வேலை, ஆற்றல் மற்றும் திறன் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  9 x 1 = 9
 1. \((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது  \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம் பெயர்கிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை 

  (a)

  9J

  (b)

  6J

  (c)

  10J

  (d)

  12J

 2. 4m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல்

  (a)

  mv2

  (b)

  \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

  (c)

  2mv2

  (d)

  4mv2

 3. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால்  செய்யப்பட்ட வேலை?

  (a)

  எப்போதும் எதிர்குறியுடையது

  (b)

  சுழி

  (c)

  எப்போதும் நேர்குறியுடையது

  (d)

  வரையறுக்கப்படாது

 4. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

  (a)

  v

  (b)

  v2

  (c)

  v3

  (d)

  v4

 5. k என்ற விசை மாறிலி கொண்ட  ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது

  (a)

  \(\frac { 2 }{ 3 } k\)

  (b)

  \(\frac { 3 }{ 2 } k\)

  (c)

  3K

  (d)

  6K

 6. வேலையின் பரிமாண வாய்ப்பாடு___________.

  (a)

  ML2T-2

  (b)

  ML2T-1

  (c)

  ML-1T-1

  (d)

  LT-2

 7. 1 hp=

  (a)

  746 W

  (b)

  846 W

  (c)

  756 W

  (d)

  748 W

 8. M நிறை கொண்ட பொருள் ஒன்றின் உந்தம் p எனவும், இயக்க ஆற்றல் E எனவும் கொண்டால், அவற்றிற்கிடையேயான தொடர்பு 

  (a)

  p=\(\sqrt{2ME}\)

  (b)

  \(p=\frac { \sqrt { 2E } }{ M } \)

  (c)

  \(E=\sqrt { \frac { { p }^{ 2 } }{ M } } \)

  (d)

  எதுவும் இல்லை 

 9. எஞ்சின் ஒன்று \(\overrightarrow { F } =(10\hat { i } +10\hat { j } +20\hat { k } )N\)என்ற விசையைக் கொடுக்கும் போது\(\overrightarrow { v } =(6\hat { i } +20\hat { j } -3\hat { k } ){ ms }^{ -1 }\)  என்ற திசைவேகத்தில் இயங்கினால், எஞ்சினின் திறன் 

  (a)

  45 W 

  (b)

  75 W 

  (c)

  20 W 

  (d)

  10 W 

 10. 8 x 2 = 16
 11. ஒரு பெட்பெட்டி 25 N விசையினால் 15 m இடப்பெயர்ச்சி ஏற்படுமாறு இழுக்கப்படுகிறது. விசைக்கும் இடப்பெயர்ச்சிக்கும் இடையே உள்ள கோணம் 30° எனில் விசையினால் செய்யப்பட்ட வேலையைக் காண்க

 12. m நிறையுள்ள ஒரு பொருள் தரையிலிருந்து vo என்ற தொடக்க வேகத்துடன் எறியப்படுகிறது. h உயரத்தில் அதன் வேகத்தைக் காண்க

 13. இயற்பியலில் வேலையின் வரையறையானது பொதுக்கருததிலிருந்து எவ்வாறு  மாறுபடுகிறது என்பதை  விளக்குக

 14. மீட்சி மற்றும் மீட்சி்யற்ற மோதலின்  சிறப்பியல்புகளை வி்ளக்குக

 15. மிட்சி மற்றும் மிட்சியற்ற மோதலின் சிறப்பியகளை விளக்குக

 16. வரையறு: இயக்க ஆற்றல் 

 17. இயக்க ஆற்றல் குறிப்பு வரைக.

 18. ஓய்வுநிலையில் உள்ள 10 kg நிறை கொண்ட பொருள் 16N. விசைக்கு உட்படுத்தப்படுகிறது. 10s முடிவில் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. 

 19. 5 x 3 = 15
 20. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g=10 m s-2) எனில்
  a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
  b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
  c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
  d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

 21. 2 kg நிறையுள்ள ஒரு பொருள் இயக்க உராய்வுக் குணகம் 0.9 கொண்டுள்ள ஒரு பரப்பில் 20 N புறவிசையினால் 10 m தொலைவிற்கு நகர்த்தப்படுவதாகக் கருதுக. புறவிசை மற்றும் இயக்க உராய்வினால் செய்யப்பட்ட வேலை என்ன? முடிவைப் பற்றிய கருத்தைக் கூறுக
  (g = 10 m s-2 எனக் கொள்க)

 22. 1250 kg நிறையுள்ள ஒரு வாகனம் ஒரு சமமான நேர் சாலையில் 0.2 ms-2 முடுக்கத்துடன் 500 N என்ற எதிர்க்கும் புறவிசைக்கெதிராக இயக்கப்படுகிறது. வாகனத்தின் திசைவேகம் 30 m s-1 எனில் வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக

 23. ஆற்றல் மாற்றும் விசையினை விவரி.

 24. 500 g நிறையுள்ள ஒரு பொருள் தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. பின் கிடைத்தள விசை 1N ஆல் இயங்குகிறது. 20S ல் விசையால் செய்யப்பட்ட வேலை என்ன? இது இயக்க ஆற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு சமம் எனக்காட்டு.  

 25. 2 x 5 = 10
 26. மாறா விசை மற்றும் மாறும் விசையால் செய்யப்ட்ட வேலைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை வரைபடங்களுடன் விளக்குக

 27. மீட்சியற்ற மோதல் என்றல் என்ன? அது மீட்சியற்ற இருந்து எவ்வாறு மாறபட்டது?அன்றாட வாழ்வில் மீட்சியற்ற  மோதலுக்கு  சில உ தாரணங்களைக் கூறுக 

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Work, Energy and Power Model Question Paper )

Write your Comment