இயக்கவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள மனிதர் ஒருவர், (1) வடக்கு நோக்கி 2 மீட்டரும், (2) கிழக்கு நோக்கி 1 மீட்டரும், பின்பு (3) தெற்கு நோக்கி 5 மீட்டரும் நடக்கிறார். இறுதியாக (4) மேற்கு நோக்கி 3 m  நடந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இறுதி நிலையில் அம்மனிதரின் நிலை வெக்டரைக் காண்க. 

 2. உங்கள் பள்ளிக்கூடம், உங்கள் வீட்டிலிருந்து 2 km தொலைவில் உள்ளது எனக்கருதுக. வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கும், பின்னர் மாலை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கும் வருகிறீர்கள் எனில், இந்நிகழ்ச்சியில் நீங்கள் கடந்து சென்ற தொலைவு மற்றும் அடைந்த இடப்பெயர்ச்சி என்ன?

 3. 10 g மற்றும் 1 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் 10 m s-1 என்ற ஒரே வேகத்தில் செல்கின்றன. அவற்றின் உந்தங்களின் எண்மதிப்பைக் காண்க.

 4. இரயில் வண்டியொன்று 54 km h-1 என்ற சராசரி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தடையை செலுத்திய பின்பு அவ்வண்டி 225 m சென்று நிற்கிறது எனில் இரயில் வண்டியின் எதிர் முடுக்கத்தைக் காண்க.

 5. ஒரு புகைவண்டியின் நீளம்  20 m . அது 40 km/h வேகத்தினால் இயங்கியங்குகிறது எனில் 500 m நீளமுள்ள பாலத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?

 6. ஓய்வுநிலை, இயக்கம் குறிப்பு வரைக:

 7. வெக்டரை கூறுகளின் அடிப்படையில் [ஆய அச்சுத் தொகுப்பினைப் பயன்படுத்தி] வெக்டர்களின் கூடுதல் கழித்தல் காணப்படுவதை விளக்கு.

 8. நிலைவெக்டர்: வரையறு படம் மூலம் விளக்கு.

 9. ஒரு துகளின் நிலை x =6t +2t3 என கொடுக்கப்பட்டுள்ளது. துகளின் இயக்கம் சீரானதா அல்லது சீரற்றதா என கண்டுபிடி.

 10. ஒரு ரயில் 100 km/h வேகத்தில் இயங்குகிறது.15m தொலைவிற்குப்பிறது வேகத்தடை மூலம் நிறுத்தப்படுகிறது அதே ரயில் 120km/h வேகத்தில் இயங்குமானால் அதை நிறுத்தத் தேவையான சிறுமத் தொலைவு யாது?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - இயக்கவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Three Marks Questions )

Write your Comment