ஈர்ப்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது _____.

    (a)

    அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும் 

    (b)

    அனைத்து புள்ளிகளிலும்

    (c)

    அண்மை  நிலலயில் மட்டும்

    (d)

    எப்புள்ளியிலும் அல்ல

  2. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்_____.

    (a)

    64.5

    (b)

    1032

    (c)

    182.5

    (d)

    730

  3. புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் _____.

    (a)

    எப்பொழுதும் நேர்க்குறி உடையது 

    (b)

    எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

    (c)

    நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

    (d)

    எப்போழுதும் சுழி 

  4. புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை _____.

    (a)

    எப்பொழுதும் சுழி 

    (b)

    எப்பொழுதும் நேர்குறி உடையது 

    (c)

    நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

    (d)

    எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

  5. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது_____.

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாறாது 

    (d)

    அதிகரித்து பின்பு குறையும் 

  6. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg  நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு_____.

    (a)

    98N 

    (b)

    சுழி 

    (c)

    49N 

    (d)

    9.8N 

  7. ஒரு பொருளின் நிறை 500g மேல்நோக்கி திசைவேகத்துடன் சுற்றுகிறது. 20 s க்கு பிறகு புவிப்பரப்பை திரும்ப அடைகிறது. எனில் அக்கோளில் பொருளின் மீதான எடை

    (a)

    2N

    (b)

    4N

    (c)

    5N

    (d)

    1N

  8. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை

    (a)

    முடிவிலி

    (b)

    சுழி

    (c)

    பூமியின் பரப்பின் மீதான எடைக்கு சமம்

    (d)

    5 மடங்கு

  9. 10 x 2 = 20
  10. கெப்ளரின் விதிகளைக் கூறு.

  11. கோளின் கோண உந்தம் மாறுமா? உன் விடையை நிரூபி.

  12. ஈர்ப்பு நிலை ஆற்றல்-வரையறு.

  13. புவியின் விடுபடு வேகம் என்றால் என்ன?

  14. எடை - வரையறு 

  15. ஒரு கோளின் கோண உந்தம்  \(\overrightarrow { L } =5{ t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } \) எனில் கோளின் மீது செயல்படும் திருப்பு விசை, கோண உந்தத்தின் திசையில் செயல்படுமா?

  16. புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே  200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?

  17. கெப்ளரின் விதிகளுக்கு அடிப்படை யாது?

  18. ஈர்ப்பியல் விசையின் தன்மை யாது?

  19. "கோள்களின் பின்னோக்கு இயக்கம்" என்றால் என்ன? 

  20. 4 x 3 = 12
  21. "கோடை காலமும் குளிர் காலமும் புவியில் ஏற்படுவது எவ்வாறு" என்ற வினாவுக்கு மாணவர் ஒருவர் புவி நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, புவி சூரியனுக்கு அருகே வரும்போது (அண்மை நிலை) கோடை காலமும் சூரியனை விட்டு விலகி அதிகத் தொலைவில் உள்ளபோது (சேய்மைநிலை) குளிர் காலமும் தோன்றுகிறது என பதில் அளிக்கிறார். மாணவரின் பதில் சரியா? இல்லை எனில் கோடையும் குளிர் களமும் தோன்றும் காரணத்தை விளக்குக. 

  22. கோள்களின் பரப்பு விதியினை விவரி.

  23. கெப்ளரின் சுற்றுக்காலங்களின் விதியினைக் கூறு.

  24. தொடுவிசை, தொடாவிசை விவரி.

  25. 2 x 5 = 10
  26. குன்றின்  உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?

  27. குறுக்குக்கோட்டைப் பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - ஈர்ப்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Gravitation Model Question Paper )

Write your Comment