11th physics-Important questions-இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும், இயக்கவியல்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 200

    Answer all the questions

    20 x 1 = 20
  1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.

    (a)

    Kg2

    (b)

    m3

    (c)

    s-1

    (d)

    m

  2. CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி_______.

    (a)

    0.04

    (b)

    0.4

    (c)

    40

    (d)

    400

  3. விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [MLT0]

    (b)

    [MLT-1]

    (c)

    [ML-2T]

    (d)

    [ML-1T0]

  4. 0ε0)-1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

    (a)

    நீளம்

    (b)

    காலம்

    (c)

    திசைவேகம்

    (d)

    விசை

  5. ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

    (a)

    \(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)

    (b)

    \(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)

    (c)

    \(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)

    (d)

    \(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)

  6. பொருளொன்றின் நீளம் 3.51m அதன் துல்லியதன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை ______

    (a)

    351%

    (b)

    1%

    (c)

    0.28%

    (d)

    0.035%

  7. பொருளொன்றின் திசைவேகம் \(V={x\over t}+yt\) ல்  xன் பரிமான வாய்ப்பாடு _____

    (a)

    ML0T0

    (b)

    M0L0T0

    (c)

    M0LT0

    (d)

    M0L0T

  8. பிளாங் மாறிலியின் பரிணாம வாய்ப்பாடு ____ 

    (a)

    MLT

    (b)

    ML3T3

    (c)

    ML0T4

    (d)

    ML2T-1

  9. முடுக்கம் 20 m/s2 எனப்து km/h2 ல்____ 

    (a)

    2.59 x 105 km/h2

    (b)

    1.29 x 105 km/h2

    (c)

    2.0 x 103 km/h2

    (d)

    3.5 x 105 km/h2

  10. 10 ன் மதிப்பு_______

    (a)

    1.745 x 10-2 ரேடியன்

    (b)

    1.946 x 10-11 ரேடியன்

    (c)

    3.6 ரேடியன்

    (d)

    3600 ரேடியன்

  11. துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும் எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம் _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    சுழி

  12. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  13. பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன? ( காற்றுத்தடையைப் புறக்கணிக்க)

    (a)

    77.3 m

    (b)

    78.4 m

    (c)

    80.5 m

    (d)

    79.2 m

  14. சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    0.5

  15. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  16. ஒய்வு நிலையில் இருக்கும் துகள், கிடைத்தளத்தில் நேர்க்கோட்டில் சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது. நான்காவது மற்றும் மூன்றவாது நொடிகளில், அது கடந்த தொலைவுகளின் தகவு _______ 

    (a)

    \(\frac { 3 }{ 4 } \).

    (b)

    \(\frac { 26 }{ 4 } \)

    (c)

    \(\frac { 7 }{ 5 } \)

    (d)

    2

  17. துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது அதன் முடுக்கம் _______ 

    (a)

    தொடுகோட்டின் வழியே ஏற்படும்

    (b)

    ஆரத்தின் வழியே ஏற்படும்

    (c)

    வட்டப்பாதை வழியே ஏற்படும்

    (d)

    சுழி

  18. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலார் அளவு?

    (a)

    மின்புலம்

    (b)

    திசைவேகம்

    (c)

    கோன் உந்தம்

    (d)

    மின்னழுத்தம்

  19. ஒரே உயரத்திலிருந்து இரும்பு பந்து மற்றும் இறகு இரண்டும் ஒரே நேரத்தில் விழுகின்றன. இவை இரண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்_____ 

    (a)

    சமம்

    (b)

    இரும்புப் பந்து முன்னதாக தரையை அடையும்

    (c)

    இறகு விரைவில் தரையை அடையும்

    (d)

    நிறையைச் சார்ந்தது

  20. கோண இயக்கத்தின் இயக்க சமன்பாடுகள்______

    (a)

    நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்

    (b)

    கோணமுடுக்கம் உடைய பொருள்களுக்குப் பொருந்தும்

    (c)

    மாறாத நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்

    (d)

    மாறாத கோணமுடுக்கம் உடைய பொருட்களுக்குப் பொருந்தும்

  21. Answer all the questions

    20 x 2 = 40
  22. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

  23. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே (5.7 ± 0.1) cm மற்றும் (3.4 ± 0.2) cm எனில் செவ்வகத்தின் பரப்பை பிழை எல்லையுடன் கணக்கிடுக.

  24. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக
    18.35 ஐ 3 இலக்கம் வரை

  25. அதிர்வடையும் கம்பியின் அதிர்வெண்(υ)ஆனது
    i. அளிக்கப்பட்ட விசை (F)
    ii. நீளம் (l)
    iii. ஒரலகு நீளத்திற்கான நிறை (m) ஆகியவற்றைப் பொறுத்தது எனக் கொண்டால், பரிமாண முறைப்படி அதிர்வெண் \(v ∝ {1\over l}\sqrt{F\over m}\) என நிரூபி

  26. 20 பிரிவுகள் கொண்ட நகரும் அளவுகோலைக் கொண்ட வெர்னியர் அளவியை விட 1 mm புரிக்கோலும், 100 பிரிவுகளும் கொண்ட திருகு அளவி சிறந்தது என நிரூபி

  27. இயற்பியல் அளவின்வரையறை என்றால் என்ன?எ.கா தருக

  28. வழி அளவுகள் என்றால் என்ன? எ.கா தருக.

  29. சோலார் வருடம், லீப் வருடம் என்பன யாவை?

  30.  ஒரு இயற்பியல் அளவுகளை அளவிடுதலில் தேவையானவை யாவை?

  31. 10-5 முதல் 102m வரையிலான தொலைவுகளை எவ்வாறு அளப்பாய்?

  32. படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow{A}\) வெக்டரிலிருந்து \(4\overrightarrow{A}\) மற்றும் \(-4\overrightarrow{A}\) ஜக் காண்க.

  33. கொடுக்கப்பட்ட \(\overrightarrow{A}=2\hat{i}+4\hat{j}+5\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=\hat{i}+3\hat{j}+6\hat{k}\) வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் \(\overrightarrow{A},\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{A},\overrightarrow{B}\) இன்  எண்மதிப்புகளையும் காண்க. மேலும் கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தின் மதிப்பு என்ன?

  34. பின்வரும் திசைவேகம்–நேரம் வரைபடங்களினால் குறிப்பிடப்படும் துகளின் இயக்க வகையினைக் காண்க.

  35. \(\overrightarrow { A } =5\hat { i } -3\hat { j } ,\overrightarrow { B } =4\hat { i } +6\hat { j } \), வெக்டர்களை பக்கங்களைகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பினைக் கணக்கிடுக.

  36. வெக்டர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக

  37. ஒரு பரிமாண இயக்கம் என்றால் என்ன? எ.கா தருக.

  38. சீரற்ற (அ) மாறும் திசைவேகம் என்றால் என்ன?

  39. கோணமுடுக்கம்: வரையறு 

  40. குறிப்பாயம் வரையறு:

  41. எதிர்க்குறி x, y மற்றும் z அச்சுத்திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?

  42. Answer all the questions

    20 x 3 = 60
  43. நுட்பம் மற்றும் துல்லியத்தன்மை – வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

  44. SI அலகு முறையின் சிறப்பியல்புகளைக் கூறு.

  45. பரிமாணத்தில் ஒருபடித்தான நெறிமுறை பற்றி விவரி.

  46. புவியிலிருந்து நிலவின்  தொலைவை இடமாறு தோற்றமுறை மூலம் கணக்கீடுக.

  47. வெவ்வேறு இயற்பியல் அளவுகளுக்கிடையே உள்ள தொடர்பினைத் தரும் சமன்பாட்டினை பரிமாண வாய்ப்பாட்டின் மூலம் பெறுக.

  48. பரிமாணப் பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

  49. நிறையின் பரிமாணத்தை ஆற்றல் [E], நீளம் [L] மற்றும் காலம் [T] ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுக 

  50. Q என்ற இயற்பியல் அளவு x, y, z ஆகிய அளவுகளைப் பொறுத்தது எனில் \(Q=\frac { { x }^{ 2 }{ y }^{ 3 } }{ { z }^{ 1 } } \) என்ற சமன்பாட்டில் x, y மற்றும் z இன் விழுக்காட்டுப் பிழையைக் கணக்கிடுக. 

  51. 100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s. 

  52. பரிமாண முறையில் கீழ்காணும் சமன்பாடு சரியா எனக்கணக்கிடுக. முடிவைப் பற்றி உனது கருத்தைத் தருக.
    s = ut + 1/4 at2 இங்கு s என்பது துகளின் இடப்பெயர்ச்சி, u என்பது ஆரம்பத் திசைவேகம், t என்பது காலம் மற்றும் a என்பது முடுக்கம். 

  53. தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள மனிதர் ஒருவர், (1) வடக்கு நோக்கி 2 மீட்டரும், (2) கிழக்கு நோக்கி 1 மீட்டரும், பின்பு (3) தெற்கு நோக்கி 5 மீட்டரும் நடக்கிறார். இறுதியாக (4) மேற்கு நோக்கி 3 m  நடந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இறுதி நிலையில் அம்மனிதரின் நிலை வெக்டரைக் காண்க. 

  54. A, B மற்றும் C என்ற மூன்று துகள்களின் திசைவேகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எந்தத் துகள் அதிக வேகத்தில் செல்லும்.
    \(\overrightarrow{V_A}=3\hat{i}-5\hat{j}+2\hat{k}\)
    \(\overrightarrow{V_B}=\hat{i}+2\hat{j}+3\hat{k}\)
    \(\overrightarrow{V_C}=5\hat{i}+3\hat{j}+4\hat{k}\)

  55. A மற்றும் B என்ற இரண்டு ரயில் வண்டிகள் இணையான இரயில் பாதையில் ஒன்றுக் கொன்று எதிர் திசையில் செல்கின்றன. இரயில் வண்டி A இன் திசைவேகம் கிழக்கு நோக்கி 40 km h-1 மற்றும் இரயில் வண்டி B இன் திசைவேகம் மேற்கு நோக்கி 40 km h-1 . இரயில் வண்டிகளின் சார்புத் திசைவேகங்களைக் காண்க.

  56. A மற்றும் B என்ற இரண்டு இரயில் வண்டிகள் இணையான இரயில் பாதையில் ஒரே திசையில் கிழக்கு நோக்கி 50 km h-1 என்ற திசைவேகத்தில் செல்கின்றன. இரயில் வண்டிகளின் சார்புத் திசைவேகங்களைக் காண்க.

  57. ஆற்று நீரோட்டத்தின் திசையில் நீந்தும் நீச்சல் வீரரின் திசைவேகம் 12 km h-1. ஆற்று நீரோட்டத்தின் திசைக்கு எதிர்திசையில் அவரின் நீச்சல் திசைவேகம் 6 km h-1 எனில், அமைதி நிலையில் இருக்கும் நீரினைப் பொருத்து நீச்சல் வீரரின் வேகத்தையும் மற்றும் ஆற்று நீரோட்டத்தின் திசைவேகத்தையும் காண்க.

  58. திசைவேகம் -கால வரைப்படத்தின் முக்கியத்துவம் யாது?

  59. முடுக்கிவிடப்பட்ட இயக்கம்?

  60. ஓய்வு நிலையிலிருந்து ஒரு பேருந்து 0.2ms-2 சீரான முடுக்கத்துடன் 3 நிமிடங்களுக்கு இயங்குகிறது. வேகம் மற்றும் கடந்த தொலைவைக் கணக்கீடுக.

  61. ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து 25ms-2 என்ற ஒரு முடுக்கத்துடன் இயக்கத்தை தொடங்குகிறது. அது 20 வது செகண்டில் கடந்த தொலைவைக் கண்டுபிடி. 

  62. A,B மற்றும் C என்ற மூன்று வெக்டர்களின் வெக்டர் கூடுதலை பகுப்பாய்வு முறையில் காண்.(analytical method)

  63. Answer all the questions

    20 x 5 = 100
  64. பரிமாணங்கள் முறையில் 76 cm பாதரச அழுத்தத்தை Nm-2 என்ற அலகிற்கு மாற்றுக

  65. i) குறைந்த தொலைவை அளப்பதற்கு பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி விவரி.
    ii) நீண்ட தொலைவுகளை அளக்கும் முக்கோண முறை மற்றும் ரேடார் முறை பற்றிக் குறிப்பிடுக

  66. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

  67. பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக

  68. துல்லியத்தன்மை மற்றும் நுட்பத்திற்கான விளக்கத்தினை எடுத்துக்காட்டுடன் தருக.

  69. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுதலில் விதிகளை எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்து

  70. ஆம்ஸ்ட்ராங் (A0) என்பது அணுபடித்தர அளவுகளில் எளிதான நீளத்தின் அலகு ஒரு ஹீலியம் அணுவின் அளவு 30 pico மீட்டர். ஒரு மோல் ஹீலியம் அணுவின் மொத்த அணுப் பருமன் m3 ல் கூறு.

  71. ஒரு நீர்முழ்கிக் கப்பலில் பொறுத்தப்பட்டுள்ள ஒரு சோளார் கருவியின் சைகைகளின் உருவாக்கத்திற்கும், எதிரொளி வந்தடைவதற்கும் இடையேயான காலதாமதம் 110.3 செகண்டுகள். நீரில் ஒலியின் வேகம் 1450 ms-1 எனில் நீர்முழ்கிக்கப்பலிலிருந்து எதிரிக் கப்பலுக்கான தொலைவினைக் கணக்கீடு.

  72. பிழை பகுப்பாய்வின் கீழ் வரும் பிழைகளில் கணக்கீட்டு முறையுடன் விவரி.

  73. வெர்னியர் அளவி கொண்டு கண்டறியப்பட்ட உருளையின் வெவ்வேறு நீளங்கள் 2.36 cm, 2.27 cm, 2.26 cm, 2.28 cm, 2.31 cm,  2.28 cm மற்றும் 2.29 cm. எனில் உருளையின் நீளத்தின் சராசரி, தனிப்பிழை, ஒப்பிட்டுப் பிழை மற்றும் விழுக்காட்டுப் பிழையைக் காண்க. 

  74. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரணடு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டரின் எண்மதிப்பு மற்றும் \(\overrightarrow{A}\) யைப் பொருத்து தொகுபயன் வெக்டரின் திசை ஆகியவற்றைக் காண்க.

  75. y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.

  76. படத்தில் காட்டியவாறு கிரிக்கெட் வீரர் பந்து ஒன்றினை மட்டையால் அடித்த பின்பு, அப்பந்து 30 m s–1 என்ற திசைவேகத்துடனும், 300 கோணத்திலும் பறந்து செல்கிறது. மைதானத்தின் எல்லையானது பந்தினை அடித்த கிரிக்கெட் வீரரிலிருந்து 75 m தொலைவில் உள்ளது. அப்பந்து மைதானத்தின் எல்லையை பறந்து சென்று கிரிக்கெட் வீரருக்கு ஆறு ரன்களைப் பெற்றுத்தருமா? (காற்றுத்தடையைப் புறக்கணிக்கவும் மற்றும் புவியீர்ப்பு முடுக்கம் g = 10 m s-2 எனக் கருதுக).

  77. கிடைத்தளத்துடன் θ கோணம் சாய்வாக எறியப்பட்ட எறிபபொருள் ஒன்றின் கிடைத்தள நெடுக்கம் மற்றும் பெரும உயரம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளைப் பெறுக.

  78. இரண்டு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல், இரண்டு வெக்டர்களின் வெக்டர் பெருக்கல் பற்றி விவரி.

  79. ஒழுங்கற்ற வளைகோட்டின் கீழே அமையும் பரப்பை எவ்வாறு காண்பாய்?

  80. இயக்கங்களின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  81. சார்பு பற்றிய கருத்தினை வகை நுண்கணிதம் கொண்டு வரைபடத்துடன் விவரி.

  82. தொகை நுண் கணிதத்தின் அவசியம் யாது? இதைக்கொண்டு பரப்பினைக் காணும் முறையை எடுத்துக்காட்டுடன் விவரி. 

  83. வேட்டைக்காரரொருவர், மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் குரங்கு ஒன்றினை தனது துப்பாக்கியால் கிடைத்தளத் திசையினைப் பொறுத்து \(\theta\) என்ற கோணத்தில் குறி பார்த்து கூடுகிறார். துப்பாக்கியிலிருந்து குண்டு v0 என்ற திசைவேகத்தில் பாய்ந்து செல்கிறது. அதேநேரத்தில் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் குரங்கு துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிப்பதற்காக படத்தில் காட்டியுள்ளவாறு மரக்கிளையினை விட்டு விடுகிறது. துப்பாக்கிகுண்டு குரங்கினைத் தாக்குமா? அல்லது குரங்கு துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிக்குமா? (காற்றுத் தடையைப் புறக்கணிக்கவும்)
     

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் - முக்கிய வினா விடைகள்-இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும், இயக்கவியல் ( 11th physics-Important questions-இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும், இயக்கவியல் )

Write your Comment