11th Second Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  3. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  4. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  5. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  6. உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    நெறிமுறை

    (d)

    வரையறை

  7. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
    1 u := v
    2 v := u

    (a)

    u, v = 5, 5

    (b)

     u, v = 10, 5

    (c)

    u, v = 5, 10

    (d)

    u, v = 10, 10

  8. ஃபிபோனாச்சி எண்ணைப் சுழற்சியின்படி பின்வருமாமாறு வரையறுத்தால்
    \(F(n)=\left\{ \begin{matrix} 0 & n=0 \\ 1 & n=1 \\ F(n-1)+F(n-2) & otherwise \end{matrix} \right\} \)
    (குறிப்பு : ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை. எடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21...) இல்லையென்றால் F(4)யை மயை மதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும்?

    (a)

    3

    (b)

    4

    (c)

    9

    (d)

    8

  9. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?

    (a)

    $

    (b)

    #

    (c)

    &

    (d)

    !

  10. void தரவினம் எத்தனை முக்கிய நோக்கங்கள் கொண்டது?  

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    பல 

    (e)

    ஒன்றே ஒன்று 

  11. பின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.
    (i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.
    (ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.
    (iii) int x[2] [] {10, 20} என்பது சரியான எடுத்துகாட்டு.
    (iv ) cin,get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும். 

    (a)

    i-தவறு, ii-சரி, iii-சரி, iv-சரி

    (b)

    i-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி

    (c)

    i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி

    (d)

    i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-தவறு

  12. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை?

    (a)

    இனக்குழு 

    (b)

    மிதவை 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  13. எத்தனை வழிகளில் அளபுருக்களை ஏற்கும் ஆக்கியைப் பயன்படுத்திப் பொருளை உருவாக்க முடியும்? 

    (a)

    1

    (b)

    3

    (c)

    2

    (d)

    பல 

  14. பின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது என கண்டுபிடிக்கவும்.
    (i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசைமுகத்தையும் மாற்ற இயலும்.
    (ii) புதிய செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்
    (iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல்முறையை மறுவரையறை செய்ய முடியும்.
    (iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுக்களை கொண்டிருக்காது. 

    (a)

    i - சரி, ii-சரி, iii-சரி, iv-சரி

    (b)

    i - தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி

    (c)

    i - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி

    (d)

    i - சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு

  15. அடிப்படை இனக்குழுவின் பண்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று, ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த வேண்டும்?   

    (a)

    private 

    (b)

    public

    (c)

    protected

    (d)

    இவையனைத்தும்

  16. 6 x 2 = 12
  17. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  18. (1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :

  19. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  20. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

  21. செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?

  22. If-else க்கு மாற்றான செயற்குறியை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  23. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  24. char str[2]={'5', '+', 'A', 'B'}; என்ற கூற்று ஏன் தவறானது?

  25. நகல் ஆக்கி என்பது என்ன? அதன் பயன் யாது?

  26. 6 x 3 = 18
  27. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  28. ISCII குறிப்பு வரைக.

  29. நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.

  30. p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது  காண்பி.

  31. தொடரியல் பிழை (Syntax error ) மற்றும் இயக்க நேர பிழை (Run time error ) இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  32. பயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?        

  33. கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.

  34. கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
    #include <iostream>
    using namespace std;
    class Box
    {
       double width; ..(i)
    public;
        double length;
    void printWidth( ) ...(ii)
        {
        cout << "\n The Width of the box is.." << width;
    }
    void setWidth( double w);
    };
    void Box : : setWidth(double w) ..iii
    {
    width=w;
    }

  35. மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்? 

  36. 5 x 5 = 25
  37. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  38. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  39. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  40. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  41. அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.

  42. கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  43. குறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  44. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  45. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

  46. கீழ்காணும் நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து பிழைதிருத்தம் செய்க,
    வெளியீடு
    -------------
    15
    14
    13
    நிரல் :
    -------------
    %include < iostream.h >
    #include
    Class A
    {
    public;
    int a1,a2:a3;
    Void getdata[]
    {
    a1=15;
    a2=13;a3=13;
    }
    }
    Class B:: public A()
    {
    PUBLIC
    voidfunc()
    {
    int b1:b2:b3;
    A::getdata[];
    b1=a1;
    b2=a2;
    a3=a3;
    cout< }
    void main()
    {
    clrscr()
    B der;
    der1:func();
    getch();
    }

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Science Model Question Paper 2019 )

Write your Comment