பருப்பொருளின் பண்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப்போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  2. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.

    (a)

    0

    (b)

    0.25

    (c)

    0.3

    (d)

    0.5

  3. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே  _____.

    (a)

    அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

    (b)

    அதிகரிக்கும் மற்றும் குறையும் 

    (c)

    குறையும்  மற்றும் அதிகரிக்கும்

    (d)

    குறையும்  மற்றும் குறையும்  

  4. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அழுத்தம் 

    (d)

    தகைவு 

  5. கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குணகம்  _____.

    (a)

    மாறாது 

    (b)

    குறையும் 

    (c)

    அதிக அளவு உயரும் 

    (d)

    மிகக் குறைவான அளவு உயரும்  

  6. ஒரு பரப்பை  ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது  _____.

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அடர்த்தி

    (d)

    பரப்புக்கும் திரவத்திற்கும்இடையே உள்ள சேர்கோணம்

  7. ஒரு மரத்தக்கையை ஏரியில் உள்ள நீரின் அடியில் ஆழத்தில் அமிழ்த்தப்பட்டு விடப்படும்போது  அது இதனுடன் உயரும்.              

    (a)

    நிலையான முடுக்கத்துடன் 

    (b)

    குறை முடுக்கத்துடன் 

    (c)

    நிலையான திசைவேகத்துடன்  

    (d)

    குறைவான திசைவேகத்தில் 

  8. 9 x 2 = 18
  9. தகைவு மற்றும் திரிபு - வரையறு 

  10. பாய்ஸன் விகிதத்தை வரையறு.

  11. மீட்சிப்பண்பின் மீது வெப்பநிலையின் விளைவு யாது?

  12. ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறுக. 

  13. மிதத்தல் விதியைக் கூறுக.

  14. முற்றுத்திசைவேகம் - வரையறு.

  15. ஸ்டோக் விசைக்கான சமன்பாட்டை எழுதுக. அதில் உள்ள குறியீடுகளை விளக்குக. 

  16. பரப்பு இழுவிசையானது பரப்பு ஆற்றலுக்கு எவ்வாறு தொடர்புடையது?

  17. வென்சுரிமானியின் தத்துவம் மற்றும் பயன்பாட்டைக் கூறுக.

  18. 5 x 3 = 15
  19. ஒரு திண்மக்கோளம் 1.5 cm ஆரமும் 0.038kg  நிறையும் கொண்டுள்ளது. திண்மக் கோளத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக. 

  20. ஒரு சாதாரண மனிதனுக்கு பெருநாடி வழியாக இரத்தம் செல்லும் வேகம் 0.33 ms-1. (ஆரம் r=0.8 cm) பெறுநொடியில் இருந்து 0.4 cm  ஆரம் கொண்ட 30 எண்கள் உள்ள பெரும் தமனிகளுக்கு இரத்தம் செல்கிறது. தமனிகளின் வழியே செல்லும் இரத்தத்தின் வேகத்தை கணக்கிடுக.

  21. பாய்மத்தின் அழுத்தத் தினை விவரி?   

  22. சுழற்சி ஓட்டத்தினை எடுத்துக்காட்டுடன் விவரி?   

  23. வெற்றிடத்தில் ஒரு சோப்புக் குமிழின் ஆரம் 3cm. மற்றொரு சோப்பு குமிழின் ஆரம் 4cm . இரு குமிழிகள்  ஒத்த வெப்ப நிலையில் இணைகின்றன எனில் புதிய குமிழின் ஆரம் என்ன?     

  24. 2 x 5 = 10
  25. ஹீக் விதியைக் கூறுக. ஒரு சோதனை உதவியுடன் அதனை சரிபார்க்கவும்.

  26. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறி அதனை நிரூபி.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Properties of Matter Model Question Paper )

Write your Comment