அலைவுகள் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. சீரலைவு மற்றும் சீரற்ற அலைவு இயக்கம் என்றால் என்ன? இரு உதாரணங்கள் தருக

  2. தனிச்சீரிசை இயக்கத்தின் அதிர்வெண் வரையறு.

  3. தனிச்சீரிசை இயக்கத்தின் அலைவு நேரம் வரையறு.

  4. இரு சுருள்வில்கள் பக்க இணைப்பில் உள்ள தொகுப்பை பற்றி சிறு குறிப்பு வரைக.

  5. தனி ஊசலின் அலைவுநேரம் பற்றி எழுதுக

  6. தனி ஊசலின் விதிகளைத் தருக?

  7. ஒத்ததிர்வு விளக்குக. எடுத்துக்காட்டு தருக.

  8. கிடைத்தளத்துடன் 450 கோணம் ஏற்படுத்தும் சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள உருளும் டிராலியில் l =0.9m நீளமுள்ள தனிஊசல் முறையாக பொருத்தப்பட்டுள்ளதாக கொள்வோம். சாய்தளமான ஊராய்வற்றது எனில் தனிஊசலின் அலைவுக்காலத்தை கணக்கிடுக.

  9. ஒத்த அதிர்வெண்ணும் வெவ்வேறான வீச்சுகளும் கொண்ட இரு சீரிசை இயக்கங்கள் x மற்றும் y அச்சுகளின் வழியே x = A sin (ωt + ψ) (x அச்சின் வழியாக) மற்றும் y = B sin ωt (y அச்சின் வழியாக) என்ற வீச்சுகளுடன் இயக்கமடைகிறது எனக் கொள்க.
    \({x^2\over A^2}+{y^2\over B^2}-{2xy\over AB}cosψ=sin^2ψ\)எனக் காட்டுக.
    a.ψ=0 b.ψ=π c.\(ψ={\pi\over2}\) d.\(ψ={\pi\over2}\) மற்றும் A=B e.\(ψ={\pi\over4}\)
    ஆகிய சிறப்பு நிகழ்வுகளையும் விவாதிக்க.
    குறிப்பு: துகளானது ஒன்றுக் கொன்று செங்குத்தாக செயல்படும் இரு சீரிசை இயக்கங்களுக்கு உட்படுத்தப்படும் போது துகளானது வேறுபாதையின் வழியாக இயக்கமடையும், அப்பாதையே லிசாஜபடம் என்று அழைக்கப்படுகிறது.

  10. தனிச் சீரிசை இயக்கத்தில் திசைவேகம் என்பது யாது?

  11. கோண சீரிசை இயக்கம் என்றால் என்ன?

  12. தடையுறு அலைகள் எடுத்துக்காட்டு தருக.

  13. ஒரு தனி ஊசலின் நீளம் 1.20m, ஆனால் அதை நோக்குபவர் 1மீ நீளம் எனக் காண்கிறார். அதன் அலைவு காலம் 2.00s ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனில் புவிஈர்ப்பு முடுக்கம் யாது?

  14. மூன்று சுருள் வில்களின் விசை மாறிலிகள் முறையே k1=7.5\(\frac{N}{m}\), k2=10.0\(\frac{N}{m}\), k=12.5\(\frac{N}{m}\). இம்மூன்றும் பக்க இணைப்பில் ஒரு நிறை 0.500kg உடன் இணைக்கப்படுகிறது. வலப்பக்கமாக நிறை இழுக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது எனில் இயக்கத்தின் கால அளவு யாது?

  15. m நிறையானது v என்ற வேகத்தில் ஒரு உராய்வற்ற கிடைத்தள பரப்பில் சென்று, ஏறத்தாழ நிறையற்ற, சுருள் மாறிலி k கொண்ட சுருள்வில் மீது மோதுகின்றது. மோதலுக்கு பிறகு நிறையானது அமைதி நிலைக்கு வருகின்றது எனில் சுருள்வில்லின் அமுக்கத்தை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - அலைவுகள் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Physics - Oscillations Two Marks Questions )

Write your Comment