அலைகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்கண்டவற்றுள் எது?

    (a)

    130

    (b)

    117

    (c)

    110

    (d)

    120

  2. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

    (a)

    100Hz, 150Hz

    (b)

    150Hz,450Hz

    (c)

    450Hz, 700Hz

    (d)

    700Hz, 800Hz

  3. இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 s இலும் 2வது எதிரொலியை  t2 s இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி _______.

    (a)

    \({v(t_1-t_2)\over 2}\)

    (b)

    \({v(t_1t_2)\over 2(t_1+t_2)}\)

    (c)

    v(t1+t2)

    (d)

    \({v(t_1+t_2)\over 2}\)

  4. ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம் _______.

    (a)

    1.5m

    (b)

    0.5m

    (c)

    1.0m

    (d)

    2.0m

  5. x திசையில் இயங்கி கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இற்கான சமன்பாடு y=(2x10-3 )sin(300t−2x+\(\pi \over4\)) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியில் அளக்கப்பட்டால் அலையின் வேகம் _______.

    (a)

    150ms-1

    (b)

    300ms-1

    (c)

    450ms-1

    (d)

    600ms-1

  6. 3 x 2 = 6
  7. ஒரு குறிப்பிடட பருமன் கொண்ட நீரின் அழுத்தத்தை 100kPa ஆக அதிகரிக்கும் போது பருமன் 0.005% குறைகிறது.
    (a) நீரின் பருமக்குணகம் காண்க?
    (b) நீரில் ஒலியின் (இறுக்கப்படட அலலகள்) திசைவேகத்தை காண்க?

  8. ஒரு கைபேசி 900MHz அதிர்வெண் உடைய சைகைகளை வெளியிடுகிறது. கைபேசி கோபுரம் மூலம் வெளிவிடும் அலையின் அலைநீளம் காண்.

  9. நெட்டலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  10. 3 x 3 = 9
  11. அலை y = sin(x−vt) யை பரிணாம பகுப்பாய்வு மூலம் சரிபார். பரிணாம முறையில் தவறு எனில் மேற்கண்ட சமன்பாட்டை சரியான முறையில் எழுது.

  12. மூடிய ஆர்கன் குழாயில் 3வது சீரிசையின் அதிர்வெண் திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் அடிப்படை அதிர்வெண்ணுக்குச் சமம் எனில் திறந்த குழாயின் நீளம் 30cm எனக் கொள்க.

  13. சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.

  14. 2 x 5 = 10
  15. C, E என்ற இரு ஒலிப்பான்கள் (Speakers) 5 m இடைவெளியில் பிரிதது வைக்கப்படடு, ஒரே ஒலி மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. C, E ன் மையம் O விலிருந்து 10 m தொலைவிலுள்ள புள்ளி A ல் மனிதன் ஒருவன் நின்று கொண்டுள்ளான். A யிலிருந்து 1 m தொலைவிலுள்ள B என்ற புள்ளிக்கு (OC க்கு இணையாக) நடந்து செல்கிறான் (படத்தில் காட்டியவாறு) B ல் ஒலிகளின் முதல் சிறுமத்தை உணர்கிறான். ஒலி மூலத்தின் அதிர்வெண்ணைக் காண்க . (ஒலியின் திசைவேகம் 343 m s-1 எனக் கொள்க ).

  16. கிட்டார் இசைக்கருவியிலுள்ள கம்பியின் நீளம் 80cm, நிறை 0.32 கிராம், இழுவிசை 80N எனில் ஏற்படும் முதல் நான்கு குறைவான அதிர்வெண்களைக்  காண்க.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - அலைகள் Book Back Questions ( 11th Physics - Waves Book Back Questions )

Write your Comment