துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது

  (a)

  துகள்களின் நிலை

  (b)

  துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

  (c)

  துகள்களின் நிறை

  (d)

  துகளின் மீது செயல்படும் விசை

 2. உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  மாறாது

  (d)

  சுழலும் திசையைச் சார்ந்தது

 3. ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது

  (a)

  சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

  (b)

  சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

  (c)

  ஆரத்தின் வழியாக இருக்கும்

  (d)

  பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்

 4. திண்மக்கோளம் ஒன்று சுறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதிநிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்

  (a)

  \(\sqrt { \frac { 4 }{ 3 } gh } \)

  (b)

  \(\sqrt { \frac { 10 }{ 7 } gh } \)

  (c)

  \(\sqrt { 2gh } \)

  (d)

  \(\sqrt { \frac { 1 }{ 2 } gh } \)

 5. M நிறையும் R ஆரமும் உடைய வட்டத்தட்டு ஒன்றின், தளத்திற்குச் செங்குத்தாகவும் மையத்தின் வழியாகவும் செல்லும் அச்சைப் பொருத்த நிலைமத் திருப்புத்திறன் ________ 

  (a)

  1/2MR2

  (b)

  MR2

  (c)

  1/4MR2

  (d)

  5/4MR2

 6. பொருளின் கோண உந்தமானது ______

  (a)

  எப்போதும் மாறாது

  (b)

  மாற்றமடைந்து கொண்டே இருக்கும்

  (c)

  புராதிருப்புவிசை இல்லாதபோது மாறாது

  (d)

  புராதிருப்புவிசை உள்ளபோது மாறாது

 7. பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்தல்ல?

  (a)

  கோணதிசைவேகம்

  (b)

  நிறை

  (c)

  சுழற்சியின் அச்சு

  (d)

  நிறையின் பரவல்

 8. ஒரே நேரத்தில் காற்றில் இரு பந்துகள் எறியப்பட்டால் அவற்றின் நிறை மையத்தின் முடுக்கம் 

  (a)

  இரு பந்துகளின் இயக்கத் திசைகளைச் சார்ந்து அமையும் 

  (b)

  இரு பந்துகளின் நிறைகளைச் சார்ந்து அமையும் 

  (c)

  இரு பந்துகளின் வேகங்களைச் சார்ந்து அமையும் 

  (d)

  புவியீர்ப்பு முடுக்கம் g க்கு சமமாக இருக்கும் 

 9. ஒரு அமைப்பின் நிறையின் மையம் 

  (a)

  அமைப்பின் மையத்தில் இருக்கும் 

  (b)

  அமைப்பிற்கு வெளியே இருக்கும் 

  (c)

  அமைப்பிற்கு உள்ளே இருக்கும் 

  (d)

  அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும் 

 10. 3 m நீள தண்டின் ஒரு அலகு நீளத்தின் நிறை அதன் ஒரு முனையில் இருந்து உள்ள தொலைவு x- க்கு நேர்த்தகவில் இருக்கின்றது எனில், அதன் ஒரு முனையிலிருந்து ஈர்ப்பின் மையத்தின் தொலைவு யாது?

  (a)

  1.5 m 

  (b)

  2 m 

  (c)

  2.5 m 

  (d)

  3 m 

 11. 5 x 2 = 10
 12. இரு சமமான அளவு பாட்டில்களில் ஒன்றை நீர் நிரப்பியும் மற்றொன்றை காலியாகவும் கொண்டு சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுமாறு அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் எது சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் அடையும்? விளக்குக.

 13. சூழல் இயக்கம் என்றாள் என்ன?

 14. இணை அச்சுகள் தேற்றத்தை கூறுக.

 15. திண்மப் பொருட்களில் குறிப்பிடும் வகையில் புறவிசையால் உருவ மாற்றம் நிகழாததற்கு காரணம் யாது?

 16. 20 kg நிறையும் 0.25 m ஆரமும் கொண்ட ஒரு திண்மக் கோளகமானது மையம் வழிச் செல்லும் அச்சைப் பற்றி சுழல்கிறது. அதன் கோண திசைவேகம் 5rads-1 எனில் கோண உந்தத்தின் மதிப்பு யாது?

 17. 5 x 3 = 15
 18. திருப்பு விசையை உருவாக்காத விசைகளுக்கான நிபந்தனை யாது?

 19. M நிறையும் l நீளமும் கொண்ட சீரான நீள் அடர்த்தி கொண்ட (uniform rod) தண்டின் நிறை மையத்தைக் கண்க..

 20. நான்கு உருளை வடிவ பொருட்களான வளையம் வட்டத்தட்டு உள்ளீடற்ற கோலம் மற்றும் திண்மக் கோளம் ஆகியவை ஒத்த ஆறாம் R உடன் ஒரே நேரத்தில் சாய்தளத்தின் அடிப்பகுதியை  முதலில் வந்தடையும் என்பதாக காண்க.

 21. பரவலாக அமைந்த புள்ளி நிறைகளின் நிறைமையம் சுமணப்பாட்டை பெறுக.

 22. திண்மப் பொருட்களின் மீது திருப்பு விசையின் விளைவு.

 23. 3 x 5 = 15
 24. 50 kg நிறையுள்ள ஒரு மனிதர் நிலையான நீரின் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் 300 kg நிறையுடைய படகில் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறார். அவர் தரையில் நிலையாக உள்ள ஒருவரை பொருத்து படகின் மறுமுனையை நோக்கி 2 m s-1 என்ற மாறா திசைவேகத்தில் நடந்து செல்கிறார். (a) நிலையான உற்றுநோக்குபவரை பொருத்தும் (b) படகில் நடந்து கொண்டிருக்கும் மனிதரைப் பொருத்தும் படகின் திசைவேகம் என்ன?

  [தகவல்: படகுக்கும் மனிதருக்கும் இடையே உராய்வு உள்ளள்ளது. ஆனால் படகுக்கும் நீருக்கும் இடையே உராய்வு கிடையாது.]

 25. AB, OC, GH என்ற சட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக படத்தில் காட்டியுள்ளவாறு தரையில் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கம்பி C என்ற புள்ளியில் கட்டப்பட்டுள்ளது. கம்பியின் தனித்த முனை D யானது விசை F இனால் இழுக்கப்படுகிறது. விசை உருவாக்கிய திருப்பு விசையின் எண் மதிப்பையும், திசையையும்

  (i) D, C, O மற்றும் B பொருத்து
  (ii) CD, OC, AB மற்றும் GH அச்சுகளைப் பொறுத்து காண்க.

 26. ஹைட்ரஜன் மூலக் கூறு ஒன்றின் நிலைமத்திருப்புத்திறனை அதன் நிறைமையத்தின் வழியாகவும் அணுக்களுக்கிடையேயான அச்சிற்கு செங்குத்தாகவும் செல்லும் அச்சைப் பொருத்து காண்க. ஹைட்ரஜன் அணுவின் நிறை 1.7 x 10-27 kg மற்றும் அணுவிடைத் தொலைவு 4 x 10-10 m என கொள்க. 

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் Unit 5 துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Physics Unit 5 Motion Of System Of Particles And Rigid Bodies Model Question Paper )

Write your Comment