இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது

  (a)

  8%

  (b)

  2%

  (c)

  4%

  (d)

  6%

 2. பின்வருவைவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

  (a)

  நினற

  (b)

  நீளம்

  (c)

  உந்தம்

  (d)

  முடுக்கத்தின் எண்மதிப்பு

 3. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  எப்பொழுதும் சுழி

  (b)

  சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

  (c)

  எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

  (d)

  முடிவு செய்ய இயலாது

 4. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது

  (a)

  L

  (b)

  L/2

  (c)

  2L

  (d)

  \(\frac { L }{ \sqrt { 2 } } \)

 5. புவியினை  வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சாரந்தது அல்ல

  (a)

  சுற்றுப்பாதையின் ஆரம் 

  (b)

  துணைக்கோளின் நிறை 

  (c)

  சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் 

  (d)

  சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல 

 6. கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குணகம் 

  (a)

  மாறாது 

  (b)

  குறையும் 

  (c)

  அதிக அளவு உயரும் 

  (d)

  மிக குறைவான அளவு உயரும்  

 7. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்கனா வரைபடம் 

  (a)

  ஒரு நீள்வட்டம் 

  (b)

  ஒரு வட்டம் 

  (c)

  ஒரு நேர்க்கோட்டு 

  (d)

  ஒரு பரவளையம் 

 8. ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1, V1, T1, N) என்ற சமநிலை சமநிலையிலிருந்து (2P1, 3V1, T2, N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால்

  (a)

  T1 = T2

  (b)

  \({ T }_{ 1 }=\frac { { T }_{ 2 } }{ 6 } \)

  (c)

  \({ T }_{ 1 }=6{ T }_{ 2 }\)

  (d)

  \({ T }_{ 1 }=3{ T }_{ 2 }\)

 9. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும் 

  (a)

  நிறை 

  (b)

  எடை 

  (c)

  நிறை மையாம் 

  (d)

  நிலைமைத்திருப்புத்திறன் 

 10. பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?

  (a)

  W = O

  (b)

  Q = O

  (c)

  U = O

  (d)

  T = O

 11. நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

  (a)

  rms வேகம்

  (b)

  சராசரி வேகம்

  (c)

  சராசரித் திசைவேகம்

  (d)

  மிகவும் சாத்தியமான வேகம்

 12. வாயு ஒன்றின் வெப்பநிலை மற்றும் அழுத்ததை இருமடங்காக்கும்போது, அவ்வாயு மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைந்ததூரம் எவ்வாறு மாறுபடும்?

  (a)

  மாறாது

  (b)

  இருமடங்காகும்

  (c)

  மும்மடங்காகும்

  (d)

  நன்கு மடங்காகும்

 13. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது

  (a)

  நீள்வட்டம்

  (b)

  வட்டம்

  (c)

  பரவளையம்

  (d)

  நேர்கோடு

 14. அலையியற்றியின் தடையுறு விசையானது திசைவேகத்திற்கு நேர்தக்கவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு

  (a)

  kg m s-1

  (b)

  kg m s-2

  (c)

  kg s-1

  (d)

  kgs

 15. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

  (a)

  100Hz, 150Hz

  (b)

  150Hz,450Hz

  (c)

  450Hz, 700Hz

  (d)

  700Hz, 800Hz

 16. 6 x 2 = 12
 17. R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?

 18. \(\overrightarrow { A } =5\hat { i } -3\hat { j } ,\overrightarrow { B } =4\hat { i } +6\hat { j } \), வெக்டர்களை பக்கங்களைகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பினைக் கணக்கிடுக.

 19. கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு என்றால் என்ன?

 20. ஸ்கேலர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக

 21. பாராசூட் மெதுவாகக் கீழே விழுவதன் காரணம் என்ன?

 22. பல்வேறு வகையான நிலை ஆற்றைலைக் கூறுக. அதன சமன்பாடுகளை  வி்ளக்குக.

 23. 6 x 3 = 18
 24. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

 25. முடுக்கம் - வரையறு.

 26. ஒரு நியூட்டன் – வரையறு.

 27. திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?

 28. பிரௌனியன் இயக்கத்தினை விளக்குக.

 29. விம்மல்கள் ஏற்படுவதை விளக்குக.

 30. 5 x 5 = 25
 31. y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.

 32. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.

 33. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

 34. திறன் மற்றும் திசைவேகத்திற்காண கோவையை த் தருவி .அதற்க்கு சில உ தாரணங்கள் தருக

 35. சமநிலையின் வகைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Term II Model Question Paper )

Write your Comment