தருகிறது. அதற்கான காரணங்களை பட்டியலிடுக.

 117. முயலின் சுவாச மண்டலத்தை விளக்குக.

 118. ABO இரத்த வகைகளைப் பற்றி குறிப்பெழுதுக.

 119. 7 Marks Problems

  4 x 7 = 28
 120. கீல் (keel) முனையில் இருந்து 90செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு:

 121. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.

 122. இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?

 123. 0.001 M செறிவுள்ள ஹைட்ரோ குள�ோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பைப்பை காண்க

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 10th Standard Science Important Questions with Answer key )

Write your Comment