இயக்க விதிகள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

  (a)

  திசையில் நிலைமம்

  (b)

  இயக்கத்தில் நிலைமம்

  (c)

  ஓய்வில் நிலைமம்

  (d)

  நிலைமமற்ற தன்மை

 2. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு.

  (a)

  1

  (b)

  1 ஐ விடக் குறைவு

  (c)

  1 ஐ விட அதிகம்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 3. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  எப்பொழுதும் சுழி

  (b)

  சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

  (c)

  எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

  (d)

  முடிவு செய்ய இயலாது

 4. மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?

  (a)

  நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்

  (b)

  சூழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்

  (c)

  எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்

  (d)

  நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்

 5. 5 x 2 = 10
 6. துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?

 7. 2 kg நிறையுடைய பொருளின்மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன. \(\overrightarrow { { F }_{ 1 } } =5\hat { i } +8\hat { j } +7\hat { k } \) மற்றும் \(\overrightarrow { { F }_{ 2 } } =3\hat { i } -4\hat { j } +3\hat { k } \) பொருளின் முடுக்கத்தைக் காண்க.

 8. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

 9. பாராசூட் மெதுவாகக் கீழே விழுவதன் காரணம் என்ன?

 10. உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?

 11. 2 x 3 = 6
 12. போலி விசை என்றால் என்ன?

 13. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கூறுக.

 14. 2 x 5 = 10
 15. சறுக்குக் கோணத்தை கண்டறிவதற்கான சோதனையைச் சுருக்கமாக விவரி.

 16. 7 kg மற்மற்றும் 5 kg நிறைறையுடையடையடைய இரண்டு பொருட்கட்கள் படத்தில் காட்டியுள்ளவாறு மேசையின் முனையில் பொருத்தப்பட்டுள்ள கப்பி ஒன்றின் வழியே செல்லும் மெல்லிய கயிற்றின் இரண்டு முனைகளில் இணைக்கப்பட்டுள்ளன. பொருளுக்கும், பொருள் வைக்கப்பட்டுள்ள பரப்புக்கும் இடையேயான ஓய்வு நிலை உராய்வுக் குணகத்தின் மதிப்பு 0.9 எனில் பரப்பின் மீது வைக்கப்பட்டிருக்கும் 7 kg நிறையுடைய m1 என்ற பொருள் நகருமா? அவ்வாறு நகரவில்லை எனில் m2 நிறையின் எம்மதிப்பிற்கு m1 நிறை நகரத் துவங்கும்?

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - இயக்க விதிகள் Book Back Questions ( 11th Standard Physics - Laws of Motion Book Back Questions )

Write your Comment