இயக்க விதிகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

  (a)

  திசையில் நிலைமம்

  (b)

  இயக்கத்தில் நிலைமம்

  (c)

  ஓய்வில் நிலைமம்

  (d)

  நிலைமமற்ற தன்மை

 2. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு.

  (a)

  1

  (b)

  1 ஐ விடக் குறைவு

  (c)

  1 ஐ விட அதிகம்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 3. m என்ற நிறை படத்தில் கட்டப்பட்டுள்ளவாறு வழு வழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது அந்நிறை உணர்வது

  (a)

  பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்.

  (b)

  பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

  (c)

  இரு பாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

  (d)

  இரு பாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

 4. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  எப்பொழுதும் சுழி

  (b)

  சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

  (c)

  எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

  (d)

  முடிவு செய்ய இயலாது

 5. பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?

  (a)

  பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி

  (b)

  ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல

  (c)

  ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி

  (d)

  ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல

 6. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க

  (a)

  மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்

  (b)

  மையநோக்கு விசை இயற்கை விசையாகும்

  (c)

  மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது

  (d)

  வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும், மையவிலக்கு விசை வடமையத்திலிருந்து வெளி நோக்கியும் செயல்படுகிறது

 7. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  மாறாது

  (d)

  முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

 8. நியூட்டனின் முதல் இயக்கவிதியில் இருந்து அறியப்படும் கருத்து________.

  (a)

  ஆற்றல்

  (b)

  வேலை

  (c)

  உந்தம்

  (d)

  நிலைமம்

 9. பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?

  (a)

  திசைவேகம்

  (b)

  நிறை

  (c)

  பரப்பு

  (d)

  பருமன்

 10. எதனடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது?

  (a)

  நியூட்டனின் முதல் இயக்க விதி

  (b)

  நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி

  (c)

  நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி

  (d)

  நியூட்டனின் முதல் மற்றும் இரண்டாம் இயக்க விதிகள்

 11. ஒரு புள்ளியில் செயல்படும் மூன்று விசைகள் சமநிலையில் உள்ள போது___.

  (a)

  ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளின் வெக்டர் கூடுதலுக்குச் சமம்

  (b)

  ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளின் கூடுதலை விட அதிகம்

  (c)

  ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளுக்கிடையே வேறுபாட்டை விட அதிகம்

  (d)

  ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளின்பெருகற்பலனுக்குச் சமம்

 12. வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம்_______.

  (a)

  எண்மதிப்பில் மட்டும் மாறும்

  (b)

  மாறாமல் இருக்கும்

  (c)

  திசையில் மட்டும் மாறும்

  (d)

  எண்மதிப்பிலும் திசையிலும் மாறும்

 13. விசையொன்று செயல்படுவதால், துகள் வட்டப்பாதையில் இயங்குகிறது, விசை செய்த வேலை_______.

  (a)

  நேர்குறி,சுழியல்ல

  (b)

  சுழி

  (c)

  எதிர்குறி,சுழியல்ல

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை.

 14. கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும் விசை?

  (a)

  அணுவிடை விசை

  (b)

  ஈர்ப்பியல் விசை

  (c)

  நிலை மின்னியல் விசை

  (d)

  பாகுநிலை விசை

 15. நியூட்டனின் முதல் இயக்க விதியிலிருந்து அறியப்படும் கருத்து

  (a)

  ஆற்றல்

  (b)

  வேலை

  (c)

  உந்தம்

  (d)

  நிலைமம்

 16. பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?

  (a)

  திசைவேகம்

  (b)

  நிறை

  (c)

  பரப்பு

  (d)

  பருமன்

 17. விசையின் தாக்கத்தின் அலகு எதன் அலகுக்குச் சமம்?

  (a)

  ஆற்றல்

  (b)

  உந்தம்

  (c)

  திறன்

  (d)

  திசைவேகம்

 18. கீழ்க்கண்டவற்றுள் எதன் அலகு நியூட்டன் -செகண்டு ஆகும்?

  (a)

  திருப்புவிசை

  (b)

  உந்தம்

  (c)

  ஆற்றல்

  (d)

  ப்ளாங் மாறிலி

 19. V1 திசைவேகத்தில் இயங்கும் m நிறையுடைய துகள் ஒன்றின் திசைவேகம் V2 என மாறுவதற்கு கொடுக்கப்பட வேண்டிய  விசையின் தாக்கம்

  (a)

  m(v2-v1)

  (b)

  1/2 m(v22-v12)

  (c)

  m(v1+v2)

  (d)

  m(v2-v1)

 20. குளம் ஒன்றின் நடுவில், அமைதி நிலையில் உள்ள ஒரு மனிதன், கரையை வந்தடைய, பயன்படுத்த வேண்டிய விதி, நியூட்டனின்

  (a)

  முதல் விதி

  (b)

  இரண்டாம் விதி

  (c)

  மூன்றாம் விதி

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 21. ராக்கெட் ஒன்று செயல்படுவதன் தத்துவம்

  (a)

  மீட்சிப் பண்பு

  (b)

  கெப்ளரின் விதிகள்

  (c)

  நியூட்டனின் விதிகள்

  (d)

  உந்த அழிவின்மை விதி

 22. மின் உயர்த்தியினுள் உள்ள ஒரு மனிதனின் தோற்ற எடை அதிகரிப்பது, மின்னுயர்த்தி

  (a)

  மேல் நோக்கி இயங்கத் தொடங்கும்போது

  (b)

  சீரான வேகத்தில் மேலேறும்போது

  (c)

  வேகம் குறையும்போது

  (d)

  தானாக கீழிறங்கும்போது

 23. தானாக மாற்றிக் கொள்ளக்கூடிய விசை யாது?

  (a)

  இயக்க உராய்வு விசை

  (b)

  நிலை உராய்வு விசை

  (c)

  அணுக்கரு விசை

  (d)

  எதுவும் இல்லை

 24. 500 kg நிறை கொண்ட பொருள் ஒன்று கிடைத்தளப் பரப்பில் நழுவ 980N விசை தேவை எனில், பரப்பின் இயக்க உராய்வுக் குணகம்

  (a)

  0.1

  (b)

  0.02

  (c)

  0.2

  (d)

  0.4

 25. 12 kg நிறையுடைய ஒரு பந்தின் வேகம் உடன் இயங்குகிறது.ஒரு மீட்சியுள்ள சுவரின் மீது குத்தப்பட்டவுடன் திருப்பி அனுப்பப்படுகிறது?  

  (a)

  12 kg ms-1  

  (b)

  -12  kg ms-1  

  (c)

  6 kg ms-1  

  (d)

  -6  kg ms-1  

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் இயக்க விதிகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics Laws of Motion One Marks Model Question Paper )

Write your Comment