சுழற்சியும், தற்சுழற்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    9 x 1 = 9
  1. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    (a)

    மடக்கின் தொடக்கத்தில்

    (b)

    ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்

    (c)

    ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்

    (d)

    நெறிமுறையின் தொடக்கத்தில்

  2. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)

    (a)

    11

    (b)

    10

    (c)

    9

    (d)

    8

  3. தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு 

    (a)

    நிரலாக்க 

    (b)

    எந்திர 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  4. ஒரே செயல் தான் மீண்டும் மீண்டும் செயல்படுவது 

    (a)

    நிரலாக்கம்

    (b)

    சுழற்சி 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  5. தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை 

    (a)

    solver ( input )

    (b)

    if (input)

    (c)

    while(input)

    (d)

    எதுவுமில்லை 

  6. பின்வருவனவற்றுள் எது நிபந்தனை மெய் என இருக்கும் வரை மடக்கின் உடற்பகுதி மீண்டும் மீண்டும் செயல்படும்?

    (a)

    மதிப்பளிப்பு

    (b)

    சுழற்சி

    (c)

    நிரலாக்கம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  7. பின்வருவனவற்றுள் எது சுழற்சியோடு நெருங்கிய தொடபுடைய மற்றொரு வடிவமைப்பு நுட்பம்?

    (a)

    பிரித்தல் 

    (b)

    அருவமாக்கம்

    (c)

    மெருகேற்றம்

    (d)

    தற்சுழற்சி

  8. மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தும்போது _____ மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.

    (a)

    நிலை

    (b)

    மாறிகள்

    (c)

    செயல்

    (d)

    இவை அனைத்தும்

  9. தற்சுழற்சி தீர்ப்பானில் குறைந்தது ________ அடிப்படை நிலை இருக்க வேண்டும்?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    1

  10. 6 x 2 = 12
  11. மாற்றமிலி என்றால் என்ன?

  12. மடக்கு மாற்றமிலியை வரையறுக்கவும்.

  13. மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?

  14. தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?

  15. தற்சுழற்சி என்றால் என்ன?

  16. சுழற்சி என்றால் என்ன?

  17. 3 x 3 = 9
  18. ஒரு மேஜையில் 7 குவளைகள் தலைகீழாக இருக்கின்றன. எந்த இரண்டு குவளைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் திருப்புவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எல்லா குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சா சாத்தியமா? (குறிப்பு: தலைகீழாக இருக்கும் குவளைகளுடைய எண்ணிக்கையின் சமநிலை மாறாது).

  19. தொடக்க நிலையில் (u,v) = (20, 15) என்று இருக்கும்போது, பின்வரும் மதிப்பிருத்தல் செய்ல்படுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
    --before u, v=20, 15
    u, v = u+5, v-5
    -- after u, v = 25, 10
    மதிப்பிருத்தலின் முடிவில், (u, v = 20, 15) என இருக்கும். ஆனால், u + v என்ற செயல்கூறின் மதிப்பைப் பற்றி நீவீர் உற்றுநோக்குவது என்ன?

  20. p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது  காண்பி.

  21. 2 x 5 = 10
  22. power தற்சுழற்சியை பின்வருமாறு வரையறுக்கலாம்.
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times a^{ n-1 } & if\quad n\quad is\quad odd \\ { a }^{ n/2 }\times { a }^{ n/2 } & if\quad n\quad is\quad even \end{matrix} \right\} \)
    வரையறையைப் பயன்படுத்தி தற்சுழற்சி நெறிமுறையை உருவாக்கவும். கணக்கிட எத்தனை முறை பெருக்க வேண்டும்? 

  23. m, n:=m + 2, n-1 என்று மதிப்பிருத்தலின் m, n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில், m + 3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க:

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - சுழற்சியும், தற்சுழற்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Iteration and recursion Model Question Paper )

Write your Comment