இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

 2. புவியின் விட்டத்திற்கு சமமான அடிக்கோட்டுடன் 1°55′ கோணத்தை சந்திரன் உருவாக்குகிறது எனில், புவியிலிருந்து சந்திரனின் தொலைவு என்ன?
  (புவியின் ஆரம் 6.4 × 106m )

 3. ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.

 4. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
  0.007

 5. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
  5213.0

 6. புவியிலிருந்து ஜீபிடரின் தொலைவு 824.7 மில்லியன் km. அதன் அளவிடப்பட்ட கோண  விட்டம் 35.72" எனில் ஜீபிடரின் விட்டத்தை கணக்கிடுக

 7. ஒரு தனி ஊசலின் நீளத்தின் அளவிடப்பட்ட மதிப்பு 20 cm மற்றும் 2 mm துல்லியத் தன்மை கொண்டது. மேலும் 50 அலைவுகளுக்கான கால அளவு 40 s மற்றும் பகுதிறன் 1 s ஆகும் எனில் புவியீர்ப்பு முடுக்கம் (g) கணக்கிடுதலில் துல்லியத்தின் சதவீதத்தைக் கணக்கிடுக

 8. சராசரி தனிப்பிழை என்றால் என்ன?

 9. ஒப்பீட்டுப்பிழை என்றால் என்ன?

 10. விழுக்காட்டுப்பிழை என்றால் என்ன?

 11. மிக நீண்ட தொலைவுகளை அளவிடப் பயன்படும் இரண்டு அலகுகளைக் குறிப்பிடுக.

 12. அளவீடு செய்தலில் 'பிழை' என்றால் என்ன? இதனால் அளவீடுகளில் ஏற்படும் தாக்கம் யாது?

 13. அளவிடுதலில் பயன்படுத்தப்படும் கூறுகள் யாவை? தெளிவுபடுத்து.

 14. இயற்பியலில் கால அளவு மற்றும் நிறைகளின் வீச்சு பற்றி கூறு.

 15.  தொழில் நுட்பத்தில் இயற்பியலின் பங்கு யாது?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் Chapter 1 இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் - ( 11th Physics Chapter 1 Nature Of Physical World And Measurement Two Marks Questions )

Write your Comment