வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. \((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது  \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை _______.

    (a)

    9J

    (b)

    6J

    (c)

    10J

    (d)

    12J

  2. 4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.

    (a)

    mv2

    (b)

    \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

    (c)

    2mv2

    (d)

    4mv2

  3. ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம், 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு _______.

    (a)

    0.1%

    (b)

    0.2%

    (c)

    0.4%

    (d)

    0.01%

  4. சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5ms-1 மற்றும் -9ms-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள்  முறையே_______.

    (a)

    -4ms-1 மற்றும் 10ms-1

    (b)

    10ms-1 மற்றும் 0ms-1

    (c)

    -9ms-1 மற்றும் 5ms-1

    (d)

    5ms-1 மற்றும்  1ms-1

  5. k என்ற விசை மாறிலி கொண்ட  ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது _______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } k\)

    (b)

    \(\frac { 3 }{ 2 } k\)

    (c)

    3K

    (d)

    6K

  6. 3 x 2 = 6
  7. ஒரு பெட்டி 25 N விசையினால் 15 m இடப்பெயர்ச்சி ஏற்படுமாறு இழுக்கப்படுகிறது. விசைக்கும் இடப்பெயர்ச்சிக்கும் இடையே உள்ள கோணம் 30° எனில் விசையினால் செய்யப்பட்ட வேலையைக் காண்க.

  8. ஆற்றல் மாற்றா விசை மற்றும் ஆற்றல் மாற்றும் விசைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக. ஒவ்வொன்றிற்கும் இரு உதாரணங்கள தருக.

  9. ஒரு துப்பாக்கி வினாடிக்கு 8 குண்டுகள் விதம் x என்ற இலக்கில் சுடப்படுகிறது. ஒவ்வொரு குண்டின் நிறை 3g மற்றும் அதன் வேகம் 600 ms-1 எனில் குண்டுகள் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக.

  10. 3 x 3 = 9
  11. 2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg m s-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன.
    (a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா?
    (b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

  12. 2 kg நிறையுள்ள ஒரு பொருள் இயக்க உராய்வுக் குணகம் 0.9 கொண்டுள்ள ஒரு பரப்பில் 20 N புறவிசையினால் 10 m தொலைவிற்கு நகர்த்தப்படுவதாகக் கருதுக. புறவிசை மற்றும் இயக்க உராய்வினால் செய்யப்பட்ட வேலை என்ன? முடிவைப் பற்றிய கருத்தைக் கூறுக
    (g = 10 m s-2 எனக் கொள்க)

  13. 1250 kg நிறையுள்ள ஒரு வாகனம் ஒரு சமமான நேர் சாலையில் 0.2 ms-2 முடுக்கத்துடன் 500 N என்ற எதிர்க்கும் புறவிசைக்கெதிராக இயக்கப்படுகிறது. வாகனத்தின் திசைவேகம் 30 m s-1 எனில் வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக.

  14. 2 x 5 = 10
  15. வேலை ஆற்றல் தத்துவத்தை கூறி விளக்குக.அதற்கு ஏதேனும் மூன்று உதாரணங்களை கூறுக 

  16. மீட்சியற்ற மோதல் என்றல் என்ன? அது மீட்சியற்ற இருந்து எவ்வாறு மாறபட்டது?அன்றாட வாழ்வில் மீட்சியற்ற மோதலுக்கு சில உதாரணங்களைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back Questions ( 11th Standard Physics - Work, Energy and Power Book Back Questions )

Write your Comment