இயக்க விதிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?

  2. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

  3. பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை குறைவதற் குப்பதிலாக அதிகரிப்பதன் காரணம் என்ன?

  4. உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?

  5. சரிசமமான வளைவுச் சாலையில் கார் ஒன்று சறுக்குவதற்கான நிபந்தனை என்ன?

  6. இயக்கம் பற்றிய அரிஸ்டாட்டிலின் கூற்று என்ன?

  7.  நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிக்கான எ.கா மூன்றினை கூறுக.

  8. நேர்கோட்டு உந்த அழிவன்மை விதியைக் கூறுக.

  9. மையநோக்கு விசை என்றால் என்ன?

  10. மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் எதிர் செயல்வினை எவ்வாறு இருக்கும்.

  11. துப்பாக்கியை கையில் ஏந்தும் போது தோல் பட்டையின் உதவி தேவைப்படுகிறது ஏன்?

  12. இரு நிறைகள் m1=m2=0.5kg ஒரு கம்பியில் இணைக்கப்பட்டுள்ளது.அதுஉராய்வில்லாத வழுவழுப்பான நிறை கப்பியின் வழியே செல்கிறது.நிறைகளின் முடுக்கம் யாது?      

  13. நிறை 20 kg உடைய ஒரு பொருளின் மீது விசை செயல்படுத்தப்பட வேண்டும்.4 ms-1 முடுக்கத்துடன் அது மேல் நோக்கி நகர்கிறது.வெற்றிடத்தில் விசையைக் கன்டுபிடி.    

  14. சக்கரம் பயன்படுத்தும் போது பொருளை நகர்த்துவது எளிதானதாகிறது. ஏன்?

  15. 5 kg மற்றும் 20 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் தொடக்கத்தில் ஓய்வுநிலையில் உள்ளன. 100 N விசை அப்பொருட்களின் மீது 5 வினாடிகளுக்குச் செலுத்தப்படுகிறது. 
    A) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் உந்தத்தின் மதிப்பு என்ன?
    B) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் வேகத்தின் மதிப்பு என்ன?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - இயக்க விதிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Two Marks Questions )

Write your Comment