இயக்க விதிகள் முக்கிய வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

  (a)

  திசையில் நிலைமம்

  (b)

  இயக்கத்தில் நிலைமம்

  (c)

  ஓய்வில் நிலைமம்

  (d)

  நிலைமமற்ற தன்மை

 2. படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன, முதல் நிலையில் F1 விசை இடப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F2
        

  (a)

  1: 1

  (b)

  1: 2

  (c)

  2: 1

  (d)

  1: 3

 3. மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?

  (a)

  நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்

  (b)

  சூழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்

  (c)

  எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்

  (d)

  நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்

 4. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  மாறாது

  (d)

  முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

 5. நியூட்டனின் முதல் இயக்கவிதியில் இருந்து அறியப்படும் கருத்து________.

  (a)

  ஆற்றல்

  (b)

  வேலை

  (c)

  உந்தம்

  (d)

  நிலைமம்

 6. பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?

  (a)

  திசைவேகம்

  (b)

  நிறை

  (c)

  பரப்பு

  (d)

  பருமன்

 7. எதனடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது?

  (a)

  நியூட்டனின் முதல் இயக்க விதி

  (b)

  நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி

  (c)

  நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி

  (d)

  நியூட்டனின் முதல் மற்றும் இரண்டாம் இயக்க விதிகள்

 8. துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது அதன் முடுக்கம்_________.

  (a)

  தொடுகோட்டின் வழியே ஏற்படும்

  (b)

  ஆரத்தின் வழியே ஏற்படும்

  (c)

  வட்டப்பாதை வழியே ஏற்படும்

  (d)

  சுழி

 9. வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம்_______.

  (a)

  எண்மதிப்பில் மட்டும் மாறும்

  (b)

  மாறாமல் இருக்கும்

  (c)

  திசையில் மட்டும் மாறும்

  (d)

  எண்மதிப்பிலும் திசையிலும் மாறும்

 10. மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்? 

  (a)

  புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

  (b)

  புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

  (c)

  புவி, மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 11. 6 x 2 = 12
 12. துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?

 13. தளம் ஒன்றில் இயங்கும் துகளின் திசைவேகம் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. துகள் மீது செல்படும் விசையின் திசையைக் காண்க.
          

 14. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

 15. பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை குறைவதற் குப்பதிலாக அதிகரிப்பதன் காரணம் என்ன?

 16. ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றுமா?

 17. மையநோக்கு விசைக்கு எ.கா மூன்றினைக் கூறுக.

 18. 6 x 3 = 18
 19. புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரணடடாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளைஆராய்க.

 20. படத்தில் காட்டியுள்ள A, B மற்றும் C என்ற கனச் செவ்வகத்துண்டுகளின் மீது செயல்படும் விசைகளை காண்க.
      
  கனச்செவ்வகத்துண்டு A யின் மீது செயல்படும்

 21. உந்தமாறாவிதியின் பொருள் தருக.

 22. நேர்கோட்டு இயக்கம்,சுழல் இயக்கம் -ஒப்பிடுக.

 23. கிரிக்கெட் வீரர், வேகமாக வரும் பந்தினை பிடிக்கும் போது அவரின் கரங்களை பந்து வரும் திசையிலே படிப்படியாக தாழ்த்துவதன் காரணம் என்ன?

 24. இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிர்வுத் தாங்கிகள் (shock absorbers) பயன் என்ன?

 25. 2 x 5 = 10
 26. மையநோக்கு மற்றும் மையவிலக்கு விசைகளுக்கிடையேயான ஒத்த, வேறுபட்ட கருத்துகளை விவரி.

 27. ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்கஉராய்வு-ஒப்பிடுக

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் Chapter 3 இயக்க விதிகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Physics Chapter 3 Laws Of Motion Important Question Paper )

Write your Comment