இயக்க விதிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

    (a)

    திசையில் நிலைமம்

    (b)

    இயக்கத்தில் நிலைமம்

    (c)

    ஓய்வில் நிலைமம்

    (d)

    நிலைமமற்ற தன்மை

  2. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  3. பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?

    (a)

    பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி

    (b)

    ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல

    (c)

    ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி

    (d)

    ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல

  4. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  5. விசையின் அடிப்படை வரையறையைத் தருவது_____ 

    (a)

    நியூட்டனின் மூன்றாம் விதி

    (b)

    நியூட்டனின் இரண்டாம் விதி

    (c)

    நியூட்டனின் முதல் விதி

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  6. 10 x 2 = 20
  7. துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?

  8. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

  9. ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றுமா?

  10. பனிக்கட்டி மீது நடக்கும் போது நெருக்கமாக அடி எடுத்து வைக்க வேண்டும் ஏன்?

  11. உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?

  12. மேசை ஒன்றின் மீது +1 இயற்பியல் தொகுதி 1 மற்றும் தொகுதி 2, +2 இயற்பியல் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 இவை வரிசையாக ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
    a) ஒவ்வொரு புத்தகத்தின் மீதும் செயல்படும் விசைகளைக் காண்க.“தனித்த பொருள் விசை படங்கள்” அவற்றிற்கு வரைக .
    b) ஒவ்வொரு புத்தகமும் மற்ற புத்தகங்கள் மீது தரும் விசைகளைக் கண்டுபிடி.

  13.  மைய விசைகள் என்றால் என்ன?

  14. தொகுபயன் விசை என்றால் என்ன?

  15. மையநோக்கு விசை என்றால் என்ன?

  16. நியூட்டனின் இரண்டாவது விதி (F=Ma) அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா? காரணம் கூறு

  17. 5 x 3 = 15
  18. புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரண்டாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளை ஆராய்க.

  19. ஒரு நியூட்டன் – வரையறு.

  20. போலி விசை என்றால் என்ன?

  21. நிலைமக் குறிப்பாயம் என்றால் என்ன?

  22. ஸ்கேலர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக

  23. 2 x 5 = 10
  24. ஒரு மையவிசைகள் என்றால் என்ன? லாமியின் தேற்றத்தைக் கூறு.

  25. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - இயக்க விதிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Laws of Motion Model Question Paper )

Write your Comment