11th First Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. கீழ்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.

    (a)

    விசை மற்றும் திறன்

    (b)

    திருப்புவிசை மற்றும் ஆற்றல்

    (c)

    திருப்புவிசை மற்றும் திறன்

    (d)

    விசை மற்றும் திருப்புவிசை

  2. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

    (a)

    \(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)

    (b)

    \(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)

    (c)

    \({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)

    (d)

    \({{m}_{1}\over{m}_{2}}\)

  3. கீழ்கண்டவற்றின் ஒத்த வெக்டர்கள் _______ 

    (a)

    (b)

    (c)

    (d)

  4. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  5. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

    (a)

    v

    (b)

    v2

    (c)

    v3

    (d)

    v4

  6. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.

    (a)

    துகள்களின் நிலை

    (b)

    துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

    (c)

    துகள்களின் நிறை

    (d)

    துகளின் மீது செயல்படும் விசை

  7. SI முறையில் நிறையின் மையத்தின் அலகு 

    (a)

    (b)

    kg m2

    (c)

    kg m 

    (d)

    kg 

  8. சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A,B மற்றும் C  ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB மற்றும் KC ஆகும்.  இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், _____. 

    (a)

    KA > KB >KC

    (b)

    KB < K< KC

    (c)

    KA < KB < KC

    (d)

    KB > KA > KC

  9. 2 cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் விதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?

    (a)

    22

    (b)

    23

    (c)

    24

    (d)

    25

  10. சைக்கிள் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது. இதற்கு ______ நிகழ்வு என்று பெயர்.

    (a)

    வெப்பநிலை மாறா 

    (b)

    வெப்பப்பரிமாற்றமில்லா 

    (c)

    அழுத்தம்மாறா 

    (d)

    பருமன் மாறா 

  11. பின்வரும் வாயுக்களில், எவ்வாறு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தை (vrms) பெற்றுள்ளது?

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    கார்பன் - டை - ஆக்ஸைடு

  12. பின்வரும் எந்த வெப்பநிலையில் வாயுவின் மூலக்கூறுகள் [20oC யில்]இயக்க ஆற்றலின் சராசரியில் இரண்டு மடங்காகும்.

    (a)

    40oC

    (b)

    80oC

    (c)

    586oC

    (d)

    313oC

  13. a முடுக்கத்துடன் கிடைத்தளத்தில் இயங்க கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின் மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T ∝ {1\over g^2+a^2}\)

    (b)

    \(T ∝ {1\over \sqrt {g^2+a^2}}\)

    (c)

    \(T ∝ \sqrt {g^2+a^2}\)

    (d)

    T \(∝\) (g2 + a2)

  14. குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின்  திசைவேகம் 500ms-1 அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600ms -1, எனில் Bல் அதிர்வெண் அலைநீளம் முறையே_______.

    (a)

    120Hz மற்றும் 5m

    (b)

    100Hz மற்றும் 5m

    (c)

    120Hz மற்றும் 6m

    (d)

    100Hz மற்றும் 6m

  15. ஒரு ஒலி மூலத்தின் அதிர்வெண் 600Hz நீரினுள்ளே வைக்கப்பட்டுள்ள நீரில் ஒலியின் வேகம் 1,500ms-1, காற்றில் 300ms-1 காற்றில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரால் பதியப்பட்ட ஒலியின் அதிர்வெண்.

    (a)

    180Hz 

    (b)

    200Hz 

    (c)

    600Hz 

    (d)

    120Hz

  16. 6 x 2 = 12
  17. "பாராலாட்டிக் நொடி" அல்லது பர்செக் வரையறு

  18. துகளொன்றின் நிலை வெக்டரின் நீளம் 1m. அது x அச்சுடன் 30° கோணத்தில் உள்ளது எனில், நிலைவெக்டரின் x மற்றும் y கூறுகளின் நீளங்களைக் காண்க.

  19. பனிக்கட்டி மீது நடக்கும் போது நெருக்கமாக அடி எடுத்து வைக்க வேண்டும் ஏன்?

  20. வரையறு: இயக்க ஆற்றல் 

  21. அக விசை, புற விசை என்றால் என்ன?

  22. சூரியனிலிருந்து இரு கோள்கள் உள்ள தொலைவுகளின் தகவு \(\frac { { d }_{ 1 } }{ { d }_{ 2 } } =2\), எனில் இரு கோள்கள் உணரும் ஈர்ப்பு புல வலிமைகளின் தகவு யாது?

  23. அதிகாலையில் சைக்களில் செல்லும் ஒருவர் 25oC வெப்பநிலையில் சைக்கிளின் காற்றழுத்தத்தை 500 kPa என அளவிடுகிறார். பிற்பகலில் அவர் சைக்கிளின் காற்றழுத்தத்தை அளவிடும்போது 520 kPa ஆக உள்ளதெனில் பிற்பகலில் சைக்கிள் டயரின் வெப்பநிலை என்ன?(இங்கு டயரின் வெப்ப பிரிவைப் புறக்கணிக்கவும்)

  24. ஒரு தனி ஊசலின் நீளம் 1.20m, ஆனால் அதை நோக்குபவர் 1மீ நீளம் எனக் காண்கிறார். அதன் அலைவு காலம் 2.00s ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனில் புவிஈர்ப்பு முடுக்கம் யாது?

  25. வெவ்வேறு மதிப்புகளுக்கு y = x - a என்ற கோட்டினை வரைக.

  26. 6 x 3 = 18
  27. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

  28. துகளொன்றின் நிலை வெக்டர் \(\overrightarrow { r } =3{ t }^{ 2 }\widehat { i } +5t\widehat { j } +6\widehat { k } \), என கொடுக்கப்பட்டுள்ளது. t = 3s என்ற குறிப்பிட்ட நேரத்தில் அத்துகளின் திசைவேகம் மற்றும் வேகம் இவற்றைக் காண்க?

  29. வண்டியில் கட்டப்பட்ட குதிரை ஒன்றைக் கருதுக. தொடக்கத்தில் அக்குதிரை ஒய்வு நிலையில் உள்ளது. குதிரை முன் நோக்கி நடக்கத் தொடங்கும் போது, வண்டி முன்நோக்கி ஒரு முடுக்கத்தைப்பெறும். Fh என்ற விசையுடன் குதிரை, வண்டியை முன் நோக்கி இழுக்கும். அதேநேரத்தில் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி வண்டியும், அதற்கு சமமான எதிர்திசையில் செயல்படும் (Fc = Fh) என்ற விசையுடன் குதிரையைப் பின்னோக்கி இழுக்கும். எனவே குதிரை மற்றும் வண்டி என்ற தொகுப்பின் விசை சுழியாக இருப்பினும் ஏன் குதிரை மற்றும் வண்டி முடுக்கமடைந்து முன்நோக்கி செல்கின்றன?

  30. 2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg m s-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன.
    (a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா?
    (b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

  31. தூய உருளுதலுக்கான நிபந்தனை என்ன?

  32. இலேசான கோள் ஒன்று, ஒரு திரளான விண்மீனை வட்டப் பாதையில் சுற்றி வருவதாகக் கொண்டால் அதன் ஆரம் r, சுற்றுக் காலம் T என்க. கோளுக்கும், விண்மீனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை r-3/2 க்கு நேர்விகிதத்தில் இருக்குமானால் T மற்றும் r க்கு இடையேயான தொடர்பு யாது?

  33. பாய்மத்தின் அழுத்தத் தினை விவரி?   

  34. "வெப்ப இயந்திரவியல் சமானம்" என்பது ஓர் தவறான பிரயோகமாகும் ஏன்?

  35. வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின்மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையை பெறுக.

  36. 5 x 5 = 25
  37. பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக

  38. இரு துகள்கள் x அச்சில் இயங்குகின்றன. துகளின் நிலை x = 6.0t+4.0t +2.0, இரண்டாவது துகள் முடுக்கம் a =-6.0t.t =0 கால அளவில் திசைவேகம் 30m/s துகள்களின் திசைவேகங்கள் பொருத்தமாகும் போது அதன் திசை வேகத்தைக் காண்.

  39. மையநோக்கு மற்றும் மையவிலக்கு விசைகளுக்கிடையேயான ஒத்த, வேறுபட்ட கருத்துகளை விவரி.

  40. மேற்பக்க மற்றும் அடிப்பக்க புள்ளிகளுக்கான செங்குத்து வட்ட இயக்கத்திற்கான சமம்பாட்டைத் தருவி.  

  41. சமநிலையின் வகைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குக.

  42. புவிமையக் கொள்கைக்கு பதிலாக சூரியமையக்  கொள்கை ஏற்றுக் கொள்ளப்படுவற்க்கு  கோள்களின் பின்னோக்கிச் செல்வதுபோலத் தோன்றும் இயக்கக்கருத்து எவ்வாறு உதவியது?

  43. திரவத்தின் வெவ் வேறு மட்டங்களில் உள்ள மூலக்கூறுகளுக்கிடேயேயான விசைகள் பற்றி எழுதுக.

  44. நியூட்டன் குளிர்வு விதியை விரிவாக விளக்குக.

  45. தனிச்சீரிசை இயக்கத்தில்
    a. இடப்பெயர்ச்சி மற்றும் திசைவேகத்திற்கான கட்ட வேறுபாடு \(\pi \over 2\) ரேடியன் அல்லது 900.
    b. திசைவேகம் மற்றும் முடுக்கத்திற்கான கட்ட வேறுபாடு \(\pi \over 2\) ரேடியன் அல்லது 900.
    c.இடப்பெயர்ச்சி மற்றும் முடுக்கத்திற்கான கட்ட வேறுபாடு  \(\pi \over 2\) ரேடியன் அல்லது 1800 எனக் காட்டுக

  46. சுரமானி என்றால் என்ன? அதன் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விவரி சுராமானியை பயன்படுத்தி இசைக்கவையின் அதிர்வெண்ணை எவ்வாறு அளப்பாய்?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Physics Model Revision Test Question Paper 2019 )

Write your Comment