அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. ஒரு முனை சுவரில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்றைக் கருதுவோம். படத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்கண்ட இரு சூழல்களிலும் (அலைகள் ஒரு வினாடியில் இந்த தொலைவைக்க கடப்பதாக கருதுக)
  a) அலைநீளம் b) அதிர்வெண் c) திசைவேகம்
  ஆகியவற்றை கணக்கிடுக.

 2. படத்தில் காட்டியபடி நீள் நிறை அடர்த்தி 0.25kgm-1 கொண்ட கம்பியில் இயக்கத்தில் உள்ள துடிப்பின் திசைவேகம் காண்க. மேலும் துடிப்பு 30cm யைக் கம்பியில் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் காண்க.

 3. எஃகு கம்பி ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை கணக்கிடுக. எஃகின் யங்குணகம் Y=2x1011 Nm-2 மற்றும் அடர்த்தி ρ=7800kgm-3

 4. நாயைப் பார்த்து அழும் குழந்தையின் அழுகுரலை  3.0m  தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு 10-2 W m-2 குழந்தையின் அழுகுரலை 6.0m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு எவ்வளவாக இருக்கும் .

 5. ஒலித்துக் கொண்டுள்ள இசைக்கருவி ஒன்றின் ஒலி மட்டம் 50dB. மூன்று ஒத்த இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கும்போது தொகுப்பயன் செறிவைக் காண்.

 6. புல்லாங்குழல் ஒன்று ஏற்படுத்தும் ஒலியின் அதிர்வெண் 450Hz இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சீரிசைகளின் அதிர்வெண்களை காண்க. கிளாரினெட் ஒன்று ஏற்படுத்தும் ஒலியின் அதிர்வெண்ணும் 450Hz எனில் முதல் மூன்று சீரிசைகளின் அதிர்வெண்கள் யாவை?

 7. மூடிய ஆர்கன் குழாயில் 3வது சீரிசையின் அதிர்வெண் திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் அடிப்படை அதிர்வெண்ணுக்குச் சமம் எனில் திறந்த குழாயின் நீளம் 30cm எனக் கொள்க.

 8. ஒத்ததிர்வு காற்று தம்பி கருவியில்ஒரு இசைக்கவையை பயன்படுத்தி காற்று தம்பதின் ஒத்ததிர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கு குழாயிலான இக்கருவியில் அதன் நீளமானது ஒரு பிஸ்டன் மூலம் மாற்றப்படுகிறது. அறை வெப்பநிலையில் ரூ அடுத்தடுத்த ஒத்ததிர்வுகள் 20cm மற்றும் 85cm களில் ஏற்படுகிறது. காற்றுக் தம்பத்தின் அதிர்வெண் 256Hz. அறை வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் காண்க.

 9. கேட்பவர் ஒருவர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் நின்று கொண்டு இரண்டு தொடர் வண்டிகளை நோக்குகிறார். ஒன்று நிலையத்தை நோக்கியும் மற்றொன்று நிலையத்திலிருந்து வெளிநோக்கியும் சாம் திசைவேகம் 8ms-1 ல் செல்கின்றன. இரண்டு தொடர் வண்டிகளும் வெளியிடும் விசில்கள் அதிர்வெண் 240Hz எனில் கேட்பவர் உணரும் விம்மல்களின் எண்ணிக்கை யாது?

 10. சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Three Marks Questions )

Write your Comment