அலைவுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______

    (a)

    நீள்வட்டம்

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    நேர்கோடு

  2. ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.

    (a)

    5/6

    (b)

    11/10

    (c)

    6/5

    (d)

    5/4

  3. ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும்போது அதன் அலைவுநேரம்_______.

    (a)

    ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்

    (b)

    ஆரம்பத்தில் குறைந்து பிறகு அதிகரிக்கும்

    (c)

    தொடர்ந்து அதிகரிக்கும்

    (d)

    தொடர்ந்து குறையும்

  4. தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 1/3 மடங்காக குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?

    (a)

    1/5

    (b)

    2/3

    (c)

    1/6

    (d)

    1/9

  5. l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    \(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)

    (b)

    \(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)

    (c)

    \(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)

    (d)

    \(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)

  6. 3 x 2 = 6
  7. கட்டற்ற அலைவுகள் என்றால் என்ன?

  8. தடையுறு அலைவுகளை விளக்குக. எடுத்துக்காட்டு தருக.

  9. திணிப்பு அதிர்வுகளை வரையறு. எடுத்துக்காட்டு தருக

  10. 3 x 3 = 9
  11. ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.

  12. ஒருபரிமாண இயக்கத்திற்கான இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றல் இவற்றின் சமன்பாடுகளை நேர்கோட்டு உந்தத்தை கொண்டு எழுதுக.

  13. சுருள்வில் தராசு 0.25 m நீளமும் 0 முதல் 25 kg வரை நிறையை அளவிடும் வகையிலும் அமைக்கப்படடுள்ளது. இச்சுருள்வில் தராசானது 11.5 ms-2 ஈரப்பு முடுக்கம் கொண்ட X என்ற நாம் அறிந்திராத கோள் ஒன்றில் எடுததுக் கொள்ளப்படுகிறது. M kg நிறை கொண்ட ஒரு பொருள் சுருள் வில்லில் தராசில் தொங்க விடப்படும் பொழுது 0.50-s அலைவுக்காலத்துடன் அலைவுறுகிறது. பொருளின் மீது செயல்படும் ஈரப்பியல் விசையை கணக்கிடுக.

  14. 2 x 5 = 10
  15. சுருள்வில்லின் கிடைத்தள அலைவுகளை விவரி.

  16. சுருள்வில்லின் செங்குத்து அலைவுகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - அலைவுகள் Book Back Questions ( 11th Physics - Oscillations Book Back Questions )

Write your Comment