+1 Physics Volume I- Sample 1 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 
    50 x 1 = 50
  1. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

    (a)

    0.007 m2

    (b)

    2.64 x 1024 kg

    (c)

    0.0006032 m2

    (d)

    6.3200 J

  2. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [ML3T-2]

    (b)

    [M-1L3T-2]

    (c)

    [M-1L-3T-2]

    (d)

    [ML-3T2]

  3. 0ε0)-1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

    (a)

    நீளம்

    (b)

    காலம்

    (c)

    திசைவேகம்

    (d)

    விசை

  4. பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.

    (a)

    \(\sqrt{hG\over c^{3\over2}}\)

    (b)

    \(\sqrt{hG\over C^{5\over2}}\)

    (c)

    \(\sqrt{hc\over G}\)

    (d)

    \(\sqrt{Gc\over h^{3\over2}}\)

  5. பொருளொன்றின் திசைவேகம் \(V={x\over t}+yt\) ல்  xன் பரிமான வாய்ப்பாடு _____

    (a)

    ML0T0

    (b)

    M0L0T0

    (c)

    M0LT0

    (d)

    M0L0T

  6. ஒரே மாதிரியான பரிமாணங்கள் பெற்றுள்ளவை ______

    (a)

    விசையும் உந்தமும் 

    (b)

    தகைவும் திரிபும் 

    (c)

    அடர்த்தியும் நீளடர்த்தியும் 

    (d)

    வேலையும் நிலையாற்றலும் 

  7. நிறை மற்றும் வேகத்தினை கொண்டு ஒரு பொருளின் இயக்க ஆற்றல் கணக்கிடப்படுகின்றது. நிறை மற்றும் வேகத்தின் சதவீதப் பிழைகள் முறையே 2% மற்றும் 3% எனில், அடர்த்தியில் விழுக்காடு பிழை______ 

    (a)

    12%

    (b)

    10%

    (c)

    8%

    (d)

    2%

  8. பின் வருவனவற்றுள்ள எவ்வகை இயற்பியல் இடைப்பட்ட நீள் அளவைக் குறிக்கிறது.

    (a)

    மேக்ரோ ஸ்கோபிக் இயற்பியல்

    (b)

    மீசோ ஸ்கோபிக் இயற்பியல்

    (c)

    மைக்ரோஸ்க்கோபிக்

    (d)

    எல்லாவற்றையும்

  9. பின்னப்பிழை \(\frac { \triangle x }{ x } \) ______

    (a)

    ± \(\left( \frac { \triangle a }{ a } \right) \)

    (b)

    ±n \(\left( \frac { \triangle a }{ a } \right) \)

    (c)

    ±n loge \(\left( \frac { \triangle a }{ a } \right) \)

    (d)

    ± n log10\(\left( \frac { \triangle a }{ a } \right) \)

  10. 1 AU ன் மதிப்பு 1000 km ல்______

    (a)

    1.5 x 105 m

    (b)

    2.5 x 106 m

    (c)

    1.5 x 1011 m

    (d)

    2.5 x 1010 m

  11. பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

    (a)

    நிறை

    (b)

    நீளம்

    (c)

    உந்தம்

    (d)

    முடுக்கத்தின் எண்மதிப்பு

  12. துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும் எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம் _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    சுழி

  13. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  14. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.

    (a)

    \({R}_{30°}={R}_{60°}\)

    (b)

    \({R}_{30°}=4{R}_{60°}\)

    (c)

    \({R}_{30°}={{R}_{60°}\over 2}\)

    (d)

    \({R}_{30°}=2{R}_{60°}\)

  15. விசை - காலம் வரைபடத்தின் கீழ் உள்ள பரப்பளவு குறிப்பது______ 

    (a)

    உந்தம்

    (b)

    இரட்டை 

    (c)

    விசையின் திருப்புத்திறன்

    (d)

    விசையின் தாக்கம்

  16. கீழ்க்கண்டவற்றுள் எது வெக்டர்?

    (a)

    வேலை 

    (b)

    இயக்க ஆற்றல்

    (c)

    திறன்

    (d)

    கோண உந்தம்

  17. இரு சம வெக்டர்களின் தொகுப்பயன் விக்டரின் என்மதிப்பு அவற்றின் ஏதேனும் ஒரு விக்டரின் எண் மதிப்பிறகு சமமீனில் இரு வெக்டர்களுக்கும் இடையேயான கோணம்_____ 

    (a)

    600

    (b)

    900

    (c)

    1000

    (d)

    1200

  18. u திசைவேகத்தில் h உயரத்தில் கிடைத்தளத்தில் பறந்து கொண்டிருக்கும் ஆகாய விமானத்திலிருந்து கீழே போடப்பட்ட உணவு பொட்டலம் தரையை வந்தடையாய் எடுத்துக் கொள்ளும் காலம்______ 

    (a)

    \(\sqrt{2hg}\)

    (b)

    \(\sqrt{2h\over g}\)

    (c)

    \(\sqrt{h\over 2g}\)

    (d)

    \(\sqrt{u\over h}\)

  19. \(\overrightarrow { A } \) மற்றும் \(\overrightarrow { B } \) என்ற இரு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்க வேண்டுமெனில்______

    (a)

    \(\overrightarrow { A } +\overrightarrow { B } =0\)

    (b)

    \(\overrightarrow { A } -\overrightarrow { B } =0\)

    (c)

    \(\overrightarrow { A } \times\overrightarrow { B } =0\)

    (d)

    \(\overrightarrow { A } .\overrightarrow { B } =0\)

  20. எறி பொருளின் இயக்கமானது______ 

    (a)

    தொடக்க திசைவேகம் மாறாத மதிப்பைப் பெற்றிருக்காது

    (b)

    இரு திசைவேகங்களின் கூட்டு விளைவு

    (c)

    ஒரு பரிமாணமுடையது

    (d)

    புவி ஈர்ப்பு விசையைச் சார்ந்ததல்ல

  21. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நி்றை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நி்றையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நி்லையில் கி்டைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?

    (a)

    mg ஐ விடக் குறைவு

    (b)

    mg க்குச் சமம்

    (c)

    mg ஐ விட அதிகம்

    (d)

    கண்டறிய முடியாது

  22. நேர்க்குறி x அச்சுதிசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடைபெறுவது எது?

    (a)

    எதிர்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்.

    (b)

    நேர்க்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்.

    (c)

    வாகனத்தின் மீது எவ்வித உராய்வு விசையும் செயல்படாது.

    (d)

    கீழ்நோக்கிய திசையில் உராய்வுவிசை செயல்படும்.

  23. எதிர்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் "தனித்த பொருள் விசை படத்தை" தேர்ந்தெடு (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)

    (a)

    (b)

    (c)

    (d)

  24. பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும்போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?

    (a)

    பொருளின் மீதான தொகுபயன் விசைசுழி

    (b)

    பொருளின்மீது விசை ஏதும் செயல்படவில்லை

    (c)

    பொருளின் மீது புறவிசை மட்டும் செயல்படுகிறது.

    (d)

    இயக்க உராய்வு மட்டும் செயல்படுகிறது.

  25. நியூட்டனின் முதல் இயக்க விதியிலிருந்து அறியப்படும் கருத்து_______

    (a)

    ஆற்றல்

    (b)

    வேலை

    (c)

    உந்தம்

    (d)

    நிலைமம்

  26. 20 m/s வேகத்தில் பாயும் 150 கிராம் நிறை கொண்ட பந்தைப் பிடிக்க, விளையாடுபவர் 0.1 செகண்ட் காலம் எடுத்தால், அவரது கையைத் தாக்கும் விசை_____

    (a)

    75 N

    (b)

    300 N

    (c)

    25 N

    (d)

    30 N

  27. கிடைத்தளப் பரப்பில், மாறாத வேகத்தில் இயங்கும் பொருள், எதைப் பெற்றிருக்காது?

    (a)

    திசைவேகம்

    (b)

    உந்தம்

    (c)

    இயக்க ஆற்றல்

    (d)

    முடுக்கம்

  28. ஒரு பொருளின் மீது 10 N விசை செயல்பட்டு, 10 ms-1 என்ற சீரான திசைவேகத்தில், சமதளப் பரப்பின்மீது இயங்கிக் கொண்டிருக்கிறது. பரப்பிற்கும், பொருளுக்கும் இடையேயான உராய்வு விசை_______ 

    (a)

    1N 

    (b)

    -10N

    (c)

    10N 

    (d)

    100N

  29. ஒரு கட்டியின் நிறை M கிடைமட்ட உராய்வற்ற பரப்பின் மீது m நிறையுடைய கயிற்றினால் இழுக்கப்படுகிறது.கயிற்றின் பளு இல்லாத முனையில் விசை செயல்படுத்தப்படுகிறது.கட்டின் மீது கயிற்றால் அளிக்கப்படும் விசை?   

    (a)

    \(\frac{MF}{M +m } \)

    (b)

    \(\frac{M +m } {MF}\)

    (c)

    \(\frac {M}{M-m }.F \)

    (d)

    \(\frac {M-m }{M}.F \)

  30. ஒரு சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கட்டி அதன் சாய்வுடன் உண்டாக்கும் கோணம் \(\theta\).பிளாக் நிலையான வேகத்துடன் தளத்தில் கீழே நழுவுகிறது எனில் உராய்வுக் குணகம் இதற்குச் சமம்_______

    (a)

    sin\(\theta\) 

    (b)

    cos\(\theta\) 

    (c)

    (d)

    tan\(\theta\) 

  31. \((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது  \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை _______.

    (a)

    9J

    (b)

    6J

    (c)

    10J

    (d)

    12J

  32. 80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் _______.

    (a)

    \(\sqrt { 2 } :1\)

    (b)

    \(1:\sqrt { 2 } \)

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  33. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால்  செய்யப்பட்ட வேலை?

    (a)

    எப்போதும் எதிர்குறியுடையது

    (b)

    சுழி

    (c)

    எப்போதும் நேர்குறியுடையது

    (d)

    வரையறுக்கப்படாதது

  34. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

    (a)

    v

    (b)

    v2

    (c)

    v3

    (d)

    v4

  35. 1 கிராம் மற்றும் 9 கிராம் நிறை கொண்ட இரு பொருட்கள் ஒரே இயக்க ஆற்றலுடன் இயங்கினால் அவற்றின் நேர்கோட்டு உந்தங்களின் என் மதிப்புகளின் விகிதம் 

    (a)

    1 : 9

    (b)

    9 : 1

    (c)

    1 : 3

    (d)

    3 : 1

  36. பொருள் ஒன்றின் நிறை பாதியாக்கப்பட்டு, வேகம் இரு மடங்கானல், அதன் இயக்க ஆற்றல் 

    (a)

    2 மடங்காகும் 

    (b)

    4 மடங்காகும் 

    (c)

    8 மடங்காகும் 

    (d)

    மாறாது 

  37. 60 அடி உயர கட்டத்திலிருந்து 2kg மற்றும் 4 கஃ நிறையுள்ள இரு பந்துகள் அமைதி நிலையிலிருந்து புவியை நோக்கி விடப்படுகிறது. 30 அடி உயரத்தில் அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்?

    (a)

    \(\sqrt{2}\) :1

    (b)

    1 : 4

    (c)

    1 : 2

    (d)

    1 : \(\sqrt{2}\)

  38. ஒரு பொருளின் திசைவேகம் இரு மடங்காகும் போது, அதன் இயக்க ஆற்றல்

    (a)

    2 மடங்காகும்

    (b)

    0.5 மடங்காகும்

    (c)

    4 மடங்காகும்

    (d)

    6 மடங்காகும்

  39. ஒரு சீரான பாதையின் மீது ஒரு கார் முடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடக்க திசை வேகத்தில் 3 மடங்கினை அடைகிறது. இதனால் காரின் நிலை ஆற்றல்.

    (a)

    மாறாது 

    (b)

    தொடக்கம் போல் இருமடங்கு

    (c)

    தொடக்கம் போல் 4 மடங்காகும்.

    (d)

    தொடக்கத்தைப் போல் 16 மடங்காகும்.

  40. ஒரு துகள் 60கோணத்தில் 'E' என்ற இயக்க ஆற்றலுடன் கிடைத்தளத்தில் எறியப்படுகிறது. பெருமப்  புள்ளியில் இயக்க ஆற்றல் 

    (a)

    E

    (b)

    \(\frac {E}{2}\)

    (c)

    \(\frac {E}{4}\)

    (d)

    சுழி

  41. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.

    (a)

    துகள்களின் நிலை

    (b)

    துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

    (c)

    துகள்களின் நிறை

    (d)

    துகளின் மீது செயல்படும் விசை

  42. துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம் ______.

    (a)

    சுழி

    (b)

    x ஐப் பொருத்து அதிகரிக்கிறது

    (c)

    x ஐப் பொருத்து குறைகிறது

    (d)

    மாறாதது

  43. துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது.

    (a)

    வட்டத்தின் மையத்தை

    (b)

    வட்டப்பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியை

    (c)

    வட்டத்தின் உள்ளே ஏதேனும் ஒரு புள்ளியை

    (d)

    வட்டத்தின் வெளியே ஏதேனும் ஒரு புள்ளியை

  44. கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.

    (a)

    சுழி

    (b)

    v0

    (c)

    \(\sqrt { 2 } { v }_{ 0 }\)

    (d)

    2v0

  45. m  மற்றும் 4m நிறை கொண்ட இரு வாகனங்கள் முறையே r மற்றும் 2r ஆரம் கொண்ட வட்டப் பாதைகளில் இயங்குகின்றன. அவற்றின் வட்டப் பாதைகளை ஒரு முறை சுற்றி வர இரண்டும் ஒரே நேரம் எடுத்தால், முதல் மற்றும் இரண்டாம் வாகனத்தின் கோணத் திசைவேகங்களின் விகிதம் 

    (a)

    8 : 1

    (b)

    4 : 1

    (c)

    2 : 1

    (d)

    1 : 1

  46. ஒரு வட்டத்தட்டு  அலுமினியத்தாலும், இரும்பாலும் உருவாக்கப்பட வேண்டும். ஓரு வடிவியல் அச்சு சார்ந்து, இதன் நிலைமத் திருப்புத்திறன் பெருமமாக இருக்க இதனை எவ்வாறு வடிவமைக்க வேண்டும்?

    (a)

    அலுமினியம் உட்பகுதியிலும், இரும்பு வெளிப்பகுதியிலும் இருக்க வேண்டும் 

    (b)

    இரும்பு உட்பகுதியிலும், அலுமினியம் வெளிப்பகுதியிலும் இருக்க வேண்டும் 

    (c)

    அலுமினியமும், இரும்பும் அடுத்தடுத்து வரிசை வரிசையாக இருக்க வேண்டும் 

    (d)

    இரு இரும்பு தகடுகள் இரு வெளிப்பகுதிகளிலும், அலுமினியம் தகடு இடைப்பட்ட பகுதியிலும் இருக்க வேண்டும் 

  47. கோண உந்தம் என்பது எவற்றின் வெக்டர் பெருக்கல் ஆகும்?

    (a)

    நேர்கோட்டு உந்தம் மற்றும் ஆரவெக்டர் 

    (b)

    நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் 

    (c)

    நேர்கோட்டு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம் 

    (d)

    நேர்கோட்டுத் திசைவேகம்  மற்றும் ஆரவெக்டர் 

  48. ஒரு வட்டத்தட்டு \(\omega \)என்ற கோணத் திசைவேகத்தில் சுழல்கிறது. ஒரு குழந்தை அதில் சென்று அமர்ந்தால், கீழ்க்கண்டவற்றுள் எது மாறாது?

    (a)

    நேர்கோட்டு உந்தம் 

    (b)

    கோண உந்தம் 

    (c)

    இயக்க ஆற்றல் 

    (d)

    நிலைமத் திருப்புத்திறன் 

  49. ஒரு சீரான வட்டவடிவ அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன் வட்டிற்கு செங்குத்தாகவும் ___ வழியாகவும் செல்கிறது.

    (a)

    B

    (b)

    D

    (c)

    A

    (d)

    C

  50. மிதிவண்டி ஓட்டுபவரின் மீது வளைவு பாதையில் செயல்படும் திருப்பு விசைகள்

    (a)

    புவிஈர்ப்பு விசை, மைய விலக்கு விசையால்

    (b)

    மைய நோக்கு விசை புவிஈர்ப்பு விசை

    (c)

    சுழற்சி இயக்க ஆற்றல் இடப்பெயர்ச்சி இயக்க ஆற்றல்

    (d)

    இணையான விசைகள்

*****************************************

Reviews & Comments about +1 இயற்பியல் தொகுதி I- 1 மதிப்பெண் மாதிரி வினாக்கள் ( +1 Physics Volume I- Sample 1 mark Questions )

Write your Comment