ஈர்ப்பியல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது _____.

    (a)

    அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும் 

    (b)

    அனைத்து புள்ளிகளிலும்

    (c)

    அண்மை  நிலலயில் மட்டும்

    (d)

    எப்புள்ளியிலும் அல்ல

  2. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை_____.

    (a)

    மாறாது 

    (b)

    2 மடங்கு அதிகரிக்கும்

    (c)

    4 மடங்கு அதிகரிக்கும்

    (d)

    4 மடங்கு குறையும்  

  3. புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g _____.

    (a)

    மாறாது 

    (b)

    \(\frac{g}{2}\)

    (c)

    2g 

    (d)

    4g

  4. கீழ்கண்டவைகளில் எவை மாறிலி?

    (a)

    கோளின் நேர்கோட்டு உந்தம்

    (b)

    கோளின் கோண உந்தம்

    (c)

    கோளின் மொத்த ஆற்றல்

    (d)

    கோளின் நிலை ஆற்றல்

  5. ஓராண்டு காலத்தில் புவியின் மீது சூரியன் செய்த வேலையின் அளவு_____.

    (a)

    சுழி

    (b)

    சுழி அல்ல

    (c)

    நேர்குறி மதிப்புடையது

    (d)

    எதிர்குறி மதிப்புடையது

  6. குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்?

    (a)

    நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக

    (b)

    எப்போதும் நேர்குறி

    (c)

    எப்போதும் எதிர்குறி

    (d)

    எப்போதும் சுழி

  7. 4 x 2 = 8
  8. புவி நிலைத்துணைக்கோள் என்றால் என்ன? துருவ துணைக்கோள் என்றால் என்ன?

  9. ஒவ்வொரு மாதமும் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் நடைபெறுவது இல்லை.ஏன்?

  10. புவியானத்து தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

  11. ஒரு வால்மீன் நிலாவின் மீது திடீரென மோதி நிலாவின் மொத்த ஆற்றலை விட அதிக ஆற்றலை நிலாவுக்கு தந்தாளல் என்ன நிகழும்?

  12. 2 x 3 = 6
  13. "கோடை காலமும் குளிர் காலமும் புவியில் ஏற்படுவது எவ்வாறு" என்ற வினாவுக்கு மாணவர் ஒருவர் புவி நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, புவி சூரியனுக்கு அருகே வரும்போது (அண்மை நிலை) கோடை காலமும் சூரியனை விட்டு விலகி அதிகத் தொலைவில் உள்ளபோது (சேய்மைநிலை) குளிர் காலமும் தோன்றுகிறது என பதில் அளிக்கிறார். மாணவரின் பதில் சரியா? இல்லை எனில் கோடையும் குளிர் களமும் தோன்றும் காரணத்தை விளக்குக. 

  14. 2018 ஜனவரி 31 தேதி நடைபெற்ற சந்திர கிரகணத்தின் வெவ்வேறு நிலைகளை புகைப்படம் காட்டுகின்றது. இப்புகைப்படத்தின் அடிப்படையில் புவி கோள வடிவமுடையது என நிரூபிக்க முடியுமா?

  15. 2 x 5 = 10
  16. படத்தில் காட்டியுள்ளபடி, 10 மீ தொலைவில் நிறைகள் m1 மற்றும் m2 அமைந்துள்ளன. இரு நிறைகளுக்கும் இடையேயான ஈர்ப்பியல் விசையை கணக்கிடுக. ஒவ்வொரு நிறையின் மீது செயல்படும் விசையின்திசையினை வரைக.
    (m= 1kg; m= 2kg)

  17. குன்றின்  உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - ஈர்ப்பியல் Book Back Questions ( 11th Physics - Gravitation Book Back Questions )

Write your Comment