வேலை, ஆற்றல் மற்றும் திறன் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. \((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது  \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம் பெயர்கிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை 

  (a)

  9J

  (b)

  6J

  (c)

  10J

  (d)

  12J

 2. 80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1kg மற்றும் 2kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்

  (a)

  \(\sqrt { 2 } :1\)

  (b)

  \(1:\sqrt { 2 } \)

  (c)

  2 : 1

  (d)

  1 : 2

 3. 4m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல்

  (a)

  mv2

  (b)

  \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

  (c)

  2mv2

  (d)

  4mv2

 4. ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில்

  (a)

  ஆற்றல் மாற்றா  விசைக்கெதிராக  அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

  (b)

  ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

  (c)

  ஆற்றல் மாற்றா விசையின்  அமைப்பின்  மீது வேலை செய்யப்படுகிறது

  (d)

  ஆற்றல் மாற்றும் விசையினால்   அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

 5. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால்  செய்யப்பட்ட வேலை?

  (a)

  எப்போதும் எதிர்குறியுடையது

  (b)

  சுழி

  (c)

  எப்போதும் நேர்குறியுடையது

  (d)

  வரையறுக்கப்படாது

 6. ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை 

  (a)

  \(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

  (b)

  \(F=\beta x\)

  (c)

  \(F=-\beta x\)

  (d)

  \(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

 7. சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5ms-1 மற்றும் -9ms-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள்  முறையே

  (a)

  -4ms-1 மற்றும் 10ms-1

  (b)

  10ms-1 மற்றும் 0ms-1

  (c)

  -9ms-1 மற்றும் 5ms-1

  (d)

  5ms-1 மற்றும்  1ms-1

 8. x- அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x)=-kx +ax3 என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்குறி மதிப்புள்ள மாறிலிகள். x \(\ge\) 0 என்பதற்கு பொருளின்  நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம்

  (a)

  (b)

  (c)

  (d)

 9. ஒரு பொருள் தனது இயக்கத்தினால் கொண்டுள்ள ஆற்றல்__________எனப்படும்.

  (a)

  இயக்க ஆற்றல்

  (b)

  நிலை ஆற்றல்

  (c)

  ஆற்றல்களின் கூடுதல்

 10. வேலையின் பரிமாண வாய்ப்பாடு___________.

  (a)

  ML2T-2

  (b)

  ML2T-1

  (c)

  ML-1T-1

  (d)

  LT-2

 11. கிடைத்தளத்தில் உள்ள உராய்வற்ற மேசையின் மீதுள்ள மரக்கட்டையில், துப்பாக்கி கொண்டு மோதி, அதனுள் பொதிந்து விடுகிறது.கீழ்க்கண்டவற்றுள் எது மாறாதது?

  (a)

  உந்தமும் இயக்க ஆற்றலும்

  (b)

  இயக்க ஆற்றல் மட்டும்

  (c)

  உந்தம் மட்டும்

  (d)

  நிலை ஆற்றல் மட்டும்

 12. 1 hp=

  (a)

  746 W

  (b)

  846 W

  (c)

  756 W

  (d)

  748 W

 13. 1 Electrical unit = ___________.

  (a)

  1Wh

  (b)

  1kwh

  (c)

  1W

  (d)

  1mWh

 14. ஒரு பொருளின் உந்தம் p மற்றும் இயக்க ஆற்றல் E எனக் கொள்க. உந்தம் 2p  யாகும்போது அதன் இயக்க ஆற்றல் 

  (a)

  E/2

  (b)

  3E 

  (c)

  2E 

  (d)

  4E 

 15. பொருள் ஒன்றின் இயக்க நான்கு மடங்காகும் போது, அதன் உந்தம் 

  (a)

  2 மடங்காகும் 

  (b)

  3 மடங்காகும் 

  (c)

  4 மடங்காகும் 

  (d)

  மாறாது 

 16. மாறாத விசை \(\overrightarrow { F } =(10\hat { i } +10\hat { j } +20\hat { k } )N\) ஒரு பொருளின் மீது செயல்பட்டு, பொருளை  \(\overrightarrow { v } =(5\hat { i } -3\hat { j } +6\hat { k } ){ ms }^{ -1 }\)என்ற திசைவேகத்தில் இயங்கச் செய்தால், பொருளுக்கு கொடுக்கப்பட்ட திறன் 

  (a)

  200 Js-1

  (b)

  40 Js-1

  (c)

  140 Js-1

  (d)

  170 Js-1

 17. எஞ்சின் ஒன்று \(\overrightarrow { F } =(10\hat { i } +10\hat { j } +20\hat { k } )N\)என்ற விசையைக் கொடுக்கும் போது\(\overrightarrow { v } =(6\hat { i } +20\hat { j } -3\hat { k } ){ ms }^{ -1 }\)  என்ற திசைவேகத்தில் இயங்கினால், எஞ்சினின் திறன் 

  (a)

  45 W 

  (b)

  75 W 

  (c)

  20 W 

  (d)

  10 W 

 18. நீரை வெளியேற்றும் எஞ்சின் ஒன்று குழாய் வழியாக தொடர்ந்து நீரை வெளியேற்றுகிறது. குழாயிலிருந்து வெளியேறும் நீரின் திசைவேகம் v எனவும், குழாயின் ஓரலகு நீளத்தில் உள்ள நீரின் நிறை m எனவும் கொண்டால், நீருக்கு கொடுக்கப்படும் இயக்க ஆற்றலின் வீதம்?

  (a)

  1/2 mv3

  (b)

  mv3

  (c)

  1/2 mv2

  (d)

  1/2 m2v2

 19. 0.5 m/s திசைவேகத்தில்  செல்லும் A என்ற பொருளும் -0.3 m/s திசைவேகத்தில் செல்லும் B என்ற பொருளும் ஒரு பரிமாணத்தில் ஒன்றுக்கொன்று மீட்சி மோதலுறுகின்றன. மோதலுக்குப்பின் B மற்றும் A ன் திசைவேகங்கள் முறையே 

  (a)

  -0.3 m/s மற்றும் 0.5 m/s 

  (b)

  0.3 m/s மற்றும் 0.5 m/s 

  (c)

  -0.5 m/s மற்றும் 0.3 m/s 

  (d)

  0.5 m/s மற்றும் 0.3 m/s 

 20. m நிறை கொண்ட பொருள் ஒன்று v திசைவேகத்தில் இயங்குகிறது. இது நிலையாக உள்ள 2m நிறை பொருளின் மீது மோதலுறுகிறது. மோதலுக்குப் பின் நிலையாக இருந்த பொருளின் வேகம் 

  (a)

  2v/3

  (b)

  2v

  (c)

  v/3

  (d)

  3v

 21. ஒரு பொருளின் மீது புவியீர்ப்பு விசையால், எதிர் வேலை செய்யப்பட்டுள்ளது எனில், அதன்

  (a)

  நிலை ஆற்றல் அதிகரிக்கும்

  (b)

  இயக்க ஆற்றல் குறையும்

  (c)

  நிலை ஆற்றல் மாறாது

  (d)

  நிலை ஆற்றல் குறையும்

 22. தனி ஊசல் ஒன்று, ஒரு முழு அலைவில் செய்யும் வேலை

  (a)

  சுழி

  (b)

  \(\sqrt{mg}\)

  (c)

  mg cos \(\theta\)

  (d)

  mg sin \(\theta\)

 23. பொருள் ஒன்றின் மீது \(\left( 3\hat { i } +4\hat { j } \right) N\) விசை செயல்பட்டு \(\left( 3\hat { i } +4\hat { j } \right) m\) இடம்பெயரச் செய்தால், விசை செய்த வேலை

  (a)

  10J

  (b)

  12J

  (c)

  16J

  (d)

  25J

 24. முழு மீட்சி மோதலில் பொருள் அமைதி நிலைக்கு வந்தால் மீட்சியளிப்பு குணகத்தின் மதிப்பு 

  (a)

  1

  (b)

  சுழி

  (c)

  முடிவிலி 

  (d)

  -1

 25. பொருள் ஒன்றின் நிறை பாதியாக்கப்பட்டு, வேகம் இரு மடங்கானல், அதன் இயக்க ஆற்றல் 

  (a)

  2 மடங்காகும் 

  (b)

  4 மடங்காகும் 

  (c)

  8 மடங்காகும் 

  (d)

  மாறாது 

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் Unit 4 வேலை, ஆற்றல் மற்றும் திறன் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Physics Unit 4 Work, Energy And Power One Mark Question with Answer Key )

Write your Comment