ஈர்ப்பியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. "கோடை காலமும் குளிர் காலமும் புவியில் ஏற்படுவது எவ்வாறு" என்ற வினாவுக்கு மாணவர் ஒருவர் புவி நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, புவி சூரியனுக்கு அருகே வரும்போது (அண்மை நிலை) கோடை காலமும் சூரியனை விட்டு விலகி அதிகத் தொலைவில் உள்ளபோது (சேய்மைநிலை) குளிர் காலமும் தோன்றுகிறது என பதில் அளிக்கிறார். மாணவரின் பதில் சரியா? இல்லை எனில் கோடையும் குளிர் களமும் தோன்றும் காரணத்தை விளக்குக. 

 2. 2018 ஜனவரி 31 தேதி நடைபெற்ற சந்திர கிரகணத்தின் வெவ்வேறு நிலைகளை புகைப்படம் காட்டுகின்றது. இப்புகைப்படத்தின் அடிப்படையில் புவி கோள வடிவமுடையது என நிரூபிக்க முடியுமா?

 3. கெப்ளரின் சுற்றுக்காலங்களின் விதியினைக் கூறு.

 4. ஒரு நிறை m ஆனது இரு பகுதிகளாக உடைக்கப்படுகிறது .அவை 'm' (M -m )என்பன. இரு பகுதிகளுக்கிடையேயான ஈர்ப்பு விசை பெருமத்தை அடைய வேண்டுமெனில் m எங்ஙணம் M உடன் தொடர்புடையது.          

 5. ஒரு புவிநிலைத் துணைக்கோள் 5R என்ற உயரத்தில் புவியின் பரப்பிற்கு மேலே சுற்றிவருகிறது. R  என்பது புவியின் ஆரம். புவியின் பரப்பிலிருந்து 2R என்ற உயரத்தில் உள்ள மற்றொரு துணைக்கோளின் சுற்றுக்  காலத்தைக்  காண். 

 6. புவியின் மையத்திலிருந்து 6.6 x 1010 m தொலைவில் உள்ள 67 kg  நிறையுள்ள ஒரு பொருளின் நிலை ஆற்றல் என்னவாக இருக்கும்? இத்தொலைவில் ஈர்ப்புத் தன்னிலை ஆற்றலைக் காண்.

 7. இலேசான கோள் ஒன்று, ஒரு திரளான விண்மீனை வட்டப் பாதையில் சுற்றி வருவதாகக் கொண்டால் அதன் ஆரம் r, சுற்றுக் காலம் T என்க. கோளுக்கும், விண்மீனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை r-3/2 க்கு நேர்விகிதத்தில் இருக்குமானால் T மற்றும் r க்கு இடையேயான தொடர்பு யாது?

 8. சூரியனிலிருந்து புதன் மற்றும் வெள்ளியில் தொலைவு கண்றியப்பட்ட விதத்தை விவரி. 

 9. ஈர்ப்பியல் மாறிலியின்  மதிப்பின்றி 'g' ன் மதிப்பால் விசையை கணக்கிட முடியும். கூற்றினை விளக்கு.

 10. புவியைவிட இருமடங்கு நிறையும், விட்டமும் வுடைய ஒரு கோளைக் கருதுக. இக்கோளில் ஊசலின் அலைவு நேரம் என்னவாக இருக்கும்? புவியின் மீது ஒரு வினாடி ஊசல் என்பது யாது? 

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - ஈர்ப்பியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Gravitation Three Marks Questions )

Write your Comment