துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. இரட்டை உருவாக்குவது ______.

    (a)

    சுழற்சி இயக்கம்

    (b)

    இடப்பெயர்ச்சி இயக்கம்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி

    (d)

    இயக்க மின்மை

  2. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.

    (a)

    L

    (b)

    L/2

    (c)

    2L

    (d)

    \(\frac { L }{ \sqrt { 2 } } \)

  3. ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது ______.

    (a)

    சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

    (b)

    சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

    (c)

    ஆரத்தின் வழியாக இருக்கும்

    (d)

    பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்

  4. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  5. கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.

    (a)

    சுழி

    (b)

    v0

    (c)

    \(\sqrt { 2 } { v }_{ 0 }\)

    (d)

    2v0

  6. கோண திசைவேகம் நிலைமைத்திருப்பு திறனுக்கு ______ 

    (a)

    நேர்த்தகவல்

    (b)

    எதிர்த்தகவல்

    (c)

    மாறிலி

    (d)

    அனைத்தும்

  7. சுழற்சி ஆரத்திற்கான அலகு ________ 

    (a)

    m

    (b)

    kg

    (c)

    ms-1

    (d)

    kg m-1

  8. கோண உந்த மாறுபட்டு வீதம் எதற்கு சமம்?

    (a)

    விசை

    (b)

    கோண முடுக்கம்

    (c)

    திருப்புவிசை

    (d)

    நிலைமத் திருப்புத்திறன்

  9. SI முறையில் நிறையின் மையத்தின் அலகு 

    (a)

    (b)

    kg m2

    (c)

    kg m 

    (d)

    kg 

  10. எந்தவொரு கணத்திலும், உருளும் பொருள் ஒன்று தொடுபுள்ளியின் வழியாக முன்னோக்கி செலுத்தும் திசைவேகம் சமமாக இருப்பது?

    (a)

    நிறையின் மையத்தின் திசைவேகத்திற்கு 

    (b)

    சுழி 

    (c)

    நிறையின் மையத்தின் திசைவேகத்தைப்போல் இரு மடங்குக்கு 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  11. 9 x 2 = 18
  12. \((4\hat { i } -3\hat { j } +5\hat { k } )\) N விசையானது \((7\hat { i } +4\hat { j } -2\hat { k } )\)m என்ற புள்ளியில் அமைந்த நிலைவெக்டரின் மீது செயல்படுகிறது. ஆதியைப் பொருத்து திருப்பு விசையின் மதிப்பை காண்க.

  13. தீக்குச்சி ஒன்றை விரல் நுனியில் சமன் செய்வதைவிட மீட்டர் அளவுகோள் ஒன்றை அதே போல் சமன் செய்வது எளிமையாக இருப்பது ஏன்?

  14. மூன்று சாய்தளங்களில் ஒரே மாதிரியான திண்மக் கோளங்கள் கீழ்நோக்கி இயங்குகிறது. சாய்தளங்கள் A, B, C ஆகியவை ஒத்த பரிமாணத்தை உடையன. A யில் உராய்வின்றியும், B இல் நழுவுதலற்ற உருளுதலும் மற்றும் C யில் நழுவி உருளுதலும் ஏற்படுகிறது. சாய்தளத்தின் அடிப்பகுதியில் இவற்றின் இயக்க ஆற்றல்கள் EA, EB, EC,இவற்றை ஒப்பிடுக.

  15. ஈர்ப்பின் மையம் என்றால் என்ன?

  16. சமநிலைகளின் வகைகள் யாவை?

  17. சுழற்சி ஆரம் - வரையறு

  18. இரட்டைக்கு ஏதேனும் மூன்று எடுத்துக்காட்டுகள் தருக

  19. எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)

  20. 20 kg நிறையும் 0.25 m ஆரமும் கொண்ட ஒரு திண்மக் கோளகமானது மையம் வழிச் செல்லும் அச்சைப் பற்றி சுழல்கிறது. அதன் கோண திசைவேகம் 5rads-1 எனில் கோண உந்தத்தின் மதிப்பு யாது?

  21. 4 x 3 = 12
  22. நிறைமையம் வரையறு.

  23. திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?

  24. சுழற்சி ஆரம் என்றால் என்ன?

  25. தூய உருளுதலுக்கான நிபந்தனை என்ன?

  26. 2 x 5 = 10
  27. சமநிலையின் வகைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குக.

  28. செங்குத்து அச்சுத் தேற்றத்தைக் கூறி நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Motion of System of Particles and Rigid Bodies Model Question Paper )

Write your Comment