துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.

    (a)

    துகள்களின் நிலை

    (b)

    துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

    (c)

    துகள்களின் நிறை

    (d)

    துகளின் மீது செயல்படும் விசை

  2. இரட்டை உருவாக்குவது ______.

    (a)

    சுழற்சி இயக்கம்

    (b)

    இடப்பெயர்ச்சி இயக்கம்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி

    (d)

    இயக்க மின்மை

  3. துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம் ______.

    (a)

    சுழி

    (b)

    x ஐப் பொருத்து அதிகரிக்கிறது

    (c)

    x ஐப் பொருத்து குறைகிறது

    (d)

    மாறாதது

  4. 3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.

    (a)

    0.25 rad s-2

    (b)

    25  rad s-2

    (c)

    5  m s-2

    (d)

    25 m s-2

  5. உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    சுழலும் திசையைச் சார்ந்தது

  6. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.

    (a)

    L

    (b)

    L/2

    (c)

    2L

    (d)

    \(\frac { L }{ \sqrt { 2 } } \)

  7. துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது.

    (a)

    வட்டத்தின் மையத்தை

    (b)

    வட்டப்பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியை

    (c)

    வட்டத்தின் உள்ளே ஏதேனும் ஒரு புள்ளியை

    (d)

    வட்டத்தின் வெளியே ஏதேனும் ஒரு புள்ளியை

  8. ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது ______.

    (a)

    சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

    (b)

    சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

    (c)

    ஆரத்தின் வழியாக இருக்கும்

    (d)

    பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்

  9. சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள் மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது ______.

    (a)

    \(\frac { 1 }{ 4 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

    (b)

    \(I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

    (c)

    \(\frac { 1 }{ 8 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

    (d)

    \(\frac { 1 }{ 2 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

  10. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  11. மையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது______.

    (a)

    15 MR2/32

    (b)

    13 MR2/32

    (c)

    11 MR2/32

    (d)

    9 MR2/32

  12. கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.

    (a)

    சுழி

    (b)

    v0

    (c)

    \(\sqrt { 2 } { v }_{ 0 }\)

    (d)

    2v0

  13. சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.

    (a)

    இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

    (b)

    சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

    (d)

    இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

  14. கோண திசைவேகம் நிலைமைத்திருப்பு திறனுக்கு ______ 

    (a)

    நேர்த்தகவல்

    (b)

    எதிர்த்தகவல்

    (c)

    மாறிலி

    (d)

    அனைத்தும்

  15. சுழற்சி ஆரத்திற்கான அலகு ________ 

    (a)

    m

    (b)

    kg

    (c)

    ms-1

    (d)

    kg m-1

  16. கோண உந்தம் என்பது எவற்றின் வெக்டர் பெருக்கல் ஆகும்?

    (a)

    நேர்கோட்டு உந்தம் மற்றும் வெக்டர்

    (b)

    நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணதிசைவேகம்

    (c)

    நேர்கோட்டு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம்

    (d)

    நேர்கோட்டுத் திசைவேகம் மற்றும் ஆரவெக்டர்

  17. கோண உந்த மாறுபட்டு வீதம் எதற்கு சமம்?

    (a)

    விசை

    (b)

    கோண முடுக்கம்

    (c)

    திருப்புவிசை

    (d)

    நிலைமத் திருப்புத்திறன்

  18. சுருள்வில் மீதமைந்த பலகையின் மீதிருந்த துள்ளிக் குதிக்கும் நீச்சல் வீரர், நீரின் மீது விழுமுன் காற்றில் பல குட்டிகரணங்களிடும்போது, மாறாது எது?

    (a)

    நேர்கோட்டு உந்தம்

    (b)

    நிலைமத் திருப்புத்திறன்

    (c)

    இயக்க ஆற்றல்

    (d)

    கோண உந்தம்

  19. பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்தல்ல?

    (a)

    கோணதிசைவேகம்

    (b)

    நிறை

    (c)

    சுழற்சியின் அச்சு

    (d)

    நிறையின் பரவல்

  20. SI முறையில் நிறையின் மையத்தின் அலகு 

    (a)

    (b)

    kg m2

    (c)

    kg m 

    (d)

    kg 

  21. உராய்வற்ற கிடைத்தளத்தில் வைக்கப்பட்ட ஒரு முடிய பெட்டி ஒன்றில் பந்து வைக்கப்பட்டுள்ளது. பந்து பெட்டியின் சுவர்களோடு மோதலுறுகிறது எனில்,

    (a)

    பெட்டியின் நிறையின் மையம் மாறாது 

    (b)

    பெட்டி மற்றும் பந்து இணைந்த அமைப்பின் நிறையின் மையம் மாறாது 

    (c)

    பந்தின் நிறையின் மையம் மாறாது 

    (d)

    பெட்டியைப் பொருத்து பந்தின் நிறையின் மையம் மாறாது 

  22. ஒரு அமைப்பின் நிறையின் மையம் 

    (a)

    அமைப்பின் மையத்தில் இருக்கும் 

    (b)

    அமைப்பிற்கு வெளியே இருக்கும் 

    (c)

    அமைப்பிற்கு உள்ளே இருக்கும் 

    (d)

    அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும் 

  23. முழுதொத்த இரு பொருள்கள் கொண்ட ஒரு அமைப்பில், ஒரு பொருள் அமைதி நிலையிலும், இரண்டாவது பொருள் a என்ற முடுக்கத்திலும் இயங்கினால், நிறையின் மையத்தின் முடுக்கம் 

    (a)

    சுழி 

    (b)

    a/2

    (c)

    (d)

    2a 

  24. 3 m நீள தண்டின் ஒரு அலகு நீளத்தின் நிறை அதன் ஒரு முனையில் இருந்து உள்ள தொலைவு x- க்கு நேர்த்தகவில் இருக்கின்றது எனில், அதன் ஒரு முனையிலிருந்து ஈர்ப்பின் மையத்தின் தொலைவு யாது?

    (a)

    1.5 m 

    (b)

    2 m 

    (c)

    2.5 m 

    (d)

    3 m 

  25. ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து, சம நிறையுள்ள இரு பந்துகள், ஒரே திசைவேகத்தில், ஒண்டு கிடைத்தளத்தோடு \(\theta \) கோணத்தில் மேல்நோக்கியும், மற்றது கிடைத்தளத்தோடு \(\theta \)கோணத்தில் கீழ் நோக்கியும் அறியப்படுகின்றன எனில், இரு பந்துகளின் நிறையின் மையத்தின் பாதை 

    (a)

    செங்குத்து, நேர்கோடு வழியாக அமையும் 

    (b)

    கிடைத்தள, நேர்கோடு வழியாக அமையும் 

    (c)

    கிடைத்தளத்தோடு \(\alpha (<\theta )\)என்ற நேர்கோடு வழியாக அமையும் 

    (d)

    பரவளையப் பாதையில் அமையும் 

  26. தொடக்கத்தில் அமைதி நிலையில் உள்ள இரு பொருட்கள் அவற்றின் உள்ளார்ந்த கவர்ச்சி காரணமாக ஒன்றையொன்று நோக்கி இயங்குகின்றன. எந்தவொரு கணத்திலும் அவற்றின் வேகங்கள் v மற்றும் 2v எனில், அமைப்பின் நிறை மையத்தின் திசைவேகம் 

    (a)

    2v 

    (b)

    சுழி 

    (c)

    1.5 v 

    (d)

  27. கடிகாரத்தில், நிமிட முள்ளின் கோணத் திசைவேகம் 

    (a)

    \(\frac { \pi }{ 21600 } { rads }^{ -1 }\)

    (b)

    \(\frac { \pi }{ 12 } { rads }^{ -1 }\)

    (c)

    \(\frac { \pi }{ 3600 } { rads }^{ -1 }\)

    (d)

    \(\frac { \pi }{ 1800 } { rads }^{ -1 }\)

  28. எஞ்சின் ஒன்றின் சக்கரம் நிமிடத்திற்கு 90 முறை சுழலுமெனில் அதன் கோணத் திசைவேகம்?

    (a)

    1.5  \(\pi \)rad/s

    (b)

    3  \(\pi \)rad/s

    (c)

    4.5  \(\pi \)rad/s

    (d)

    6  \(\pi \)rad/s

  29. பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்ததல்ல?

    (a)

    கோணத்திசைவேகம் 

    (b)

    நிறை 

    (c)

    சுழற்சியின் அச்சு 

    (d)

    நிறையின் பரவல் 

  30. திண்மப் பொருள் ஒன்றின் நிலைமத் திருப்புத் திறன் எதைச் சார்ந்து அமையும்?

    (a)

    சுழலும் அச்சிலிருந்து நிறையின் பரவலை 

    (b)

    பொருளின் கோணத் திசைவேகத்தை 

    (c)

    பொருளின் கோண முடுக்கத்தை 

    (d)

    பொருளின் நிறையை 

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Physics Motion of System of Particles and Rigid Bodies One Marks Question And Answer )

Write your Comment