பருப்பொருளின் பண்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஒரு திண்மக்கோளம் 1.5 cm ஆரமும் 0.038kg  நிறையும் கொண்டுள்ளது. திண்மக் கோளத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக. 

  2. ஒரு நீரியல் தூக்கியின் இரு பிஸ்டன்கள் 60cm மற்றும் 5 cm விட்டங்களைக் கொண்டுள்ளன. சிறிய பிஸ்டன் மீது 50 N விசை செலுத்தப்பட்டால் பெரிய பிஸ்டன் செலுத்தும் விசை யாது?

  3. 2.5 × 10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25 × 10-3m தடிமனான விளக்கெண்ணெய் ஏட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3 × 10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக.
    கொடுக்கப்பட்டவை:
    A = 2.5 x 10-4m2,dx = 0.25 x 10-3m,
    F = 2.5N and dv = 3 x 10-2ms-1

  4. ஒரு சோப்புக்குழியின் படலத்தின் பரப்பை 50cm2 லிருந்து 100cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2.4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக.

  5. ஒப்படர்த்தி 0.8 கொண்ட 4mm உயரமுள்ள எண்ணெய் தம்பத்தினால் 2.0cm ஆரமுள்ள சோப்புக் குமிழியின் மிகையழுத்தம் சமப்படுத்தப்பட்டால், சோப்புக்குமிழியின் பரப்பு இழுவிசையைக் காண்க.

  6. நுண்புழைக் குழாய் ஒன்றில் நீர் 2.0 cm உயரத்திற்கு மேலேறுகிறது. இக்குழாயின் ஆரத்தைப்போல மூன்றில் ஒரு பகுதி ஆரமுடைய மற்றொரு நுண்புழைக் குழாயில் நீர் எந்த அளவிற்கு மேலேறும்?

  7. சோடாச் சுண்ணாம்பு கண்ணாடிக்கும் பாதரசத்திற்கும் இடையே சேர்கோணம் 1400 ஒரு கிண்ணத்திலுள்ள பாதரசத்தில் 2mm ஆரமுடைய இதே கண்ணாடியால் ஆன நுண்புழைக்குழாய் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. திரவத்தின் வெளிப்புற மேற்பரப்பைப் பொறுத்து குழாயில் பாதரசத்தின் மட்டம் எவ்வளவு குறையும்?
    பாதரசத்தின் பரப்பு இழுவிசை T =0.456Nm-1
    பாதரசத்தின் அடர்த்தி \(\rho =13.6\times { 10 }^{ 3 }kg{ m }^{ -3 }\)

  8. ஒரு சாதாரண மனிதனுக்கு பெருநாடி வழியாக இரத்தம் செல்லும் வேகம் 0.33 ms-1. (ஆரம் r=0.8 cm) பெறுநொடியில் இருந்து 0.4 cm  ஆரம் கொண்ட 30 எண்கள் உள்ள பெரும் தமனிகளுக்கு இரத்தம் செல்கிறது. தமனிகளின் வழியே செல்லும் இரத்தத்தின் வேகத்தை கணக்கிடுக.

  9. கொடுக்கப்பட்டுள்ள உலோகத்தின் யங்  குணகம் விறைப்பு குணகத்தை போல் 2-4 தடவைகள் எனில் இதன் பாய்சன் விகிதம் யாது?  

  10. கம்பியின் மேல் முனையின் ஆரம் 4mm அதன் நீளம் 100cm  இது பொருத்தப்பட்டுள்ளது.மறுமுனை சறுக்குக்கோணம் 300 யின்  மூலம் திருப்பபடுகிறது .       

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Properties Of Matter Three Marks Questions )

Write your Comment