வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. m நிறைகொண்ட பந்து ஒன்று u வேகத்துடன் x அச்சைபொருத்து 600 கோணத்தில் சென்று சுவரொன்றின் மீது மீட்சி மோதலை ஏற்படுத்துகிறது. x மற்றும் y திசையில் அப்பந்தின் உந்தமாறுபாடு என்ன?

  (a)

  Δpx = -mu, Δpy = 0

  (b)

  Δpx = -2mu, Δpy = 0

  (c)

  Δpx =0, Δpy = mu

  (d)

  Δpx = mu, Δpy = 0

 2. வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்தது?

  (a)

  மோல்களின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை

  (b)

  வெப்பநிலையை மட்டும்

  (c)

  அழுத்தம் மற்றும் வெப்பநிலை

  (d)

  அழுத்தத்தை மட்டும்

 3. நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் வஃ ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?

  (a)

  இருமடங்காகும்

  (b)

  மாறாது

  (c)

  பாதியாக குறையும்

  (d)

  நான்கு மடங்கு அதிகரிக்கும்

 4. ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாதத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாதத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே SP மற்றும் SV எனில் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானது?

  (a)

  SP - SV= 28R

  (b)

  SP - S= R /28

  (c)

  SP - SV= R / 4

  (d)

  SP - SV= R

 5. மாறா வெப்பநிலையில் கொடுக்கப்பட்ட வாயு மூஆக்கூரின் மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேக்கப்பகிர்வு வளைகோட்டின் பரப்பு பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.

  (a)

  \(PV\over kT \)

  (b)

  \(kT\over PV\)

  (c)

  \(P\over NkT \)

  (d)

  PV

 6. 3 x 2 = 6
 7. சராசரி இயக்க ஆற்றல் மற்றும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?

 8. இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் பாயில் விதியினை வருவி.

 9. 25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.

 10. 3 x 3 = 9
 11. வாயுக்களின் இயக்கவிற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

 12. இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.

 13. ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் விகிதத்திற்கான கோவையை வருவி

 14. 2 x 5 = 10
 15. இயல்பு வெப்பநிலையிலுள்ள (270C) ஓரணு வாயு மூலக்கூறுகள் மற்றும் ஈரணு வாயு மூலக்கூறுகளின் அளவுகள் முறையே \({ \mu }_{ 1 }\)மோல் மற்றும் \({ \mu }_{ 2 }\)மோல் ஆகும். இவ்வாயுக்கலவையின் வெப்பபரிமாற்றமில்லா அடுக்குறியீடு \(\gamma \)வின் மதிப்பைக் கணக்கிடுக.

 16.  300 k வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க. 

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back Questions ( 11th Physics - Kinetic Theory Of Gases Book Back Questions )

Write your Comment