வேலை, ஆற்றல் மற்றும் திறன் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. 2 kg நிறையுள்ள ஒரு பொருள் 5 m உயரத்தில் இருந்து தரையில் விழுகிறது. புவியீர்ப்பு விசையினால் பொருளின்  மீது செய்யப்பட்ட வேலை என்ன? (காற்றின் தடையைப் புறக்கணிக்கவும். புவியீர்ப்பு முடுக்கம் g = 10 m s-2 எனக் கொள்க)

  2. தொடக்கத்தில் ஓய்வில் உள்ள ஒரு பொருளின் மீது F = kx2 என்ற மாறும் விசை செயல்படுகிறது. பொருளானது x = 0 m முதல் x = 4 m வரை இடப்பெயர்ச்சி அடைய விசையினால் செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடுக. (மாறிலி k = 1 N m-2 எனக்கருதுக)

  3. 1 kg நிறையுள்ள ஒரு பொருள் h = 10 m உயரத்திலிருந்து விழுகிறது.
    (a) h = 10 m உயரத்தில் பொருளின் மொத்த  ஆற்றல்
    (b) h = 4 m உயரத்தில் பொருளின் நிலை ஆற்றல்
    (c) h = 4 m உயரத்தில் பொருளின் இயக்க ஆற்றல்
    (d) பொருள் தரையில் மோதும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
    (g = 10 m s-2 எனக் கொள்க)

  4. மீட்சி மற்றும் மீட்சி்யற்ற மோதலின்  சிறப்பியல்புகளை வி்ளக்குக

  5. பின்வருவனவற்றை வரையறு 
    (a) மீட்சி்யளிப்பு குணகம்
    (b) திறன் 
    (c) ஆற்றல் மாறா விதி
    (d) மீட்சி்யற்ற மோதலில்  இ்யக்க ஆற்றல் இழப்பு 

  6. மீட்சி மோதலில் எது மாற்றப்படாமல் இருக்கும்?-மொத்த  ஆற்றல் அல்லது  இ்யக்க ஆற்றல்

  7. நேர் சாலையில் மாறா  வேகத்தில் செல்லும் கார்மீது புற விசைகளால்  நிகர வேலை ஏதும் செய்யப்படுமா?

  8. இயக்க ஆற்றல் என்றால் என்ன?

  9. செங்குத்து வட்ட இயக்கத்தில் வட்டத்தை நிறைவு செய்ய தேவையான சிறும வேகம் என்ன?

  10. மிட்சி மற்றும் மிட்சியற்ற மோதலின் சிறப்பியகளை விளக்குக

  11. கரடு முரடான பரப்பு ஒன்றில் ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் இயங்க தொடர்ந்து வேலை செய்யப்பட வேண்டுமா?

  12. லேசான மற்றும் கனமான இரு பொருட்களின் உந்தம் சமம் எனில், எது அதிக இயக்க ஆற்றல் கொண்டது?

  13. 30 மீ ஆழத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் 20 மெட்ரிக் டன் நிலக்கரியை துக்கக்கூடிய ஒரு என்ஜினின் திறனைக் கணக்கிடு.

  14. ஒரு பொருள் ஆய ஆச்சு அமைப்பின் x அச்சு வழியே இயங்குமாறு ஒரு நிலையான விசை \(\overrightarrow { F } =(2\hat { i } -\hat { j } +4\hat { k } )N,\)க்கு உட்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. எனில் x அச்சில் 4 மீ தொலைவிற்கு பொருளை நகர்த்தி செய்யப்பட்ட வேலை யாது?

  15. 20 kg நிறைவுள்ள ஒரு சிறுவனை ஒரு சாய்வுத் தளம் \(\theta \)=45° யில் 10 m தொலைவு வழியாக நிலையான திசைவேகத்துடன் நகர்த்த செய்யப்படும் வேலையாது?  

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Work, Energy And Power Two Marks Questions )

Write your Comment