அலைவுகள் - மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஒரு செவிலியர் நோயாளி ஒருவரின் சராசரிஇதயத்துடிப்பை அளவிட்டு மருத்துவரிடம் 0.8s என்ற அலைவு நேரத்தில் குறிப்பிட்டார். நோயாளியின் இதயத்துடிப்பை ஒரு நிமிடத்திற்கான துடிப்புகளின் எண்ணிக்கையில் கூறவும்.

  2. 1N m-1 மற்றும் 2N m-1 சுருள்மாறிலிகள் கொண்ட இரு சுருள்வில்கள் பக்க இணைப்பில் இணைக்கப்படுவதாக கொள்வோம். தொகுப்பயன் சுருள்மாறிலியைக் கணக்கிடுக. மேலும் kp ஐ பற்றி கருத்துக் கூறுக.

  3. ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.

  4. ஒருபரிமாண இயக்கத்திற்கான இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றல் இவற்றின் சமன்பாடுகளை நேர்கோட்டு உந்தத்தை கொண்டு எழுதுக.

  5. வெப்பநிலையினால் தனி ஊசலின் நீளத்தில் ஏற்படும் விளைவினை விளக்குக.

  6. தனிச்சீரிசை இயக்கத்தில் இயக்க ஆற்றல் எதிர்மதிப்பில் எடுத்துக் கொள்ளகைகூடாது ஏன்?

  7. பாலத்தின் மீது இராணுவ வீரர்கள் அணிவகுத்துக் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏன்.

  8. ஒரு அலைவுறும் தக்கை சுருள்வில் அமைப்பானது. 1.00 J எந்திர ஆற்றலுடையது. வீச்சு 10.0cm மற்றும் பெரும வேகம் 1.20m/s. சுருள்வில்லில் மாறிலி தக்கையின் நிறை மற்றும் அலைவுகளின் அதிர்வெண் இவற்றைக் காண்க.

  9. சந்திரனின் பரப்பின் மீதான ஈர்ப்பு விசை முடுக்கம் 1.7 ms-2. புவியின் பரப்பின் மீதான அலைவுக்காலம் 3.5 s கொண்ட தனி ஊசலின் அலைவுக் காலம் சந்திரனின் பரப்பின்மீது என்னவாக இருக்கும்?

  10. சுருள்வில் தராசு 0.25 m நீளமும் 0 முதல் 25 kg வரை நிறையை அளவிடும் வகையிலும் அமைக்கப்படடுள்ளது. இச்சுருள்வில் தராசானது 11.5 ms-2 ஈரப்பு முடுக்கம் கொண்ட X என்ற நாம் அறிந்திராத கோள் ஒன்றில் எடுததுக் கொள்ளப்படுகிறது. M kg நிறை கொண்ட ஒரு பொருள் சுருள் வில்லில் தராசில் தொங்க விடப்படும் பொழுது 0.50-s அலைவுக்காலத்துடன் அலைவுறுகிறது. பொருளின் மீது செயல்படும் ஈரப்பியல் விசையை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - அலைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Oscillations Three Marks Questions )

Write your Comment