11th Public Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. இவற்றுள் எந்தவாயில் தருக்கவழிமாற்று என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    AND

    (b)

    OR

    (c)

    NOT

    (d)

    XNOR

  3. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    பதிவேடு

  4. லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது

    (a)

    ext2

    (b)

    NTFS

    (c)

    FAT

    (d)

    NFTS

  5. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  6. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?

    (a)

    இரண்டு எண்களை பெருக்குதல்

    (b)

    ஒரு கோலத்தை வரைதல்

    (c)

    பூங்காவில் நடை பயிற்சி

    (d)

    முடியை மழித்தல்

  7. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்?
    1    S1
    2            while C
    3           S2
    4     S3

    (a)

    S1; S3

    (b)

    S1;S2;S3

    (c)

    S1;S2;S2;S3

    (d)

    S1;S2;S2;S2;S3

  8. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    (a)

    மடக்கின் தொடக்கத்தில்

    (b)

    ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்

    (c)

    ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்

    (d)

    நெறிமுறையின் தொடக்கத்தில்

  9. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:

    (a)

    நிரல் 

    (b)

    நெறிமுறை 

    (c)

    பாய்வுப்படம் 

    (d)

    வில்லைகள்

  10. பின்வருவனவற்றுள் நூலக செயற்கூறுகளுக்கு தேவையான செயற்கூறு  முன் மாதிரி மற்றும் வரையறுப்புகளை கொண்டுள்ளது எது?    

    (a)

    தலைப்பு கோப்பு 

    (b)

    தரவு கோப்பு 

    (c)

    நிரல் கோப்பு 

    (d)

    தகவல் கோப்பு 

  11. சரங்களின் அணி என்பது

    (a)

    ஒரு பரிமாண குறியுறு அணி

    (b)

    ஒரு பரிமாண சரங்களின் அணி

    (c)

    இரு பரிமாண சரங்களின் அணி

    (d)

    இரு பரிமாண குறியுறு அணி

  12. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?

    (a)

    OOP 

    (b)

    POP 

    (c)

    ADT 

    (d)

    SOP 

  13. பின்வருவனவற்றுள் எது சரி,எது தவறு என எழுதுக.
    1.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு அழிப்பி மட்டுமே வரையறுக்க முடியும்.
    2.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு ஆக்கியை மட்டுமே வரையறுக்க முடியும்.
    3. ஆக்கிகளை இனக்குழுவின் பெயரை கொண்டு அறியலாம்.
    4.அழிப்பிகளை தருவிக்க முடியாது.

    (a)

    1-சரி, 2-தவறு , 3-சரி, 4-சரி

    (b)

    1-சரி , 2-தவறு , 3-சரி, 4-தவறு 

    (c)

    1-தவறு, 2-தவறு, 3-சரி, 4-தவறு

    (d)

    1-சரி, 2-தவறு, 3-தவறு, 4-சரி

  14. C++ பல்லுருவாக்கம் எதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது?

    (a)

    தரவு அருவமாக்கம்

    (b)

    உறைபொதியாக்கம் 

    (c)

    இனக்குழுக்கள் 

    (d)

    பணி மிகுப்பு

  15. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    heavy-vehicle இனக்குழுவின் பொருள்களால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறு யாது?

    (a)

    void input data (int, int)

    (b)

    void output data( )

    (c)

    void read data (int, int)

    (d)

    both (அ) மற்றும் (ஆ)

  16. 6 x 2 = 12
  17. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  18. XOR வாயிலின் தருக்க சுற்று வரைக

  19. GUI என்றால் எஎன்ன?

  20. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

  21. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?

  22. If கூற்று எவ்வாறு இயக்கப்படுகிறது?

  23. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.

  24. இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?

  25. இனக்குழுவின் உடற்பகுதியானது எதனை கொண்டுள்ளது 

  26. 6 x 3 = 18
  27. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  28. XNOR வாயிலைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  29. பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.

  30. m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.

  31. சிறப்புச் சொற்கள் (keywords) மற்றும் குறிப்பெயர்கள் (identifers) –க்கு இடையே உள்ள வேறுபாடுகளை விவரி?

  32. பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும்  போது  கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?  

  33. பின்னலான கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  34. இனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.

  35. பின்வரும் கூற்றின்படி மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.
    (i) பல அடிப்படை இனக்குழுவிலிருந்து தரவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது.
    (ii) ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவில் இருந்து தருவிக்கப்படுத்தல் .
    (iii) பலநிலை மரபுரிமம் + பலவழி மரபுருமம் = 
    (iv) ஒரு இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால்
    (v) class student {public : int roll no; };
    class dstudent : public student {public : int marks} எ.கா?  

  36. 5 x 5 = 25
  37. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  38. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  39. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

  40. A என்ற எண்ணைய் B என்ற எண்ணால் வகுத்து, ஈவு மற்றும் மீதியை கணக்கிடுவதற்கான சுழற்சி நெறிமுறை ஒன்றை கட்டமைக்கவும்.நெறிமுறை திட்டத்தின் படி இந்த நெறிமுறை கீழ்கண்ட விதிகளுக் கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
    divide (A , B)
    -- inputs:      A ஒரு முழு எண் மற்றும் B ≠ 0
    -- outputs :  q மற்றும் r; such that A = q X B+ r --
                        -- மற்றும் 0 ≤ r < B

  41. C++ல் நிரலை உருவாக்குவதற்கு இயக்குவதற்கும் உள்ள படிநிலைகளை எழுதுக.

  42. நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  43. வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.       

  44. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  45. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

  46. கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    class A
    {
    protected:
    int x;
    public:
    void show()
    {
    cout << "x = "< }
    A()
    {
    cout< }
    ~A()
    {
    cout< }
    };
    class B : public A
    {
    {
    protected:
    int y;
    public:
    B(int x, int y)
    {
    this->x = x; //this -> is used to denote the objects datamember
    this->y = y; //this -> is used to denote the objects datamember
    }
    B()
    {
    cout< }
    ~B()
    {
    cout< }
    void show()
    {
    cout<< "x = "< cout<< "y = "< }
    };
    int main()
    {
    AobjA;
    B objB(30, 20);
    objB.show();
    return 0;
    }

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment