முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  2. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [ML3T-2]

    (b)

    [M-1L3T-2]

    (c)

    [M-1L-3T-2]

    (d)

    [ML-3T2]

  3. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. 1 kg நிறையுள்ள ஒரு பொருள்  20 m s-1 திசைவேகத்துடன மேல்நோக்கி எறி்யப்படுகிறது. அது 18 m உயரத்தை   அடைந்தவுடன்  கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால்  இழக்கப்பட்ட  ஆற்றல் எவ்வளவு? (g = 10 ms-2 எனக்கொள்க)

    (a)

    20J

    (b)

    30J

    (c)

    40J

    (d)

    10J

  5. கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.

    (a)

    சுழி

    (b)

    v0

    (c)

    \(\sqrt { 2 } { v }_{ 0 }\)

    (d)

    2v0

  6. 7 x 2 = 14
  7. புவியிலிருந்து ஜீபிடரின் தொலைவு 824.7 மில்லியன் km. அதன் அளவிடப்பட்ட கோண  விட்டம் 35.72 எனில் ஜீபிடரின் விட்டத்தை கணக்கிடுக.

  8. ஒரு வட்டத்தின் ஆரம் 3.12 m  எனில் அதன் பரப்பு முக்கிய எண்ணுருக்களில் கணக்கிடுக.

  9. தரையிலுள்ள நீர்த்தெளிப்பான் ஒன்று அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் நீரினைத் தெளிக்கிறது. நீர்த்தெளிப்பானிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் v எனில் நீர் தெளிக்கப்பட்ட பரப்பினைக் காண்க.

  10. \(\overrightarrow { A } =5\hat { i } -3\hat { j } ,\overrightarrow { B } =4\hat { i } +6\hat { j } \), வெக்டர்களை பக்கங்களைகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பினைக் கணக்கிடுக.

  11. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

  12. பாராசூட் மெதுவாகக் கீழே விழுவதன் காரணம் என்ன?

  13. சாய்தளம் ஒன்றின் மீது பொருள் வைக்கப்பட்டுள்ளது. பொருள் மற்றும் பொருள் வைக்கப் பட்டுள்ள தளம் இவற்றிற்கிடையேயான உராய்வுக்குணம் \(\frac { 1 }{ \sqrt { 3 } } \) எனில், எந்த சாய்வுக் கோணத்திற்கு பொருள் நழுவத்துவங்கும்.

  14. 7 x 3 = 21
  15. பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

  16. 10 g மற்றும் 1 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் 10 m s-1 என்ற ஒரே வேகத்தில் செல்கின்றன. அவற்றின் உந்தங்களின் எண்மதிப்பைக் காண்க.

  17. முடுக்கம் - வரையறு.

  18. ஒரு ரேடியன் - வரையறு.

  19. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறுக.

  20. சமநிலை என்றால் என்ன?

  21. சுழற்சி ஆரம் என்றால் என்ன?

  22. 4 x 5 = 20
  23. பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக

  24. y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.

  25. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

  26. இருபுள்ளி நிறைகளின் நிறை மையம் சமன்பாட்டை பெறுக.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Term 1 Model Question Paper )

Write your Comment