இயக்கவியல் முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.

    (a)

    (b)

    (c)

    (d)

  2. பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

    (a)

    \(\hat{i}+\hat {j}\)

    (b)

    \({\hat{i}\over \sqrt{2}}\)

    (c)

    \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

    (d)

    \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

  3. துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும் எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம் _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    சுழி

  4. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.

    (a)

    \({R}_{30°}={R}_{60°}\)

    (b)

    \({R}_{30°}=4{R}_{60°}\)

    (c)

    \({R}_{30°}={{R}_{60°}\over 2}\)

    (d)

    \({R}_{30°}=2{R}_{60°}\)

  5. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  6. விசை ஒரு _____ அளவு

    (a)

    ஸ்கேலார்

    (b)

    வெக்டர்

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவுமில்லை

  7. எப்பொழுது பொருளின் உந்தம் மாறாது?

    (a)

    F =0

    (b)

    J =0

    (c)

    M =0, V =0

    (d)

    mv =0

  8. பொருளின் நிறையானது 10kg அதன் திசைவேகம் 25ms-1 எனில் உந்தம் _______ 

    (a)

    100 kg ms-1

    (b)

    100 N

    (c)

    250 N

    (d)

    250 kg ms-1

  9. ஒய்வு நிலையில் இருக்கும் துகள், கிடைத்தளத்தில் நேர்க்கோட்டில் சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது. நான்காவது மற்றும் மூன்றவாது நொடிகளில், அது கடந்த தொலைவுகளின் தகவு _______ 

    (a)

    \(\frac { 3 }{ 4 } \).

    (b)

    \(\frac { 26 }{ 4 } \)

    (c)

    \(\frac { 7 }{ 5 } \)

    (d)

    2

  10. தடங்கலின்றித் தானே கீழே விழும் பொருள் 1,2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு ______ 

    (a)

    1:2:3

    (b)

    1:3:5

    (c)

    1 :4:9

    (d)

    9:4:1

  11. 7 x 2 = 14
  12. \(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j},\) எனில் \(3\overrightarrow{A}\) ஐக் காண்க.

  13. படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow{A}\) வெக்டரிலிருந்து \(4\overrightarrow{A}\) மற்றும் \(-4\overrightarrow{A}\) ஜக் காண்க.

  14. கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடுக \({\overrightarrow{F}}_{1}+{\overrightarrow{F}}_{2}+{\overrightarrow{F}}_{3}={\overrightarrow{F}}_{4}\)

  15. கொடுக்கப்பட்ட சார்பு x = A0 + A1t + A2 t2 இன் வகைக்கெழுவினை t ஐ பொறுத்துக் காண்க. இங்கு A0, A1 மற்றும் A2 ஆகியவை மாறிலிகள் ஆகும்.

  16. ஒரு பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா தருக.

  17. இரு பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா. தருக.

  18. முப்பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா. தருக.

  19. 7 x 3 = 21
  20. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) இன் எண்மதிப்பையும், \(\overrightarrow{A}\) வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) திசையையும் காண்க.

  21. எதிர்க்குறி x, y மற்றும் z அச்சுத் திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?

  22. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் அவற்றின் கூறுகள் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. \(\overrightarrow{A}=5\hat{i}+7\hat{j}-4\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=6\hat{i}+3\hat{j}+2\hat{k}\) எனில் கீழ்கண்டவற்றைக் காண்க.
    \(\overrightarrow{A}+\overrightarrow{B},\ \ \overrightarrow{B}+\overrightarrow{A},\ \overrightarrow{A}-\overrightarrow{B}, \ \ \overrightarrow{B}-\overrightarrow{A}\)

  23. பறக்கும் நேரம் (T1) க்கான கோவையைப் பெறுக.

  24. நிலைவெக்டர் பற்றி விவரி.

  25. முடுக்கிவிடப்பட்ட இயக்கம்?

  26. ஒரு புகைவண்டியின் நீளம்  20 m . அது 40 km/h வேகத்தினால் இயங்கியங்குகிறது எனில் 500 m நீளமுள்ள பாலத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?

  27. 1 x 5 = 5
  28. y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் Chapter 2 இயக்கவியல் முக்கிய வினாத்தாள் ( 11th Physics Chapter 2 Kinematics Important Question Paper )

Write your Comment